Thursday, 30 April 2015

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழை:
தாவரவியல் பெயர்: Aloe typica = Aloe deltoideodonta
சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை. நமக்கும் அழகுதரும் மூலிகை. சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை. பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். சோற்றுக்கற்றாழை எனத் தமிழிலும் அலோவேரா(aloe vera) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் அருமருந்து, பெருமருந்து, மானிடத்துக்கே அது ஒரு அரிய விருந்து.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது. நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
மருத்துவக் குணங்கள்
1. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2. உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பருக்காமலே.பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
7. சோற்றுக்கற்றாழை + வெள்ளைப்பூண்டு + பனங்கற்கண்டு + எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமான அளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.
8. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
9. வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.
10. இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
11. சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
12. சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
13. வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
14. சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15. செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.
16. இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
17. இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18. எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும். வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19. வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
சித்தன் சிவமயம்'s photo.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சந்திரகலை என்றால் என்ன?

சந்திரகலை என்றால் என்ன?
இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனா
கிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.
feedback
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
* கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
* கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
*பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
* ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.
* மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
* தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
* பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
* இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
* மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
* இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

சம(ஸ்)கிருதம்!

சம(ஸ்)கிருதம்!
சம=சமன்=equal / கிருதம்=மொழி=language
தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி
ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. தமிழே சித்தர்களின் உயர் ஞானமொழி.
இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற மொழிகளைவிட தமிழுக்கும் சம(ஸ்)கிருதத்திற்குமே நிறையப் பொதுப்பண்புகள் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகள் சம(ஸ்)கிருத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன தவிர இலக்கண அடிப்படையில் பொதுப்பண்புகள் தமிழை விடக் குறைவே.
சம(ஸ்)கிருதம் நம் தமிழ்ச்சித்தர்கள் உருவாக்கிய மொழியே. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியே. ஆதலால்தான் எம் முன்னோர் சம(ஸ்)கிருதத்தை கோவில் வழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டனர். நம் பெயர்களில் சம(ஸ்)கிருதம் யாரும் திணித்ததால் வரவில்லை. சித்தர் மொழிகளை நம்மொழியாக ஏற்றுக்கொண்டதனால் வந்தது. ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி.
நிறையப்பேர் இந்தி, உருது போன்ற வடமொழிகள் சம(ஸ்)கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியின் மூல மொழி துருக்கி. அதில் சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிச்சொற்களும் சேர்ந்து உருவானதுதான் இந்தி. உண்மையில் சம(ஸ்)கிருதம் மற்ற மொழிகளில் எவ்வாறு கலந்திருக்கிறதோ அது போலவே இந்தியிலும் அதிகமாகக் கலந்துள்ளது.
குருகுலம் இருந்தபோது அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ், சம(ஸ்)கிருதம் இரண்டுமே கற்றனர். காலப்போக்கில் பூசாரிகளே சம(ஸ்)கிருதம் கற்றனர். சாதாரண மக்களுக்கு அதனால் பயனில்லாததால் கற்பதைத் தொடரவில்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைந்து ஆங்கிலம் வளர்வது போல, மக்கள் தமக்கு எதனால் பயன்பாடு உள்ளதோ அதனையே கற்றனர்.
சித்தர் தமிழை நிறைவாகக் கற்றோனே கசடு அறக் கற்றவன். வள்ளுவப் பெருமான் மாபெரும் சித்தர். இதை வெகுவிரைவில் பாரறியும். தமிழ் சித்தன் மொழி. மெஞ்ஞான சூட்சுமங்கள் நிறைந்த நிறைமொழி. சித்தர்கள் அழிய மாட்டார்கள். ஆதலால், அவர்கள் மொழியான தமிழ் என்றுமே அழியாது. வருங்காலத்தில் உலகமாந்தரே தமிழ் கற்பர். ஏனெனில் சித்தர் மொழியான தமிழைக் கற்றாலே வரப்போகும் ஊழிக்கூத்திலிருந்து உலகமாந்தர் தம்மைக் காக்க முடியும்.
2037க்கு முன் ஞானச்சித்தர் காலம் பிறக்கும். மீண்டும் சித்தர்கள் இம்மண்ணில் எம்முன்னே நடமாடுவர். உலகமாந்தரெல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சித்தநெறியை நாடுவர். சித்தநெறியிலுள்ள மறைபொருளையறிய வேண்டி தமிழ் கற்பர். ‪#‎சித்தர்வாக்கு‬
நம்மால் ஆதாரம் தர முடியவில்லை. இருந்தும் ஒரு தகவலாகத் தருகிறேன். அதாவது, சித்தர் ஓலைக் குறிப்புகளின் படி தமிழ் பல அண்டங்களில் பேசப்படுகின்றது.
சித்தர்கள் மொழியான தமிழ் காலம் வரையறுக்கப்பட முடியாத ஆதிமொழி. மூத்தகுடி தமிழ்க்குடி

அன்னதானம் செய்வது ஏன்?

அன்னதானம் செய்வது ஏன்?
அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும்,வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும்.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.நோய்களில் கடுமையானது பசி ஆகும்.பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.
மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.
உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்
-----------------------------------------------------------------------
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
* பித்தத்தைப் போக்கும்.
* உடலுக்குத் தென்பூட்டும்.
* இதயத்திற்கு நல்லது.
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
* கல்லீரலுக்கும் ஏற்றது.
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

காகத்திற்கு உணவிடுவது ஏன்?

காகத்திற்கு உணவிடுவது ஏன்?
நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.
இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்
இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

ஆஸ்துமா

ஆஸ்துமா
இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.
மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.
இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

கல்லீரல் கோளாறு, மஞ்சள்காமாலை நோய் குணமாக வேர்க்கடலை சாப்பிட வேண்டும்

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.
வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. மேலும் முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.
மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.
உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையைச் சாப்பிடவும்.
இத்துடன் சர்க்கரை சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும். வேர்க்கடலையில் உள்ள நியாஸின் தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுக்கிறது.
எந்த வயதினரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.
வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவது அவசியம். அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் வரும். மேக நோய் இருந்தால் அது வீரியப்படும். நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
கல்லீரல் கோளாறு, மஞ்சள்காமாலை நோய் முதலியவை இருந்தால் நோய் குணமாக வேர்க்கடலை சாப்பிட வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் தொந்தரவு உள்ளவர்கள் நெருங்கக்கூடாத பொருள் இந்த வேர்க்கடலையாகும்.

எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணம்

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.
தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

பயமுறுத்துகிறதா பருமன்?

பயமுறுத்துகிறதா பருமன்?
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்:-

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்:-
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

"cosmic dance"

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
The Cosmic dancer of Universe - Lord Natarajar.
"The Wave Structure of Matter Explains the Atomic Structure of Matter. The 'Particle' as the Wave-Center of a Spherical Standing Wave in Space" explains the cosmic dance of Nataraja."
World-renowned professor of Nuclear physics, Fritjof Capra. He had explained the philosophy behind Nataraja's cosmic dance in his popular book "The Tao of Physics".
Atom movement is related to Natarajar dance.
In 2004, a tall statue of the dancing Shiva was unveiled at CERN, the European Center for Research in Particle Physics in Geneva. CERN is Switzerland’s pre-eminent center of research into energy, the “world’s largest particle physics laboratory” and the place where core technologies of the internet were first conceived. A special plaque below the Shiva statue explains the significance of the metaphor of Shiva's cosmic dance with quotations from Fritjof Capra, an American Physicist.
அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.
God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.
பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.
இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?
“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.
இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”
சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.

யார் இந்தச் சித்தர்கள்..?!

