Tuesday, 21 April 2015

பிறந்த நேரத்தை கண்டறியலாம்

ஜாதக கட்டம் மட்டும் இருந்தால் பிறந்த நேரத்தை கண்டறிய முடியுமா..? முடியும்.ஜாதக கட்டத்தில் சூரியன் லக்னத்துக்கு எங்கு இருக்கிறார் என்பதைக்கொண்டு அவர் பிறந்த நேரத்தை கண்டறியலாம்..காலை 5 முதல் 7க்குள் பிறந்திருந்தால் லக்னத்தில் சூரியன் இருப்பார்...காலை 7 முதல் 8.30 வரை 12ல் இருப்பார்....சூரியன் கொதிக்கும் மதிய வேளை சூரியன் 10ல் இருப்பார்...நடுநிசியில் பிறந்தால் 4ல் இருப்பார்..இப்படியே ஒன்றை மணி கணக்கில் கண்டறியலாம்..சூரியன் கொளுத்தி எடுக்கும் சித்திரையை சூரியன் உச்ச மாதம் என்றும் சூரியனே தெரியாமல் மேகங்கள் சூழும் ஐப்பசி அடை மழை காலத்தை சூரியன் நீச மாதம் என கணக்கிட்ட நம் ஜோதிட முனிவர்கள் சாதாரண ஆட்களா என்ன..?

No comments:

Post a Comment