Wednesday, 18 February 2015

மாங்கல்ய தோஷம்

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் முக்கியம் கிடையாது.அதைவிட மிக முக்கியமானது ஜாதக கட்டத்தை இணைத்து பார்ப்பதுதான்.கட்டப்பொருத்தம் சரியாக இருந்தால்தான் இல்லறவாழ்வு இனிமையாக அமையும்.

ஜாதக கட்டத்தில் ஆணுக்கு 8-மிடத்தையும்,பெண்ணுக்கு 7,8-மிடங்களையும் பார்க்க வேண்டும்.லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும்.ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும்.

பெண் ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்கிரன்,சனி,சூரியன்,ராகு,கேது பொன்ற கிரகங்கள் இருந்தால் களத்திர தோசத்தையும்,8-மிடத்தில் ராகு,கேது,சனி,சூரியன்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோசத்தையும் கொடுக்கும்.7,8 மிடம் பலமாக இருந்தாலும்,சுப கிரகமான குரு பார்த்தாலும் தோச நிவத்தியாகும்.

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

எந்த கிரகத்தால் மாங்கல்ய தோசமும்,களத்திர தோசமும் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் போதும்.

No comments:

Post a Comment