யார் இந்தச் சித்தர்கள்..?!
சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் அதாவது அறிவு படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் எனப்படுவோர். பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். நந்தீசர், அகத்தியர், ருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கிநாதர், பாம்பாட்டிச்சித்தர், தேரையர், குதம்பைச்சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகண்ணிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர், தன்வந்திரி எனப் பதினெட்டு சித்தர்கள் உள்ளனர். இவர்கள் முதன்மைச் சித்தர்கள். இவர்களைவிட எண்ணிலாக் கோடி சித்த, ரிஷி, கணங்கள் உள்ளார்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும் எமது சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள். சித் என்றால் அறிவு அல்லது அழிவில்லாதது என்று பொருள். சித்தர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை கொண்டவர்கள். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும் சொல்கிறார். "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!" என்று சொல்கிறார்.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம், நற்செயல், நற்சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். எல்லோரும் சித்தர்கள் ஆகி விட முடியாது. இப்போதெல்லாம் எல்லா மனிதர்களிடமும் நாம் அன்பையோ , உண்மையையோ , நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் சித்தர்கள் இவ்வளவு பண்புகளை தம்மிடத்தில் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் . நல்ல சிந்தனைகளை போதித்தார்கள்; செயல்படுத்தினார்கள்.
சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள் தான் இந்தச் சித்தர்கள். சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள், விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வர்ணிக்கின்றன. இறைவனிடத்தில் சித்தியை அடைந்தவர்கள். இறையோடு இரண்டறக் கலந்து ஒன்றித்தவர்கள். இறைவடிவே ஆனவர்கள். தமது இருப்பை, உடம்பை, சிந்தையை, சுற்றத்தைத் தெளிவாகப் புரிந்தவர்கள்; அறிந்தவர்கள் .
இறைவன் என்பவன் யார்? அவனை அடையும் மார்க்கம் என்ன? பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? பிரம்மம் என்பது என்ன? இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்? உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது? உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி? இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அட்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம்.
சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம்.
சித்தர்கள் என்போர் யார் , எத்தனை சித்தர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு புரிகிறது . நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் இந்த சித்தர்கள். நாம் எல்லோரும் இவற்றை அறிந்து , தெரிந்து வைத்திருப்பது மிகவும் நன்று.

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!
மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்..!

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்..!
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.
கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.

விளாம்பழம் (wood apple)

விளாம்பழம் (wood apple)
பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து

Tuesday, 28 April 2015

ஆபரணமும் , அக்கு பிரஷரும் !!!

ஆபரணமும் , அக்கு பிரஷரும் !!!
நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
காலில் அணியும் கொலுசு தண்டையினால் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தியை மீட்டு ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி கூடும்.
கழுத்தில் அணியும் மாங்கல்யம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தையும் ஒரே சீராக வைத்திருக்கும்.
முழங்கை வரை வளையல் அணிவதால் மூன்றில் இரண்டு பாகம் அக்குபிரஷர் செய்த பலனைப் பெறமுடியும்.
காதுகளில் வளையம் அணிவதால் மாதவிடாய்க் காலங்களில் அதன் சுழற்சி ஒழுங்காவதுடன் மனச் சிதைவையும் கட்டுப்படுத்தும்.
மூக்குத்தி அணிவதால் இருமல், ஜலதோஷம் கட்டுப்படுகிறது.
சுண்டுவிரலில் மோதிரம் அணிவதால், நெஞ்சுவலியைப் போக்குவதுடன், ஜுரம், ஆஸ்துமா, ஜலதோஷம் வராமல் பாதுகாக்கும்.
‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.
நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும்.
இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.
இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!
நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!
நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...
மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

Saturday, 25 April 2015

ஊழ்வினை கிரகம் சந்திரன்

ஊழ்வினை கிரகம் சந்திரன்
ஊழ்வினை என்பது நம் பாவ புண்ணிய கணக்கு பெட்டகம். அது செய்த செயலை கூறிக்கும், பாவமோ புண்ணியமோ. ஊழ்வினை பொருத்தே சந்திரனின் நிலை கொண்டு நம் பிறப்பை நிர்ணயிக்கிறது. ஊழ்வினை பயனாகவே நம் பிறப்பும் அமைகிறது. அன்றைய தின கோச்சாரமே நம் பிறப்பு ஜாதகம். அது ஒரு குறிப்பிட்ட நாளில் தான் நிகழும். பாவத்தின் அடிப்படையில் நமக்கு தோஷங்களும், புண்ணியத்தின் அடிப்படையில் நமக்கு யோகங்களும் நம் ஜாதகத்தில் அமையும். நமக்கு அமைந்த தோஷங்களும் யோகங்களும் சந்திரனைக் கொண்டு மாற்றம் நிகழும். இதை ஜோதிட ஆன்றோர் அறிவார்கள்.
சந்திரனை மனதிற்கு காரகன் என்பார்கள் . அவரே சிந்தனைக்கு சொந்தக்காரர். நமது எண்ணப்படியே நமது வாழ்வு அமையும். காரணம் நமது எண்ணத்திலேயே நம் பாவ புண்ணிய கணக்கு ஆரம்பமாகிறது. இதனாலே சந்திரனை ஊழ்வினை கிரகமாக எண்ணக்காரணம்.
எதை செய்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. நாள் நட்சத்திரம் சந்திரனை அடிப்படையாக கொண்டது. நம் எதை செய்கிறோமோ அது ஊழ்வினையாக மாறும் . அவ்வாறு இருக்க அதற்கு உருதுனையாக இருப்பவர் சந்திரனே.
விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. இதற்கு அர்த்தம் நமது ஊழ்வினை பயனாக நமது விதியை வெல்ல முடியும். சந்திரனை மதி என்பர்.
இயற்கை நமக்கு எளிதில் பல புரிதல்களை காட்டுகிறது ஆனால் நாமோ எளிய விசயங்களை எற்பதில்லை. சந்திரன் தேய்ந்து வளர கூடியவர் நிலையான தன்மை இல்லாதவர் . அதை போலத்தான் நம் ஊழ்வினையும் தேய்ந்து வளரக்கூடியது. சனியை ஊழ்வினை கிரகமாக நினைப்பவரும் உலர். சனி அசுபத்தன்மை அவ்வாறு சிந்திக்க தோன்றும். சனி நாம் செய்யும் தொழிலை குறிப்பவர் . ஊழ்வினை என்பது மாற்றத்துக்கு உட்பட்டது அது நாளுக்கு நாள் மாறக்கூடியது . சந்திரனின் நிலைபாடும் அவ்வாறே.
சந்திரனே நம் அருகில் இருக்கும் கிரகம் ஊழ்வினைப்போல் ஒட்டிக்கொண்டே வருவது. நம் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட நாளில் தான் நடக்கும். எந்த ஒரு சம்பவமும் குறிப்பிட்ட நாளில் தான் நடக்கும். சிலர் லக்னத்தின் முக்கியத்துவம் பற்றி யோசனை கொள்வர். லக்னம் சந்திரனின் நிலைபாட்டை பொருத்து அமையும்  10 பொருத்தம் திருமணத்திற்கு பார்க்கப்படுவதும் சந்திரனை மையப்படுத்தியே. விம்சோத்திரி திசையும் சந்திரனை அடிப்படையாக கொண்டே பலன்கள் தருகின்றன.
சூரியனிடம் இருந்து ஒளியை பெருபவர் சந்திரன். ஆத்மாவான நாம் சூரியனிடம் இருந்து ஊழ்வினை கிரகமான சந்திரன் மூலமாக பிறப்பு கொள்கிறோம். சிவன் தலையில் இருப்பதும் சந்திரனே, நம் தலை எழுத்தும் அவனே, அவனே ஊழ்வினை கிரகம்.

மனோரீதியிலான இறைவழிபாடு..........

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது மனோரீதியிலான விஷயம் இருந்தாலும் இறைவழிபாடும் சேர்ந்து கை கொடுத்தால்தான்
இந்த தீயபழக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.

