லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் தரும் பலன்கள் :
சாய கிரகங்கள் ஆனா ராகு கேது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்த பாவகத்தின் தன்மையை தானே ஏற்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது பொது விதி, மேலும் குறிப்பிட்ட பாவகதில் அமர்ந்த கிரகங்களுக்கோ, பார்த்த கிரகங்களுக்கோ தனிப்பட்ட வலிமை கிடையாது என்பது அவர்கள் தரும் யோக அவயோக பலன்களை சாய கிரகங்களே ஏற்று நடத்துவார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று, இதன் அடிப்படையில் கும்ப லக்கினத்தில் ராகு பகவான் அமர்கிறார், இவர் அமர்ந்த இடத்திற்கு உண்டான பலன்களை தானே முழுவதும் ஏற்று நடத்துகிறார், கும்பம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதும், ஸ்திர காற்று தத்துவமாக அமைவதும், ஜாதகருக்கு அளவில்லா அறிவாற்றலை வாரி வழங்கியது, மேலும் தன்னம்பிக்கை சுய கட்டுபாடு, சிறந்த ஒழுக்கம் மற்றும் பண்பாடு, எதையும் தனது அறிவுக்கு உற்படுத்தி சிந்திக்கும் தன்மை, பரந்த மனப்பக்குவத்தையும் ராகு பகவானால் ஜாதகர் பெறுகிறார்.
லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையையே தருகிறார், நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த அறிவு திறன், கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், தங்கு தடையின்றிய உயர் கல்வி, கற்ற கல்வியின் அடிப்படையில் சுய வேலைவாய்ப்பை பெரும் யோகம், சுய தொழில் மூலம் விருத்தி பெரும் தன்மை, ஒருவருக்கு அடிமைபடாமல் சுயமாக பலருக்கு வேலை வாய்ப்பை நல்கும் தன்மை, தனது செயலும் எடுக்கும் முயற்சியும் தனது சுய முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் செயல்படும் அமைப்பு, சமயோசித புத்திசாலித்தனம், வருமுன் அறிந்துகொண்டு எந்த ஒரு பிரச்சனையையும் சாமாளிக்கும் மன தைரியம், எதற்கும் அஞ்சாத மன நிலை என்ற வகையில் ராகு பகவான் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குகிறார்.
பொதுவாக ராகு லக்கினத்தில் அமர்வது ஒரு கெடுதலான விஷயமாகவே பாரம்பரிய ஜோதிடம் கருதும், இந்த ஜாதகத்தில் அந்த கருத்து உடைபடுகிறது, உண்மையில் ஜாதகரின் முன்னேற்றத்திற்கும், தடையில்லாத வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கும் அடிப்படை காரணமாக இருப்பதே ராகு பகவான்தான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் எதற்காக பிறந்தாரோ அதற்க்குண்டான சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுப்பதே சாய கிரகமான ராகு பகவான்தான் என்ற ஒரு விஷயத்தை இங்கு மறுப்பதற்கு வாய்ப்பில்லை, பொதுவாக காற்று தத்துவ அமைப்புடன் ஒன்று சேரும் பொழுது ராகு பகவானின் வீரியம் என்பது மிகுந்து காணப்படும், இது நல்ல நிலையில் இருந்தால் பல ஆக்கபூர்வமான செயல்களுக்கும், பல புதிய கண்டு பிடிப்புகளுக்கும் சொந்தகாரக உரிமை கொண்டாடும் யோகத்தை தந்துவிடும், இந்த ஜாதகரின் தன்மையும் அப்படி பட்டதே, ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்புகளை பல புதிய நடைமுறைகளை கையாண்டு, பல வெற்றிகளை குவித்துக்கொண்டு இருப்பது கவனிக்க தக்கது.
ஜாதகரின் நிர்வாக திறமையை கண்டும், ஜாதகர் தான் செய்துவரும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை கண்டும் மூக்கின் மேல் விரல் வைக்காத நபர்களே இல்லை எனலாம், இதற்க்கெல்லாம் ஜாதகர் கற்ற கல்வியும் அதன் வழியில் செயல்படும் ஜாதகரின் அறிவாற்றலும், புதிய யுக்திகளுமே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் உயரிய நோக்கம் கொண்டாதாக இருக்கின்றது, இதன் அடிப்படையில் ஜாதகரின் வெற்றிகள் பரிணமிக்கின்றது, ஜாதகர் என்ன நினைக்கிறாரோ அதை தங்கு தடையின்றி பெறுகிறார், தனது எண்ணம் போல் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொண்டு யோக வாழ்க்கையை பெறுகிறார்.
இங்கே லக்கினத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதின் முழு பலன்களையும் அனுபவிக்க வைக்கிறார், காரணம் ஜாதகரின் லக்கினம் என்பது கால புருஷ தந்துவ அமைப்பிற்கு 11ம் பாவகமாக வருவதே, ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 11ம் பாவகத்தை வைத்து ஜாதகர் எதற்க்காக இந்த பிறவியை பெற்றார் என்பதை 100 % உணரமுடியும், இந்த ஜாதகருக்கு லக்கினம் என்பதே 11ம் பாவகமாக அமைவதாலும், சுய ஜாதகத்தில் 11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், கவனிக்க தக்கது, ஜாதகர் தனது வாழ்க்கையை நீடித்த அதிர்ஷ்ட அமைப்பில் வாழ பிறந்தவர் என்பது உறுதியாகிறது, இதை நடைமுறைக்கு கொண்டு வருபவர் லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் என்பது கூடுதலான விஷயம் ஏனெனில், நவ கிரகங்களில் அதிக வலிமை பெற்றவர் ராகு பகவானே என்பது எவராலும் மறுக்க இயலாது.
