Monday, 16 March 2015

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும்..இவற்றை பலர் கவனிப்பதே இல்லை..கிணறு தோண்டுதல் ,போர் போடுதல் போன்ரவற்ரை செய்யும்போது கீழ்நோக்கு நாளை தேர்ந்தெடுத்து ராகு காலம்,எமகண்டநேரம் இல்லாமல் துவக்க வேண்டும்.பூமிக்கு மேலே பலன் கொடுப்பவை மேல்நோக்கு நாளிலும் பூமிக்கு கீழே பலன் கொடுக்கும் காரியங்கள் கீழ்நோக்கு நாளிலும் செய்யப்பட வேண்டும்..
கடலை பயிரிட துவங்கும் முன் அது கீழ் நோக்கிய நாளா என கவனிக்கனும்...கடலை பூமிக்கு கீழே காய்ப்பது ஆகும்..இதுவே சோளம் ,நெல் எனில் மேல்நோக்கு நாளில் விதை ஊன்ற துவங்க வேண்டும்..இது பல விவசாயிகள் அறிந்து வைத்திருப்பர்.மாடி வீடு கட்ட துவங்கும்போது அது மேல்நோக்கு நாளில் மனை பூஜை செய்து துவங்குவது உத்தமம்...அதே போல உங்க ராசிக்கு எட்டாவது ராசியாக அன்றைய நாள் இருக்க கூடாது அது வாஸ்து நாளாக இருந்தாலும் சரி.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வாஸ்து நாட்களில் திதி யோகம் பார்க்க வேண்டுமா இல்லை தேவையில்லையா? வருகின்ற 23ம் தேதி பூமி பூஜை போடலாமா? அதற்கு (23ம் தேதிக்கு) பிறகு போர்வெல் எந்த நாளில் போடலாம்?

    ReplyDelete