திருவெண்காடு ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

குடி பழக்கத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் வளர் பிறை திங்கள் அன்று விரதம் இருந்து இந்த திரு தளத்திற்கு சென்று முக்குள நீராடி அகோர மூர்த்தி சன்னதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வோருக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும், அன்றைய தினத்திலிருந்து ஜாதகருக்கு அறிவில் விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த தீமை பழக்கத்திலிருந்து விடுதலை நிச்சயம் கிடைக்கும் . இந்த வழிபாடு செய்வதற்கு நிறைய தடைகள் ஏற்படலாம் , கடுமையான முயற்சி மேற்கொண்டு வழிபாடு செய்து தங்களின் வாழ்க்கையில் நலம் பெறலாம்.

மனித வாழ்வில் கிரகஅதிகாரங்கள்

மனித வாழ்வில் கிரகஅதிகாரங்கள்
பிறந்ததுமுதல் 7 வயது வரை கேது பாலாரிஷடம்
7 வயது முதல் 27 வரை சுக்கிரன்
இளமை ,திருமணம்
27 வயது முதல் 33 வயது வரை சூரியன் பொறுப்பு நிர்வாகம் ,மக்கட்செல்வம்
33 வயது முதல் 43 வயதுவரை சந்திரன் அலைந்து சம்பாதித்தல் ,இடமாற்றம்
43வயது முதல் 50வயதுவரை செவ்வாய் எதிரி , கடினஉழைப்பு ,நோய்
50 வயதுமுதல்68 வயதுவரை ராகு சோம்பல்,முதுமை,பொறுப்புஒப்படைப்பு
68வயதுமுதல்84வயதுவரை குரு தெய்வீக ஈடுபாடு
84வயதுமுதல்103 வயது வரை சனி மந்தநிலை. தீர்காயுள்
103 வயது முதல் 120 வயது வரை புதன் செயலிழந்தநிலை

12-வகைப் புத்திரப் பேறுகள்

12-வகைப் புத்திரப் பேறுகள் 1
நமது முன்னோர்கள் புத்திப் பேருகளை 12 வகைப்படுத் தி்யுள்ளனர்கள்.1 ஔரசன, 2 சேஷத்திரஜன், 3தத்துப்புத்திரன்,4 கிரீதன், 5 கிரித்திரிமன்.6அதம்பிரபாவன், 7 கருடோற் பன்னன, 8 அபவத்தன் ,9 புவனாப்பவன்,10 கானனனீனன்,11 சகோடன்,12 தாசிப்பிரபாவன் என பிரித்துள்ளனர்.
இந்த வகையான புத்திர பேறுகள் அமைய ஜோதிடரீதியான அமைப்ப்பை காண்போம்.
1-ஔரசன் தனதது இனத்திலேயே தனக்கு சொந்தமான மனைவியின் வயிற்றில்தனக்கு பிறந்த புத்திரன்.
லக்கினம்( அ) சந்திரன் ராசி இவற்றில் எது பல முன்இருக்கின்றதோ அதறகு 5 ம் பாவம் சுபக்கிரகங்கள் இருந்ந்து,சுப ராசியாக இருந்து அந்தவீட்டில்குரு சட்ர்ர்க்கப்பலனன்களில் ஒன்று அமைந்திருக்கவேண்டும்இத்தகைய பிறந்த ஜாதகனை ஔரசப்புத்திரன் எனப்படுவன்.
2-சேஷத்திரஜன் நோயாளிக் கணவனுடைய கணவனின் அனுமதியுடன் வேறு ஒருவரிடம் பெற்றெடுக்கும் புத்திரன் .
புத்தீரஸ்தானமா 5-ம்இடம் மகரம்,கும்பமாகவோ(அ )
சனியின வர்க்கமாக அமைத்து சூரியன் செவ்வாய்.,குரு இவர்களின் பார்வையைப் பெறாமல் புதனுடைய பார்வையை மட்டும் பெற்றிருக்கும் நிலையில் பிறந்த ஜாதகன் சேஷத்திரஜ புத்திரன்.
3-தத்துப் புத்திரன் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் அவர்களிடமிருந்து அன்பளிப்புப்போல் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளும் முறைக்கு தத்துப் புத்திரன் எப்டும்.
5- இம் மகரம்( அ) கும்பமாகிஅதில் சனி இருந்து அந்த சனியைச் சந்திரன் பார்கப்பிறந்தவன் தத்துப்புத்தின்ஆவன்.

4-கிரீதன்: தனக்கேற்ற அந்தஸ்தைப் பாராமல் ஒரு குழந்தையை அதனுடைய பெற்றோர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்குவதன் மூலம் பெற்ப்படும் புத்திரன்.
5ம் இடம் புதன் வீடாகி அங்கு புதன் இருந்து சந்திரன் அந்த புதனைப்பார்க்கும் வண்ணம் அமைப் பிறந்த ஜாதாகர் கிரீத புத்திரன்ஆவார்.
5- கித்திரிமன் வயது வந்தவுடன் தன் பெற்றோர் களின் சம்மதமில்லாமல் தானாகவே இன்னொரு வரிடம் சுவீகாரப் புத்திரனாகச் சென்று அவர்க ளுக்குப் பிள்ளையாகஇருப்பவன் . மேஷம் (அ) விருச்சிகம்7ம்பாவமாக இருந்து சனி பகவான் 5ம் இடத்தில் இருக்க வேண்டும் அதோடு வேறு எந்தக் கிராகங்களின் பார்வையும் பெறாமலிருக்கப் பிறந்த புத்திரனை கிரித்திரம புத்திரன் என்பார்கள்.
6-அதமப் பிரபாவன்: ஒரு பிராமிணனுடன் கீழ் இன ஜாதிப்பெண் கூடி பெற்றெடுத்தப் புத்திரன்.
5-இடமாகச் சிம்ம ராசியாகஅமைந்து அங்கு சூரியன் இருந்நது செவ்வாய் பார்த்திருக்க பிறந்நத ஜாதகர் பிரபாவபுத்திரன்.
7-கருடோற் பன்னன்: கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு பிறந்த. ஜாதகன் கருடோற் பன்னன் எனப்டுவான்.
மேஷம்,விருத்சிகத்தில் உள்ள சந்திரனை வேறு கிரகங்கள் பார்க்கால் 5 -ல் உள்ள சனி மட்டும் பார்க்கப் பிறந்தவன் கருடோற்பன்ன புத்திரன் ஆவான்.
8-அபவித்தன்: பெற்றோர்கள் புறக் கணித்துவிட்ட பின் பிறரிடத்தில் வளரும் புத்திரன்.
மகரம கும்பம 5 ம் இடமாக அமைந்து செவ்வாய் இருந்து சூரியன் பார்க்க பிறந்தவன் அபவித்த புத்தி ரன் எனப்படுவார்கள்.

9-புவனர்பவன்: ஒருபுத்தினோடு உள்ள விதவையை மறுமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் அந்தப் புத்திரன் புவனர்ப்பவ புத்திரன் ஆவான்.
மரத்திலோ. கும்பத்திலோ( அ) சனியின் வேறு வர்க்கங்களிலோ சந்நதிரன் இருக்க வேண்டும் அதோடு சூரியன் சுக்கிரன் ஆகிய இருவருடைய பார்வைகளைப் பெற்று சனி 5-ல் அமையப் பெற்ற ஜாதகர் புவனர்ப்பவ. புத்திரன் ஆவான்.
10- கானீனன் :திருமணமாகாத கன்னிப் பெண்ணிற்குப் பிறந்த புத்திரன்.. .அஸ்தமனம் நீசம்,பகை,போன்ற வலிமை இழந்து சந்திரன் இருக்கும போது 5ம் இடத்திற்குச சூரியனின் சம்பந்தமோ,பார்வையோ, அமர்ந்திடப் பிறந்தவன் கானீனபுத்திரன் ஆவான்.
11சகோனன்:ஒரு பெண் கர்ப்பமுற்ற நிலையிலேயே திருமணம் செய்து பெற்றெடுத்த புத்திரன்.
சூரியன் சந்திரன் வர்க்கங்களிலோ(அ ) கடக,சிம்ம ராசியில் 5-ம் இமாக அமைந்து அங்குசூரின். சந்திரன் இருந்து சுக்கிரன் பார்த்திருக்க பிறந்த ஜாதன் சகோட புத்தினாவர்.
12-தாசிப் பிரபாவன் :அடிமைத தொழில் ரியும் பெண் பெற்றெடுத்த புத்திரன் ஆவான்.
சுக்ரனுடைய பார்வையை பெற்ள்ள ராசி 5-ம் இடமாகி அதுவே நவாமாம்சத்தில் சுக்கிரன் இருக்க
பிறந்தஜாதகன் தாதேசிப். பிரபாவன் ஆவான்.
இந்த விளக்கம் சாராவளியில் 34-அத்தியாயம் 26- சுலோகம் முதல விளக்கியுள்ளார்