இந்த ஜாதகத்தில் ராகு பகவான் 100% விகித யோக பலன்களையே இலக்கின வழியில் இருந்து தங்கு தடையின்றி வாரி வழங்குகிறார்.
ஏழாம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான் தரும் பலன்கள் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மத்தில் அமர்ந்த கேது பகவான் ஜாதகருக்கு வழங்கு பலன்களை இங்கே சிந்திப்போம் அன்பர்களே!கும்ப லக்கினத்திற்கு கேந்திர பாவகமான 7ம் பாவகத்திர்க்கு, கேந்திர அதிபதியாக சூரியனே பொறுப்பேற்கும் காரணத்தால், இங்கு அமரும் கேது பகவானும் 100% யோக பலன்களையே வழங்கும் தன்மைக்கு ஆளாகிறார், மேலும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவ ராசியாக வருவதாலும், இங்கு அமரும் சாய கிரகமான கேதுபகவான் தனது கட்டுபாட்டில் 7ம் பாவகத்தை எடுத்து கொள்வதாலும், ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து கேது பகவான் மூலம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை பெறுகிறார், குறிப்பாக ஜாதகர் பொதுமக்கள், நண்பர்கள், தொழில் முறை கூட்டாளிகள், பொது ஜன உறவுகள், வியாபாரம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமான வாய்ப்புகள் என்ற வகையில் இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும் அமைப்பிற்கு கேது பகவானே பொறுப்பேற்கிறார்.
இறை அருளின் கருணையை பரிபூரணமாக ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை இங்கே கேது பகவான் தங்கு தடையின்றி வாரி வழங்குகிறார், பொதுமக்களிடம் நர்ப்பெயரும், நன்மதிப்பும் பெறுவதற்கு அடிப்படை காரணமாக கேது பகவானே செயல் புரிகிறார், ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக நிர்ணயம் செய்பவர்கள் அந்த ஜாதகருக்கு அமையும் 1) ஆசிரியர், 2) நண்பர்கள், 3) தொழில் முறை கூட்டாளிகள், 4) வாழ்க்கை துணைவர் என்றால் அது மிகையில்ல, மேற்கண்ட நல்ல நபர்களை ஜாதகரின் வாழ்க்கையில் சரியான காலத்தில், சரியான சந்தர்பத்தில் இணைத்து வைக்கும் வேலையை செவ்வனே செய்பவர் கேது பகவானே என்றால் அது மிகையில்லை, இதன் காரணமாக ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களையே அனுபவிக்கிறார்.
ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழில் என்றாலும் சரி, வியாபாரம் என்றாலும் சரி தங்கு தடையின்றிய வெற்றி வாய்ப்பை குறிக்கும் 7ம் பாவகம் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது அவசியம், ஏனெனில் நம்மில் பலருக்கு பல தனிப்பட்ட திறமைகள் இருக்கும், புதிய சிந்தனைகள் இருக்கும், இவை யாவும் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டும், அப்படி வலிமை பெரும் பொழுதே ஜாதகரின் தனி திறமைகளும், புதிய செயல்பாடுகளையும் உலகம் கூர்ந்து கவனிக்கும், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் இல்லை எனில் ஜாதகரின் திறமைகள் யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பிரகசிக்காமல் போய்விடும், இந்த ஜாதகத்தில் கேதுபகவான் 7ம் பாவகத்தில் அமர்ந்து, எவ்வித பாகுபாடும் இன்றி அனைவராலும் ஜாதகர் கவனிக்க படுகிறார், ஜாதகரின் வியாபர அமைப்பிற்கு முழு அங்கீகாரம் கிடைக்கிறது, இதன் காரணமாக ஜாதகரின் திறமைகள் யாவும் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் யோகத்தை தருகிறது.
எனவே அன்பர்களே சுய ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு கேது அமர்வதை கண்டு அது தோஷம் தரும் என்று சொல்லும் வார்த்தையை நம்பி, தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தாங்களே தடை கற்களாக மாறி விடாதிர்கள், பொதுவாக லக்கினத்தில் அமரும் சாய கிரகங்களான ராகு கேது இருவருமே லக்கினத்திற்கு 100% யோகத்தையே வாரி வழங்குவார்கள், நேரெதிராக 7ம் பாவகத்தில் அமரும் சாய கிரகங்களான ராகு கேதுவின், தன்மையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு நன்மையை தருகின்றனவா ? தீமையை தருகின்றனவா ? என்று தெரிந்துகொண்டால் போதும், சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று பயம் கொள்ள தேவையில்லை, நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதில் சாய கிரகங்களான ராகு கேதுவின் உண்மை வலிமையை நாம் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்.

No comments:
Post a Comment