Tuesday, 7 April 2015

எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் முறை

முன்னோர்களின் வழிமுறைகளும் பழங்காலத் தொடர்புகளும் தளர்ந்துள்ள இக்காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி என்பதை நீங்க தெரிந்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் முன் உடல்நிலை, அந்நிலைக்கேற்ற எண்ணெய், குளிப்பதற்கு உபயோகிக்கும் தண்ணீர், சூழ்நிலை இவ்வளவும் கவனிக்கத்தக்கவை. தமிழ்நாட்டின் நிலம் மற்றும் பருவ நிலைக்கு மிகவும் உகந்தது நல்லெண்ணைதான்.
குளிக்கத் தேவை அஞ்சுகாயணும் என்பர்.
இதற்குஐந்து பொருள்கள் காய்ந்திருக்க வேண்டுமென்று பொருள். இந்த ஐந்தும் யாவைப வயிறு, எண்ணெய், அரப்பு, வெயில், தண்ணீர் இந்த ஐந்தும் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஐந்தையும் கவனத்தில் கொண்டு எண்ணெய்க் குளியலைத் தொடங்கலாம். மேல் வயிற்றில் உணவு பக்குவமடையும் நேரம் எண்ணெய் குளியலுக்கு ஏற்றதல்ல.
பசியெடுக்குமளவு உணவு ஜீரணமான பிறகே தேய்த்துக் கொள்வது நல்லது. இதைத்தான் வயிறு காயணும் என்று குறிப்பிடுகின்றனர். எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் உள் சூடு வெளியே கொண்டு வரப்படுகிறது. ஜீரணகாலத்தில் உட்சூடு மிகத் தேவை.
ஆகவே வயிறு நிரம்பியுள்ள போது எண்ணெய் தேய்த்துக்கொள்வதால் தளர்ச்சி மிக்க அந்த நிலையில் ஜீரணம் தாமதமாகி அஜீரணம் ஏற்படலாம்.
எண்ணெய்யிலுள்ள பிசுபிசுப்பும் தடிப்பும் குளிர்ச்சியும் நீங்க அதை இளஞ்சூடாகக் காய்ச்சித் தேய்ப்பதால் உடல் லேசாக இருக்கும். காய்ச்சும் போது மிளகு, ஓமம், இஞ்சி, வெந்தயம், வெற்றிலை, கொம்பரக்கு போன்றவற்றை எண்ணெய்யில் போடவும்.
கொம்பரக்கு உடற்சூட்டைக் குறைக்கும். ஓமமும், வெந்தயமும் மிளகும் உடல் வலியைப் போக்கும். இஞ்சி
வெற்றிலை சளி கட்டாதிருக்க உதவும்.
சீயக்காயை வெந்நீரில் குழைத்து இளஞ்சூடாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் சிறந்தது.
குளிர்ந்த நீரில் குழைத்துத் தேய்த்தால் சோப்பைப் போல் தோலை அதிகமாக வறட்சி அடைய செய்து மென்மையைக் குலைத்து விடும். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருக்கும் போதே எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிடில் எண்ணெய் தேய்ப்பால் நெகிழ்ச்சியுற்ற உடலில் அதிக தளர்த்தியையும் கனத்தையும் கொடுக்கும். ஐந்தாவது வெந்நீர், பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள பொருத்தம் போல இந்த எண்ணெய்க்கும் வெந்நீருக்கும் மிகப்பொருத்தம்.
உள்ளழுக்கை நெகிழச் செய்து சூட்டினால் உடலை விட்டுப் பிரியும்படிச் செய்து நீர்த்து வெளியேற்றுவதே எண்ணெய் தேய்ப்பதன் முக்கியக் கருத்து. இதற்கு சூடு மிகவும் அவசியத் தேவை.

எண்ணெய்க் குளியலை முதலில் அரை மணி நேரம் வரை ஊறிக் குளிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திப் பின் படிப்படியாக நேரத்தின் அளவைக் கூட்டலாம். அதிகப் படியாக மூன்று மணி நேரம் வரை கூட ஊறலாம். அதற்கு மேல் தேவையில்லை

No comments:

Post a Comment