இருபது விதிகள்

1} பஞ்ச பூத ஸ்தலங்கள்.
1, பிருதிவி – மண் – காஞ்சிபுரம்.
2, வாயு – காற்று – திருக்காளத்தி {காளஹஸ்தி}
3, தேயு – நெருப்பு – திருவண்ணாமலை.
4, அப்பு – நீர் – திரு ஆனைக்கா.
5, ஆகாசம் – ஆகாயம் – தில்லை சிதம்பரம்.

2} பாதம் படக்கூடாதவை.
மயான கரி,
அக்கினி,
அடுப்பு,
வீபூதி,
சான்றோர் மீது,
பசுவின் மீது,
இரத்தம்,
முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது.
3} முச்சுடர்கள்.
1, சூரியன்,
2, சந்திரன்,
3, அக்கினி.
4} வேள்விகளில் பயன்படுத்தும் மரங்கள்.
வில்வம்,
ஆல்,
வன்னி,
கருங்காளி,
மா,
முறுக்கை,
அத்தி,
பலாசு,
சந்தனம்,
வேங்கை,
அரசு,
வாகை முதலியன.
5} {தக்ஷிண} தென் கயிலாயம் எனப்படும் தலங்கள்.
திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி,
திரிகோண மலை {ஸ்ரீலங்கா} என்பன.
6} எட்டு ஆத்ம குணங்கள்.
1, கருனை,
2. பொறுமை,
3. பொறாமையில்லாமை,
4. நற்செயல்,
5. மனமகிழ்வு,
6. பேராசையில்லாமை,
7. உலோபத்தன்மையில்லாமை, 8. தூய்மை.
7} கை விரல்களுக்கு வழங்கப்படும் பெயர்கள்.
1, பெரு விரல் – அங்குசம்.
2, சுட்டு விரல் – {ஆள்காட்டி விரல்} தர்ச்சனி.
3, நடு விரல் – மத்திமா.
4, மோதிர விரல் – அநாமிகை.
5, சுண்டு விரல் – கனிஷ்டா.
8} நவ பாஷாணங்கள்.
1, சாதிலிங்கம்.
2, மனோசிலை.
3, காந்தம்.
4, அரிதாரம்.
5, கந்தகம்.
6, ரச கற்பூரம்.
7, வெள்ளை பாஷாணம்.
8, தொட்டி பாஷாணம்.
9, கவுரி பாஷாணாம். என்பன. “போகர்” என்னும் சித்தர் 5.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவரே இந்த நவ பாஷாணகங்களைக் கொண்டு பழனியாண்டவர் மூல விக்கிரகத்தைச் செய்து வைத்தனர்.
9} நவ ரத்தினங்கள்.
1,கோமேதகம்.
2,நீலம்.
3,பவளம்.
4,புஷ்பராகம்.
5,மரகதம்.
6,மாணிக்கம்.
7,முத்து.
8,வைரம்.
9,வைடூர்யம்.
10} நவ புண்ணியங்கள்.
1, அமுதம் ஏந்தல்.
2, அருச்சித்தல்.
3, ஆசனத்திருத்தல்.
4, எதிர் கொள்ளல்.
5, திருவடி துலக்கள்.
6, தீபங்காட்டல்.
7, தூபங்காட்டல்.
8, பணிதல்.
9, புகழ்தல்.
11} பஞ்ச லோகங்கள்.
1, பொன்.
2, வெள்ளி.
3, செம்பு.
4, இரும்பு.
5, ஈயம். என்பன.
12} எண்வகை மங்களங்கள்.
1, இணைக்கயல்.
2, கண்ணாடி.
3, சாமரம்.
4, கொடி.
5, தோட்டி.
6, நிறைகுடம்.
7, முரசு.
8, விளக்கு.
13} பஞ்ச பட்சிகள் எனப்படுபவை.
1, வல்லூறு.
2, ஆந்தை.
3, கோழி.
4, காகம்.
5, மயில்.
14} பஞ்ச {ஐந்து} திரவியங்கள்.
1, ஏலம்.
2, லவங்கம்.
3, அதிமதுரம்,
4, கோஷ்டம்.
5, சம்பக மொட்டு.
15} ஐவகைத் தெய்வ மணிகள்.
1, சிந்தாமணி.
2, சூடாமணி.
3, சூலாமணி.
4, சியந்தாமணி.
5, கௌஸ்துபமணி.
16} பஞ்ச யக்ஞ ஹோமங்கள்.
1, கணபதி ஹோமம் – தடங்களின்றிக் காரியங்கள் நடைபெற.
2, சண்டீ ஹோமம் – வறுமை பயம் நீங்க.
3, நவக்ரஹ ஹோமம் – கிரகங்களைப் பிரியப்படுத்த.
4, சுதர்சன ஹோமம் – வெற்றி கிட்ட.
5, ருத்ர ஏகாதச ஹோமம் – ஆயுள் விருத்தி, க்ஷேமம் கிட்ட.
17} பஞ்ச பிலவங்கள்.
1, வில்வம்.
2, கிளுவைப் பத்திரம்.
3, மாவிலங்கை.
4, விளா.
5, நொச்சி.
18} அஷ்ட புஷ்பங்கள்.
1, எருக்கன் மலர்.
2, தாமரை.
3, புன்னை.
4, நந்தியாவட்டை.
5, பாதிரி.
6, அரளி.
7, சம்பகம்.
8, நீலோற்பலம். { மலர்களை முழுமையாக இட்டுதான் பூசிக்க வேண்டும். பத்திரங்களைக் கிள்ளி பூசை செய்யலாம்.
19} இறைவனுக்குரிய 16. உபசாரங்கள்.
1, தியானம்.
2, ஆவாஹனம்.
3, ஆசனம்.
4, அர்க்கியம்.
5, ஆசமனம்.
6, அபிஷேகம்.
7, வஸ்த்திரம்.
8, சந்தனம்.
9, அலங்காரம், அர்ச்சனை.
10, தூபம்.
11, தீபம்.
12, நிவேதனம்.
13, ஆரத்தி.
14, புஷ்பாஞ்சலி.
15, வலம் வரல்.
16, பிழை பொறுக்க வேண்டுதல் என்பன.
20} ஐவகை உபசாரங்கள்.
1, கந்தம்.
2, புஷ்பம்.
3, தூபம்.
4, தீபம்.
5, நைவேத்தியம்.

தோராயமாக திருமணம் நடக்கும் காலம்.

ஜாதகர் / ஜாதகிக்கு தோராயமாக திருமணம்
நடக்கும் காலம்.
லக்கினம் திருமணவயது
மேஷம் 15+20+25+30
ரிஷபம் 16+21+26+31
மிதுனம் 17+22+27+32
கடகம் 18+23+28+33
சிம்மம் 19+24+29+34
கன்னி 20+25+30+35
துலாம் 19+24+29+34
விருச்சிகம் 20+25+30+35
தனுசு 21+26+31+36
மகரம் 22+27+32+37
கும்பம் 18+23+28+33
மீனம் 19+24+29+34

ஒரு வருடம் முன்னும் பின்னுமா இருக்கும் கூடும். 60 % சரியாக வரும்.

