Wednesday, 18 February 2015

வாஸ்துப்படி வீட்டில் உள்ள அறைகளுக்கு வண்ணம்

அனைவருக்குமே வாஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஏதேனும் சம்பந்தம் இல்லாமல் அசம்பாவிதம் நடந்தால், உடனே அனைவரது மனதிலும் முதலில் தோன்றுவது "வாஸ்து சரியில்லையோ?" என்னும் வார்த்தை தான். அந்த வாஸ்து சமையலறை, படுக்கை அறை, கழிவறை போன்றவை அமைய வேண்டிய இடத்திற்கு மட்டுமின்றி, அந்த அறைகளுக்கு தீட்டும் வண்ணத்திலும் தான் உள்ளது.

ஆம், வாஸ்துப்படி வீட்டில் உள்ள அறைகளுக்கு வண்ணம் தீட்டினால், மனம் அமைதி பெறுவதோடு, சுற்றி இருக்கும் சூழ்நிலை நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் வீட்டில் இருக்க பிடிக்காதவர்களும், வாஸ்துப்படி வீட்டிற்கு வண்ணம் தீட்டினால், வீட்டின் சூழ்நிலை பிடித்து விடுவதோடு, வீட்டை விட்டு வெளியே செல்லவே மனம் வராது. ஆகவே வீட்டிற்கு வாஸ்துப்படி வண்ணம் தீட்ட ஆசைப்பட்டால், இந்த கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மன அமைதியுடன், உடல் ஆரோக்கியமாகவும், எப்போதும் சந்தோஷத்துடனும் இருக்கலாம்.

இப்போது வாஸ்துப்படி வீட்டில் உள்ள அறைகளுக்கு என்ன வண்ணம் தீட்ட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வீட்டின் ஹாலில்

தீட்டப்பட்டிருக்கும் வண்ணம் தான் ஒருவரின் பர்சனாலிட்டியைப் பிரதிபலிக்கும். எனவே வாஸ்துப்படி வீட்டின் ஹாலுக்கு மஞ்சள், நீலம், பச்சை, பழுப்பு நிறம் போன்றவற்றை தீட்டினால், அவை கண்களுக்கு இதமாக இருப்பதோடு, வீடும் அழகாகக் காணப்படும்.

படுக்கை அறை

படுக்கை அறை தான் நாம் நாமாக இருக்கக்கூடிய ஒரு இடம். இந்த இடத்திற்கு மனதிற்கு இதத்தைக் கொடுக்கும் மற்றும் வெளிர் நிற பெயிண்ட்டுகளை தீட்டினால், நன்றாக இருக்கும். அதிலும் வாஸ்துப்படி படுக்கை அறைக்கு பிங்க், வெளிர் நீலம் மற்றும் வெளிர் பச்சை வண்ணங்களை அடிப்பது நல்லது. அதிலும் குழந்தைகளின் படுக்கை அறைக்கு பச்சை நிறம் மிகவும் சிறந்தது.

சமையலறை

பெண்கள் பெரும்பாலும் சமையலறையிலேயே இருப்பதால், அங்கு வாஸ்துப்படி அழகான நிறங்களான வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ் பிங்க், சாக்லெட் மற்றும் சிவப்பு நிற பெயிண்ட்டுகளை அடிப்பது சிறந்ததாக இருக்கும்.

டைனிங் அறை

உணவு உண்ணும் அறைக்கு வாஸ்துப்படி பெயிண்ட் அடிக்க நினைத்தால், வெளிர் நிறங்களைத் தான் அடிக்க வேண்டும். அதிலும் பிங்க், பச்சை மற்றும் நீலம் போன்றவற்றை அடித்தால், உண்ணும் போது புத்துணர்ச்சியானது அதிகரிக்கும். முக்கியமாக, டைனிங் அறைக்கு வெள்ளை, கருப்பு அல்லது கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களை அடிக்க வேண்டாம்.

குளியலறை

குளியலறைக்கு வாஸ்துப்படி பெயிண்ட் அடிக்க நினைத்தால், எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றத்தைத் தரும் நிறங்களான வெள்ளை, வெளிர் நீலர் மற்றும் வெளிர் பச்சை போன்றவற்றை தேர்ந்தெடுத்து அடித்தால், குளியலறை அழகாகவும் பெரியதாகவும் காணப்படும். ஆனால் குளியலறைக்கு கருப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்தை தீட்டினால், குளியலறை எப்போம் இருட்டாக மற்றும் மங்கலான தோற்றத்தையே கொடுக்கும்.

விருந்தினர் அறை

வீட்டிற்கு வரும் விருந்தினரை மனம் வருத்தப்படாதவாறு உபசரிப்பது தான் தமிழ் கலாச்சாரம். எனவே அந்த கலாச்சாரத்தில் பிறந்த நாம் எப்போதும் நம்மைப் பற்றி யோசிக்காமல், வீட்டிற்கு வந்த தங்கும் விருந்தனரின் அறையையும் அவர்கள் சந்தோஷமாக இருக்கக்கூடியவாறான வெளிர் நிறங்களை அடித்தால், விருந்தினர்களின் மனதில் நல்ல இடத்தைப் பெற முடியும். அதற்கு மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு அல்லது லாவெண்டர் நிற பெயிண்ட்டுகளை அடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment