Tuesday, 10 February 2015

எட்டைத் தொட்டால் எல்லாம் கருகும்


ஜாதகர்க்கு எதிர்பாராமல் கிடைக்கும் சட்டவிரோதமான பணம், மரணம், அதன் மூலம் கிட்டும் காப்பீட்டு பணமும், வலி, வேதனை, , துரதிஷ்டம், போராட்டம், உடல் உறுப்பு பழுது, ஜாதகரின் பொருள் திருடப்படல், தெய்வக்குற்றம், தெய்வ அருள் கிட்டாத நிலை, ஜாதகரின் அதர்ம சிந்தனை, அவமானம், கெட்ட பெயர், இறையருள் இல்லாததால் அதிகமாக உழைத்து பணம்பெறமுடியால் போவது. ஜாதகரின் திறமை வெளிச்சத்துக்கு வரமுடியாமல் போவது, தற்கொலை, கொலை, துர்மரணம், கொள்ளை, எதிரிகள் தொல்லை, எல்லாவித் தடைகள், வீண்பழி, நட்டம், சீதனம், வஞ்சம், அறுவை சிகிச்சை, சக்திக்கு மீறின பெருங்கடன், அதிக கோபம், இளமையில் தந்தையை இழப்பது, இயற்கை சிற்றங்கள், போர், ஆயுள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், பிறர் பொருளை அபகரிப்பது, எதிர்பாராமல் நடைபெறும் அனைத்து செயல்களும், ஒரே நேரத்தில் வரும் பல நோய்கள், நாள்பட்ட நோய்கள், எதிர்பாராமல் நடைபெறும் எல்லாவிதமான நன்மை, தீமையான் சம்பவங்கள், தெய்வநிந்தனை, மறு பிறப்பின்மை, செயற்கை மரணம், நீரில் மூழ்கிய மரணம், நெருப்பு ஆபாயம், பழி, தேடாத செல்வ்ம், கசாப்புக்காரன், பஞ்சம், நிலநடுக்கம், பற்றாக்குறை ஆகியவைகளைக் குறிக்கும்.
உடல் கூறில் எட்டாமிடம் பாலின உறுப்புகள். மண்ணீரல், மலக்குழி, மர்மக்குழி, வயிற்றுப்பகுதி எலும்புகளைக் குறிக்கும்
பொதுவான நோய்கள். மூத்திரப்பையில் கல் அடைப்பு, பிறப்புறுப்பு நோய்கள், கர்ப்பப் பைக்கு செல்லும் பாதையில் அடைப்பு, பெண்நோய்,எய்ட்ஸ், மாதவிடாய் கோளாறு, விந்தணு பிரச்சனை, வலிப்பு நோய், வாதம், பேச்சுக்கோளாறுகள், கால்களில் நோய் முதலிய மறைமுக நோய்கள் ஏற்படும்.
பரந்துபட்ட பன்னிரண்டு இராசிமண்டலத்தின் 108 பாத நட்சத்திர மண்டலமாகும். ஒரு பாவகத்தில் உள்ள முப்பது டிகிரி என்பது, 9 நட்சத்திர பாத மண்டலம் ஆகும். இந்த ஒன்பது பாதத்துக்குள் தான் முப்பதுடிகிரியே உள்ளது.
இப்போது எட்டாம் பாவத்துக்குள்ளும் ஒன்பது நட்சத்திர பாதம் உள்ளது அல்லவா? எட்டாம் பாவம் தீமையைத் தருகிறது என்றால் , அதற்குள் இருக்கும் ஒன்பது நட்சத்திரப் பாதமும் தீமையானது அல்லவா? எட்டாம்வீட்டிற்குள் இருக்கும் இரண்டே கால் நட்சத்திரங்கள், யோகரின் நட்சத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு தீமையைத்தான் தரும்
 இலக்கினம் என்பது ஜாதகரைக் குறிக்கும் என்பதால், இலக்கினத்திற்கு இரண்டாமிடம் “ஜாதகரின் குடும்பம்” என்றும், மூன்றாமிடம் , “ ஜாதகரின் வீரியம், வெற்றி” என்பதைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். அதேபோல், ஏழாமிடம் என்பது, ஜாதகரின் மனைவியை” க் குறிக்கும் என்றால், எட்டாமிடம், ஜாதகரின் ஆயுளை” க் குறிக்கும் அல்லவா?
இப்போது ஒருவரின் ஆயுளை அறியவேண்டுமென்றால், அந்த ஜாதகரின் எட்டாமிடத்தையும், அந்த இடத்தின் அதிபதியையும், அந்த அதிபதி அமர்ந்துள்ள இடத்தையும், அவரோடு கூடிய கோள்களையும், மற்றும் ஆயுள்காரகனையும் பார்த்தால் போதுமானது.
எட்டுக்குடையக் கோள் இலாபத்தில் இருந்தால், ஆயுளுக்கு இலாபம் என்று அர்த்தமாகிறது. அப்படியென்றால், ஆயுள் அதிகம். அதுவே, எட்டுக்குடையவன் விரையவீட்டில் இருந்தால், குருபோன்ற நல்லக்கிரகங்கள் பார்த்தால், ஆயுள் அதிகம். இல்லையென்றால், ஆயுள் விரையமாகும். இப்படி காரகங்களைப் பாவகங்களுடன் பொருத்திப் பார்க்கவும்.
எட்டுக்குடையவன், இலாபவீட்டில் இருந்து, இலக்கினாதிபதியும், சனியும் கேந்திர திரிகோணவீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆயுள் நூறைத் தாண்டும் எனக்கூறி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
நம்மில் பலருக்கு வாயுத் தொல்லை இருக்கும். அதனால், மூச்சுப்பிடிப்பும், வாயு பிரியாமல் கடும் அவஸ்தைப் படுவதையும் கண்டுள்ளோம். இதற்கான காரணங்கள் ஏதென்று சிந்திக்கும் போது, இராசியை நான்கு பூதங்களாய் நம் முன்னோர்கள் பிரித்து இருப்பதைக் காண்பீர்கள். அது என்னவென்றால்,
நெருப்பு இராசிகள்.
மேடம், சிம்மம், தனுசு எனும் கிழக்குராசிகள் அனைத்தும் நெருப்பு ராசிகளாகும்.
நிலராசிகள்.
இரிடம், கன்னி, மகரம் எனும் தெற்குராசிகள் அனைத்தும் நிலராசிகளாகும்.
காற்று ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் எனும் மேற்கு ராசிகள் அனைத்தும் காற்றுராசிகளாகும்.
நீர்ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் எனும் வடக்குராசிகள் அனைத்தும் நீர்ராசிகளாகும்.
இப்போது காற்றுக் கிரகங்களான, புதன், சுக்கிரன், சனி ஆகியவைக் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, வாயுத் தொல்லையால் ஜாதகர் பாதிக்கப்படுவார்.
ஆயுள்ஸ்தானாதிபதியானவன் நோய்களைக் குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்திருக்க, ஜாதகரைக் குறிக்கும் இலக்கினாதிபதியும், ஆறாமதிபதியும் மேற்கூறிய காற்றுக் கிரகங்களில் ஏதோவொருக் கிரகத்துடன் கூடி எட்டில் அமர்ந்திருக்க, ஜாதகனுக்கு வாயுவால் தொல்லை ஏற்படும்.
ஒன்று, ஆறு, எட்டு இம்மூன்று அதிபதிகளுடன், புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றுக் கிரகங்களில் ஒன்று ஏதேனும் ஒருவகையில், ஆறு, எட்டாமிடங்களில் தொடர்பு கொண்டால் வாயுத் தொல்லை இருக்கும்.
அண்டவாயு, பக்கவாயு, ஓரண்டவாயு, மற்றும் கர்ப்பவாயு என உள்ளன. இதிலொன்று ஜாதகர்க்குப் பாதிப்பைத் தரும்