பொருத்தங்கள்


பொருத்தங்கள் பலவிதம் - 1
திருமணம் என்பது ஒவ்வொரு நபரின் வாழ்வில் ஒரு இனிமையா அனுபவம். மகிழ்வான பகுதி, வாழ்வில் இன்னொரு பரிமனம். அதனால் தான் இரு குடும்பத்தினர்களும் உற்றார் உறவினர். நண்பர்கள் புடை சூழ கொண்டாப்படும் கலகலப் பான நிகச்சியாகும்.
ஒரு ஆணும் பெண்ணும் வாழ்வில் இணைந்து ஈருடல் ஓருயிராய் சங்கமித்து வாழ்க்கை என்ற கடும் பயணத்தினை சாதனையாக்கி நிறைவு செய்கின்றனர் சில தம்பதியர்கள்.
காலத்தின் போக்கும் மமனிதன் எதையோ தேடி அலையும் பரபரப்பான வேகமும் கலகலப்பான இந்த வாழ்வினை,கை கலப்பான வாழ்க்கையாக்கி விட்டது கசந்து பிரியும் உறவுகளும் கசப்பை சகித்தே வாழ்ந்து முடிக்கும் தம்பதிகளும் ஏராளமாகி விட்டனர் அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது என்பதைநாம் இன்று அனைவரும் மறந்தே விட்டோம்.
திருமணங்கள் பொருத்தத்தில் நிச்சயிக்கப்படு கின்றனர் .மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்குச் சென்று பெண் பார்த்த பின்பு அவர்களுக்கு பிடித்து விட்டால் அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்ப் போய் பார்த்த பின்பு மாப்பிள்ளை விட்டார் களை பிடித்து விடால் பிறகு இருவருக்கும் ஜாதக பொருத்தம் உள்ளனவா என்பதை ஆராய்ந்து அதற்கு பின் திருமணம் முடிக்கின்றனர்.
பெரும்பாலானோர்கள் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்து திருமணம் செய்கின்றனர் இது தவறு ஜாதக ரீதியாகப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்.
ஜோதிடரீதியாக ஒருவருக்கு திருமண பாக்கிய மானது அவர்களுடைய ஜாதகத்தில் இலக்கினத் திற்கு 7-ஆம் பாவமும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஆணுக்கு செவ்வாய் பெண்ணுக்கு 7-ல் அமையும் கிரகங்களின் நிலைகளைப் பொருது கணவன் மனைவி அமையும் நிலைகளை றிய முடியும். சந்திரன் ஆராயவேண்டும். இவர்களின் வலிமை நிலைகளை ஆராயவேண்டும்.
இவர்களின் நிலைகளை நவாம்சத்திலும் ஆராய வேண்டும். திருமண காலம் வந்துவிட்டால் திரும ணப் பொருத்தம் 10 மட்டும். பார்த்து திருமணத்தை முடிவெடுத்து விடக்கூடாது. ஜாதகரிதியன சில நிலைகளை கவனிக்க வேண்டும்.
பொருத்தங்ள் பத்தும் அவை
1-தினம் : ஜாதகர்,ஜாதகியின் ஆயுள் ஆரோக்கியம்
2-கணம் : குணாதியசங்கள்
3-மகேந்திரம் : குழந்தை பாக்கியம்
4-ஸ்திரீதீர்க்கம் : லட்சுமி கடாட்சம்
5-யோனி : தாம்பத்ய சுகம்
6-ராசி : ஜாதகர்,ஜாதகியின் உடல் நிலை
7-ராசியாதிபதி : உறவு நிலை
8-வசியம் : விருப்பு,வெறுப்பு
9-ரஜ்ஜூ : தாலி பாக்கியம்
10-துக்க நிலை (நிவர்த்தி)
இந்த அனைத்துப் பொருத்தங்களும் எல்லோ ருக்கும் அமையாது 5-6-7- மத்திமம் 8-9-10-உத்தமம்
என்பார்கள்.
மேலே கண்டவைகள் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பெரும்பாலான பெற்றொர்கள். நினைக் கின்றனர் ஜாதக ரீதியான பொருத்தம் அவசியம்.
இருவரின் ஜாதகத்தில் கிரகங்ள் அமைந்துள்ள நிலைகளை ஆராய்ந்து பின் இருவரையும். இணக்க வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் குடுமப் நலம் தரும் 2-ஆம் பாவமும் ,2-ஆம் அதிபதியும்,2-ஆம் பாவக்காரக கிரகங்களும் நலமுடன் அமைய வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் வீடும்,சுகம்,பூமி, வாகனம் தரும் 4-ஆம் பாவமும் 4-ஆம்அதிபதியும் 4-ஆம் பாவக்காரக கிரகங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் துணைவர்கள்,காம களத்திம் தரும் 7-ஆம் பாவம்,7-ஆம் அதிபதியும், 7-ஆம் பாவ காரகா கிரகங்களின் நிலைகலை ஆராய வேண்டும்.
அய.சயனசுகம் தரும் 12-ஆம் பாவமும் 12-ஆம் அதிபதியும் 12-ஆம் பாவக்காரக கிரகங்களின் நிலைகளை ஆராய வேண்டும்


1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.
சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.
செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நல மற்ற மனைவி அமைவாள்.
7-ல் செவ்வாய் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும்.
சூரியன் ( அ ) செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விவகாரங்கள் வம்பு வழக்குகளில் இருநந்து விகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவைகளின் பாதிப்பும் தேல்வியும் ஏற்படும்.
செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும்,சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவாள் சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர்கள்.அமைவார்கள்.
7-ஆம் அதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்க முள்ள துணை அமைவார்ககள்.
லக்கினனத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவி மீது சந்தேகப்படுவார்.
7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும்
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகளிலொன் றில் சுக்கிரனிருந்து சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு உறுதியாக ஒரு முறைக்கு மேல் திருமணம் ஆகும்.
ஜாதகத்தில் 1-2-6-8-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணமாவதில் தடை தாமதம், பிரச்சினைகள்,ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு முறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமகும். 2-4-7-10-ல் சனி வக்ரம இருப்பினும் ஜாதகி /ஜாதகர் பிறபாலறிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவிடில் ஏமாற்றப்பட்டு விடும் நிலை உருவாகும்
3-5-7-ஆம் அதிபதிக்கு ராகு, கேது இணைவு அல்லது
பார்வை இருக்குமாயின் ஜாதகியின் /ஜாதகரின் வாழ்கை துணையால் அவமானம் தலை குனிவை ஏற்படுத்தி விடக்கூடும்


பொருத்தங்கள் பலவிதம் 2
1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.
சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.
செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நல மற்ற மனைவி அமைவாள்.
7-ல் செவ்வாய் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும்.
சூரியன் ( அ ) செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விவகாரங்கள் வம்பு வழக்குகளில் இருநந்து விகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவைகளின் பாதிப்பும் தேல்வியும் ஏற்படும்.
செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும்,சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவாள் சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர்கள்.அமைவார்கள்.
7-ஆம் அதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்க முள்ள துணை அமைவார்ககள்.
லக்கினனத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவி மீது சந்தேகப்படுவார்.
7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும்
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகளிலொன் றில் சுக்கிரனிருந்து சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு உறுதியாக ஒரு முறைக்கு மேல் திருமணம் ஆகும்.
ஜாதகத்தில் 1-2-6-8-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணமாவதில் தடை தாமதம், பிரச்சினைகள்,ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு முறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமகும். 2-4-7-10-ல் சனி வக்ரம இருப்பினும் ஜாதகி /ஜாதகர் பிறபாலறிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவிடில் ஏமாற்றப்பட்டு விடும் நிலை உருவாகும்
3-5-7-ஆம் அதிபதிக்கு ராகு, கேது இணைவு அல்லது
பார்வை இருக்குமாயின் ஜாதகியின் /ஜாதகரின் வாழ்கை துணையால் அவமானம் தலை குனிவை ஏற்படுத்தி விடக்கூடும்

பரிகாரங்கள்

பரிகாரங்கள் ஓர் பார்வை
கையொன்று செய்ய விழி யொன்று நடை
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சார செவியொன்று கேட்க
விரும்பும் யான் செய்கின்ற பூஜை
எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே !
பட்டினத்தார்

சூரியன் : கேதுமை வாங்கி ஏழை எளியோருக்கு
தராவும். வயதான தந்தைக்கு ஒப்பானவர்களுக்கு
தேவையான உதவிகள் செய்தால் வாழ்வு அமையும் சூரிய ஒரையில் குதிரைக்கு கேதுமை உணவு தருவது வழ்வில் நலம் தரும்.
சந்திரன் : நெல் அல்லது அரிசி,மாவு உணவு வாங்கி
ஏழை எளியோருக்கு தாரவும். தாயுக்கும்.வயதான பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும்.
சந்திர ஒரையில் வெள்ளை வாஸ்திரம்,தயிர்சாதம் இவற்றை தானம் செய்தால் வாழ்வில் நலம் தரும்.
செவ்வாய் : துவரை பருப்பு வாங்கி ஏழை எளியோ ருக்கு தாரவும்.சகோதரர்க்கும். தன் கீழ் பணியாற்று
பவர்களுக்கும் உதவுதல் வாழ்வு நலமுடன் அமையும்
பறவைகளுக்கு உணவிடவும். செவ்வாய் ஒரையில் ஆடுகளுக்கு பழம்,புல்,கீரை உணவு தந்தால் வாழ்வில் நலம் கிட்டும்.
புதன் : பாசிப்பயிறு வாங்கி ஏழை எளியோருக்கு தாரவும். புதன் ஒரையில் ஏழை மாணவ/மாணவி
களுக்கு கல்விக்கு தேவையானவை தானம் செய்யவும். குரங்கு,கருடன் இவர்களுக்கு உணவிட் டால் வாழ்வில் நலம் நரும்.
குரு : கொண்டைக்கடலை வாங்கி ஏழை எளியோ ருக்கு குரு ஒரையில் தானம் செய்யவும். யானைக்கு தேவையான உணவு தரவும். ஆசன், குரு,ஆசிரியர்க ளுக்கு தேவையான உதவிகள் செய்தால் வாழ்வில் பல நன்மைகள் கிட்டும்.
சுக்கிரன் : சுக்கிர ஒரையில் வெள்ளை மொச்சை வாங்கி ஏழை/எளியோருக்கு தானமிடவும். வெள்ளை வாஸ்திரம் தானமிடவும். பார்வையிழந்தோர்க்கும், மணம் ஆகாத பெண்களுக்கு,துயரப்படும் பெண்களுக்கும் தாவரங்களுக்கும் உதவிகள் செய்வது வாழ்வில் அனைத்து நலங்களும் கிட்டும்.
சனி : சனி ஒரையில் உளுந்து வாங்கி ஏழை/எளியோர்களுக்கு தானமிடவும். உப்பு கலந்த உணவு மாற்றுதிரனாளிகளுக்கும். பறவைகளுக்கு உணவிடவும். வேலைக்கரர்களுக்கு உதவி செய்யவும்.
ராகு : ராசயனம் கலந்த உணவும். வயதாவர்கள் பெண்கள், விதவைகள் தொழு நோயாளிக்கும், மற்றவர்களுக்கும், உதவுங்கள் வாழ்வில் நலம் கிட்டும்.
கேது : மொச்சை வாங்கி தானம் தரவும். தேரு நாய்கள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி சமுதாய நிறுவனம் உதவியாளார்களுக்கு உதவி செய்தால் வாழ்வில் நலம் கிட்டும்.

தவறுகள்

மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்கிறார். அச்சமயம் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தவிக்கிறது. எனென்றால் மனம் பாதிக்கப்பட்டு நரம்பின் கடத்தும் தன்மை உயராமல் தம் பிரச்னைகளுக்கு தீர்வுகளை அறிய முடியாமல் மயங்குகின்றனர்.
மனிதமனம் தெளிவற்று இருக்கும் போது மனதில் உயர்வான எண்ணங்களை வெளிப்படுத்தமுடியாது. மனம் வெறுப்படைந்த நிலையில் உயர் எண்ணங் கள் வராது. விழிப்பு நிலையில் மனதில் எண்ணங் களற்று இருக்க முடியாது.விழிப்பு நிலையில் கடலில் அலைகளைப்போல எஎண்ணங்கள் வரும் அமைதியின்றி இருக்கும் மனம் கஷ்டங்களை உணரும் போது மனிதன் செய்வதரியாது ஒருவித கையறு நிலையை உணர்கிறான்.
மனம் தியானத்தின் மூலம் உயர்கிற போது அமைதியான சலனமற்ற நிலையில் பலசிக்கல்க ளுக்கு தீர்வு காணமுடியும்.
தீய மனம் முதலில் தூய மனமானபின் தியானத் தில் உயர்வு பெறும் தகுதியில் மேலோங்கி மேலான ஒழுங்கில் லயமாகும் போது படிப்படியாக மனித வாழ்வு நலமாகிறது. மன வலிமை நல்ல பழக்கங் களை உண்டாக்க உதவுகிறது.வாழ்வில் நலங்களை உண்டாகிறது.

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம் 1
நதியின் பிழையன்று நறும்புனலின்மை ;அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று ; விதியின் பிழை
இதற்கு என்னை நீ வெகுண்ட தென்றான் கம்பர்

இராமனின் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது இராமன் கானகம் செல்வதற்கு பட்டாபிஷேகம் தடைபட்டதற்கு மதியின் பிழையில்லை. முன்பிறவி யின் விதியின் பிழை செய்தால் அதை ஊழ் என்றும் கர்மாவினையாகும். தவறு எது என்றறியாத இராமனின் வாழ்வில் விதியின் செயல் என்கிறர் கம்பர்.
நம்மில் பலர் சில சமையம் இது என் கர்மா வினை, இது என் ஊழ் வினை, இது என் வினைப்பயன் என்று எதற்கெடுத்தாழும் புலம்புவர்கள்.
ஆனால் எந்த காரியத்தால் புண்ணியத்தால் சுக வாழ்வும், எந்த காரியத்தால் துண்பம் என்று நிர்ணயம் செய்ய முடியாது.புண்ணியம்என்றும், பாவம் என்றும் பொதுவன காரனத்தையே கூறுகிறோம்..
ஊழின் பெருவலி யா உள மற்றுஒன்று
சூழினும் தான் முந் துறும் திருக்குறல்
இயற்கையின் செயலை யார் ? தடுக்கமுடியாது நம் அறிவின் சூழ்ச்சிகளை எல்லாவற்றையும் முறியடிக் கும்.ஊழ்வினையே வலிமைபெரும்.
பதவீ பூர்வ புண்ணியானம் என்பது நாம் செய்தே செயலினைப்பெருத்து. வாழ்வு அமையும்.
ஒருவருகு பூர்வ புண்ணியம் மட்டும் பலம் பெற்று விட்டால் கவலைப்படத் தேவையில்லை.,