காலபுருடனின் எட்டாமிடம் என்பது, ஆயுளை மட்டும் குறிப்பதில்லை. அதற்கு பல காரகங்கள் உண்டு என்று, முதல் கட்டுரையிலே, எட்டாமிடத்திற்கானக் காரகங்களைத் தொகுத்து வழங்கினேன். காலபுருடனின் உடற் கூறுகளில், இந்த இடம், ஆண்,பெண் இருபாலருக்கான “பிறப்புறுப்புகளை”க் குறிக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமற்று, ஆறு, எட்டாமிடங்களில் இருக்க, ஆறு, எட்டாமிட அதிபதிகளில் ஒருவருடன் சனி தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகன் மிதமிஞ்சிய போகத்தினால் பலமற்று மரணமடைவான். இவர்கள் வசியமருந்தால் பாதிக்கப்பட்டு இறப்பார்கள்.
ஆணுக்கோ, பொண்ணுக்கோ வீரியத்தையும், தெம்பைத் தரும் மூன்றாமதிபதியும், கணவனையோ, மனைவியையோ தரும் ஏழாமதிபதியும் தொடர்பு கொண்டு விரையஸ்தானத்தில் இருக்க, அதிகப்படியான வீரியத்தையும், சக்தியையும் இழந்து பலமற்றவனாய் போவான்.
சுக்கிரனும் பிறப்புறுப்பிற்கு உரியவனான எட்டாமதிபதியும் கூடி, ஆறாமிடத்தில் இருக்க, அதிகப்படியான போகத்தால் உடல்பலமற்றுப் போவான்.
இதைத்தான் காலப்புருடனின் பிறப்புறுப்புக் காரகனான எட்டாமதிபதி செவ்வாயும், காலபுருடனின் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபதி சுக்கிரனும், வீரியஸ்தானத்திலும், நோயைக் குறிக்கும் ஆறாமிடத்திலும், மறைவிட உடலுறுப்புகள் பழுதைக் குறிக்கும் எட்டாமிடத்திலும், மற்றும் படுக்கை உறக்கத்தைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்திலும் கூடக்கூடாது. அவர்கள் ‘அதீத உடல் இன்பப் பிரியர்களாக” இருப்பார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் எட்டாமதிபதியும், ஏழாமதியும் கூடுவதோ, காண்பதோ மற்றும் சாரம் வழங்கிக் கொள்வதோ கூடாது. இது போன்ற அமைப்பில் இருந்தால், அவர்கள், “செக்ஸ் வெறியராக” இருப்பார்கள்

No comments:

Post a Comment