இல்லறம்

ஒரு மனிதனுக்கு உலகில் மிக முக்ய அத்தியாவசிய மானது இல்லறம்.அதுவும் மகிழ்சியான வாழ்கை நம்மிடம் எவ்வளவோ செல்வம் இருந்தும்.கணவன் மனையிடையே ஒற்றுமை இல்லையானால் வாழ்வில் புயல்தான் வீசும்.
சுக்கிரன் பகை நீசம் வீடுகளில் அமர்ந்தாலும் லக்னத்திற்கு 6,8,12ல் இருந்தாலும் அசுபர்களின் பார்வை பெற்றாலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.7-ல்சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கூடியிருந்தாலும். மணவாழ்வில் நிம்மதியிருக்காது 7-ம் பாவத்திற்கும்,சுக்கிரனுக்கும் இருபுபுறமும் பாவர்கள். இருந்தாலும் திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் உருவகும்.
7-ல் இரண்டும் கெட்டான் கிரகங்கள் புதன்,சனி,கேது மணவாழ்வில் நலம் தரது.
லக்கினத்திற்கவது சந்திரனுக்கவது 1-2-4-7-8 ல் சுக்கிரன் இருந்தால் திருமண வாழ்வில் நிம்மதியில்லை.
3-5-ல் ராகு ,கேது ,சனி திருமணவாழ்வில் குழபப்பம் அதிமகும்.
3-5-ம் அதிபதியுடன் சனி,ராகு,கோது இணைந் திருந் தலும். பிறரின் தொடர் பால் ஜாதகர்,ஜாதகியின் வாழ்வில் புயல் விசும்.
சுக்கிரன்,செவ்வாய் இணைவும்.திருமண வாழ்வை நலம் சேர்க்கது.
லக்கினத்திற்கு,சந்திரனுக்கு 7-ல் சனி இருந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும்.
7-ல் புதன் இருப்பின் ஜாதகர்,ஜாதகி பிறர் பால் மிது ஆசை கொண்டவர்கள்.
மதியுஞ்சனி கூடியேழில் மர்ந்திட மாந்தியவர் கெதிர்
பார்த்திடவும்
மனமுங் கொடுங் கனலாமெனச் சின மீறினால் தன் மன்னை வஞ்சமியற்றும் பெல்லாதவளாம்
7-ல் சந்தின்,சனியும் இணைந்திருப்பின் மாந்தி பார்த்திட்டால் ஜாதகரின் மனைவியாக வருபவள் கொடுமையான மனம் கோபம் ஆத்திரம் கணவனுக்கு துரோகம் செய்வள்.

ஏழில் லக்னாதிபதி இருந்தால்

ஜாதகங்களிலே மிக முக்கியமானது
களத்திர ஸ்தானம் ஆகும். இருவரின் ஜாதகத்தில் ஏழாவது பாவத்தைக் குறிக்கும். களத்திர ஸ்தானத் தின் மூலம்.மணமகனின் ஜாதகத்திலிருந்து வரப் போகும் மனைவியின் நேர்மை, பண்பாடு,குடும்பப் பாங்கு சமூகத்தில் அவளது அந்தஸ்து, நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.
பெண்ணின் ஜாதகத்தில் தனக்கு வரப்போகும்
மணமகனைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் முடியும்.கணவனின் நேர்மை, தொழில் நிலை. குடுபம் பின்னானி, நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.
ஆணின்,பெண்ணின் ஜாதகத்திலோ1-2-4-7-8-12-ல்
பாவக்கிரகங்கள் இருப்பதே அல்லது பார்ப்பதோ தோஷமாகும். பெண்கள் ஜாதகத்தில் 8-ல் பாவிகள் இருப்பின் மாங்கல்ய தோஷம். இவர்களை குரு பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசிகளிலோயே லக்னம் , லகினாதிபதி அமைந்து. சூரியன்,குரு பார்த்தால் ஜாதகர்க்கு உயர்வான வாழ்வு அமையும். பெண் ஜாதகங்களில் பெண் ராசி லக்னம், லக்னா திபதியாக அமைந்து குரு, சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் பதிவிரதையாக வாழ்வர்கள்.
ஏழாம் அதிபதி முதலாம் இடம் என்னும் லக்னத் திலேயே இருந்தால்.இவர்கள் தனது கணவன், மனைவியை தேர்ந்தெடுப்பர்கள்.ஆனால் பெற்றோர்கள் சம்மதத்துடன் தன் நடக்கும்.உறவியிலேயே அமையக் கூடும். அல்லது உறவிராக இல்லாமல் இருக்கலம்.மணவாழ்கை நன்றாக அமையும். மனைவி,கணவன் மிகவும் அன்புடன் இருப்பார்கள் மாமனார் மூலம் உதவி
கிடைக்கும்.பிறறைக் கவரும் தன்மையுள்ளவர் கள்.மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள்.
ஏழாம் அதிபதி இரண்டில் இருந்தால் இன்பம் தர இயலாத துணைவகள் அமைவர்கள் , காதல் திருமணமாக அமையும். சட்ட திட்டங்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் மீறிய திருமணமாக அமையும்.திருமணம் நடக்கும். ஆனால் மாரகத்தின் நிலைகளை பெறுவதால் இவர்களின் தசா புக்திக ளில் மாரகத்தை தரும். நிலை ஏற்படும். மண
வாழ்க்கை சந்தோஷமாக அமைந்தாலும் பணக் கஷ்டங்கள் ஏற்படும். காமம் அதிகம், சம்பாதிப்ப வர்ளகா இருப்பார்கள். வெளிநாடு தொடர்பு ஏற்படும். இரண்டாம் திருமணம் ஏற்படும்
ஏழாம் அதிபதி மூன்றில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் போலே உள்ளன்புடன் இருப்பர்கள் உடலுறவில் சில பிச்சினைகள் வரும் .களத்திர தோஷம் உள்ளவர் வசதி படைத்தர்கள் ஆண்மைக் குறைவு ஏற்படும் உறவில் கணவன் மனைவி அமை யும் (அ ) நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில் திருமணம் அமையும் .மகிழ்ச்சியாக அமையும். ஆனால் சிலருக்கு ஒழுக்கக்குறைவை தரும்.
ஏழாம் அதிபதி நான்கில் இருந்தால் நிச்சயிக்கப் பட்ட திருமணம் அமையும். மணவாழ்வு மகிழ்சியாக அமையும். பொறுப்புள்ளர்கள்,அதிகம் சம்பாதிப்பார் பெண்கள் வலிய வந்து சுகம் தருவார்கள். எல்லோ ரையும் திருப்திப்படுத்துவார்.
ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மக்களை போல துணைவரை பதுகப்பர்கள் ஆனால் தொழிலில் பல இடைஞ்சல்கள் தருவர்கள் இவர்கள் தங்களே தேர்ந்து எடுப்பார்கள். துணைவரை தேடினாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் அமையும். பிரிவினையும், கருத்து வேறு பாடுகள்.,விவாகரத்து ஏற்படும். 7-ஆம் அதிபதி 5-ல் இருப்பது தோஷசம் தரும்.இரண்டு திருமணம் அமையும்.பிறர் தொடர்பு ஏற்படும்.
ஏழாம் அதிபதி ஆறில் இருந்தால் துணைவர் எதிரியயின் நிலையில் தொல்லைதருவர்கள் பகையாளி அல்லது விரோதி வீட்டிலிருந்து திருமணம் அமையும்
மதாம் மறி திருமணம் அமையும்.மகிழ்சியுடன் அமையாது ,ஆரோக்கியம் நிலையாக இருக்காது.
ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திரும ணம் அமையும்.வசதியானவர்.அயல் நாட்டுதோடர்பு ஏற்படும்.

ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால் பிரிவு,இருதார தோஷம் மீகவும் மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும். மணமகனும்,மணமகளும் கதால் என்று ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள் தனமாக மணம் புறிந்து வாழ்வில் சொல்லொணத் துயரத்தையும்.அல்லல்களையும் அனுபவிப்பார்கள்.
துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும்.
ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமகும். தெரிந்த குடும்பத்தில், உறவில் அமையும் சிலருக்கு மணவால்வு சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும். முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில் சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம் உள்ளர்கள். மாமனார்அ உதவி கிட்டும்
ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள். தன்னுடன் வேலை செய்பவரையோ திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.ஆனால் கணவனை நம்பமாட்டாள். அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும் தருவர்கள்.
ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால் குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள் துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால் துணைவரின் தாயாரை கவணிக்க மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து வைக்கும் திருமணமகும். துணைவரால் ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும் உள்ளவர் கள் திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான வாழ்வு அமையும்.
ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால் கொடுக்கும் இன்பத்தில் கொண்டவர்களை நஞ்சாக் கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள் குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள். சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன திருமணம் அமையும் வின் விரையங்கள் ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற தொடர்புகள் ஏற்ப்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.மகிழ்வு இருக்கது.
ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின் சுப பலன் பாவிகள் தொடர்பு பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.

மோகமாமேழில்பாவர் மொய்த்திடப்பாபர்நோக்கில்
போகமேசெய்யவேண்டாள் புருடனையிகழ்ச்சியாக
மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார்பே ரில்
தாகமாயிச்சையாவன் தருபலனெல்லாஞ்சாற்றே
ஏழில் பாவிகள் இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும் ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம் அனுபவிக்க எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க மாட்டாள் இதனால் பெண்குறியை சுவைப்பவனாக இருப்பன்


திருமணவாழ்வு -
ஏழில் லக்னாதிபதி இருந்தால் திருமணம் இளமை யில் நடக்கும். சகோதரியின் மகளை மணப்பார்.மனைவி மூலம் மாமனாரின் சொத்து கிடைக்கும். அதிக காமம் உடையவர் .குடும்பத்தில் அவ்வளவாக பற்று இருக்காது .லக்கினாதிபதியால் அல்லது சந்திரன் பார்வை 7-ஆம் வீட்டைபார்த்தால் காதல் திருமணம் நடக்க வாய்புள்ளது. வசதி படைத்த மனைவி அமைவாள். பிறறை கவரும் வசீகரம் உள்ளவார்கள்
2-ஆம் அதிபதி ஏழில் இருந்தால் செல்வம். சந்தோ ஷம் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். 2-7-ஆம் வீட்டோடு தொடர்புள்ள தசாபுத்திகளில் திருமணம் நடக்கும்.துணைவர் சம்பாதிக்ககூடியவர்கள். மனைவி மூலம் வருவாய் கிடைக்கும். திருமணத்திற் குப்பின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக் கும். மனைவியின் அணுசரனை இருக்காது. காமம் அதிகம் உள்ளவர், பிறர் தொடர்பு ஏற்ப்படும்.
3-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் எப்போதும் போகத் தில் நாட்டம் குறையுள்ளவர்.சுகமே பெரிது என
நினைப்பவர். தைரியம், சாயன சுகம் கிட்டும். மறு மணம்ஏற்ப வாய்புள்ளளது. துணைவரால் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பெண் குழந்தை பிறக்கும்.சொந்தமாகத் தொழில் அமையும்.
4-ம் அதிபதி 7-ல் இருந்தால் நல்ல திறமைசாலியாக இருப்பார்.கேந்திராதிபத்ய தோஷத்தால் வீடு,வாகனம்,கல்வி,இல்லறம் சுகம் தனம் ஆகியவை தடைபடும்.தாய் வழியில் மனைவி அமைவாள்.4-7-ஆம் அதிபதி பலமுடன் இருந்தால் சுகமுடன் வாழ்வு அமையும்.வாகன யோகம் கிடைக் கும் .மனைவியின் நடத்தையில் சுகமில்லை.
5-ஆம் அதிபதி 7-ல் இருப்பதை அனைத்து ஆசான்
களும் வரவேற்பதில்லை. மனைவி பிரிவினை. புத்திரபாக்கியம் தடை ஏற்படும்.கட்டாயத் திருமணம்
நல்ல மனைவி அமையும்.காதல் திருமணம் ஏற்படும் திருமணம் தாமதமாகக் கூடும்.
6-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் மனைவியால் கலகம் விரோதம் ஏற்படும்.துணைவரின் உடல் நலம் அடிக் கடி பதிக்கப்படும்.மனைவி வீட்டாருடன் உறவு நலமுன் இருக்காது .திருமண வாழ்கை சுகமுடன் அமையாது.துணைவரால் கடன்பட நேரும். ரத்த தொடர்புடைய நோய்கள் ஏற்படும். அத்தை, மாம னின் வீட்டில் திருமணம் அமையும்.
7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு அடிபனிவார் கள். மனைவி வசதியுள்ளவார். சுபக் கிரகமாக இருந்தால் வாழ்வில் நலம் உண்டகும்.பாவியனால் அடிமை வாழ்கை தான்அமையும்.வாத நோய் வரும்,
8-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் திருமண வாழ்வில் குழப்பங்களும், விவாகரத்தும்,துணைவரால் நலம் இருக்காது.இருமணம் ஏற்படலாம்.துணைவரின் ஆயுள் பதிக்கும்.துணைவராலும் பிற பெண்களா லும் கௌரவக் குறைவு ஏற்படு. வசதியுள்ளவர்கள்.
9-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் செல்வம்,அலகு,அன்பு டைய மனைவி அமைவாள்,அயல் நாடு தொடர்பு ஏற்படும்.பிற தொடர்பு ஏற்படும்.சதா பெண்களின் சிந்தனை இருக்கும்.இளமையில் திருணம் நடக்கும். கட்டுபடையா மனைவி அமைவாள்.வசதியுள்ளவார் ஒற்றுமையுடன் வாழ்வர்கள்.திருமணத்திற்கு பின் வளமன வாழ்வு அமையும்.மாமனார் அந்தஸ்துள்ளவார்.
10-ஆம் அதிபதி 7-ல்இருந்தால் உத்தியோகத்தில் இருப்பவார்.நல்ல மனமும் குணமும் உள்ளவார்கள் ஆனால் சந்தேகப்படுவர்கள்.நடத்தையில் சந்தேகம் இருக்கும்.சுபக்கிரகமனால் பிரச்சினையில்லை.
11-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் ஆசைகள் அனைத்தும் பூர்த்தி அடையும். சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் இருக்கும். மனைவியால் அனுகூலம் உண்டு.நல்ல குகுணம் உள்ளவார் வசதியுள்ளவார்.காதல் திருமணம் அமையும்.திருமணத்திற்கு பின் வாழ்வு சிறப்பு அடையும். புத்திர தோஷம் ஏற்படும்.பெண் குழந்தை அதிகம் பிறக்கும் வாய்புள்ளது.ஆதாயம் கிட்டும் வெளி நாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும்
12-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் துணைவாரல் நலம் இல்லை.அதனால் பிறர் தொடர்பு ஏற்படுத்திகொள் வார்கள் பொருள் இழப்பு ஏற்படும்,கடன் வாங்கி செலவு செய்வான் வெளியுரில் வசிக்கும் நிலை ஏற்படும்.
7-ல் பல கிரகங்கள் இருப்பின் அவைகளின் பலம் ஏற்ப பலர் தொடர்பு ஏற்படும்.
7-ல் சுபர்,பாவர் இணைந்திருப்பின் மறுமணம் ஏற்படும்.
லக்கினத்தை விட 7-ஆம் வீடு பலம் பெற்றால் கணவன்,மனைவி முலம் வருவாய் கிடைக்கும்.
7-ஆம் அதிபதி இரட்டை ராசியில் இருந்தால் பலருடன் தொடபிருக்கும்.
7-ஆம் அதிபதி சூரியனானால் கடின மனம் உடையவர்களாக இருப்பர்கள்.
7-ஆம் அதிபதி சந்திரனானால் அன்புடையவர்கள்
7-ஆம் அதிபதி செவ்வாயானால் நாணமில்லாதவர்கள்.
7-ஆம் அதிபதி புதனானால் அதிக காமம் உள்ளவர்கள்.
7-ஆம் அதிபதி குருவானால் குழந்தை பெற்று இளைப்பளாகவும்.
7-ஆம் அதிபதி சுக்கிரனானால் கணவனைத் தன் வசப்படுத்துபவளாகவும்.
7-ஆம் அதிபதி சனியானால் களவு/வம்பு செய்பவளாகவும்.
7-ஆம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி ராகுவனால் அவமானம் உடையவளாகவும்.
7-ஆம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி கேதுவனால் தரித்திரம் உடையவர்களாக இருப்பர்.
ஆண்/பெண் இருவருக்கும் பொருந்தும்