Sunday, 17 May 2015

கர்மா

உங்கள் கர்மாவை சுமக்கும் ஆத்மாவே (ஜீவாத்மா) பிராத்தனைகளை இறைவனிடத்தில் (பரமாத்மா) கொண்டு சேர்க்கும்.
மாசுள்ள கனமான கர்மபலன்கள் சுமக்கும் ஆத்மா இறைவனை தொடர்பு கொள்ள தடுமாற்றம் கொள்ளும். அதனால் பிராத்தனைகள் பலிப்பதில்லை. அவ்வாறு பிராத்தனை பலிக்காத ஆத்மா, இறைவனை ஏசும், சந்தேகிக்கும் அல்லது இன்னொரு- பிராத்தனைக்கு வழிவகுக்கும். கர்மத்தில் மாசிருப்பவன், கடவுளை அடைவதில் சிரமங்களை சந்திப்பான். எனவே, ஒருவரின் கர்மவினையே அனைத்திற்கும் வித்து.
அதனால் ஆத்மாவில் கர்ம பலனை பதியவைக்கும் ஐம்புலன்களின் இச்சை செயல்களில் கவனமுடன் இருந்து, தன் செயல்களை இறைவனிடம் சமர்ப்பித்து, கர்மயோகம் செய்யும்படி இறைவன் பகவத்கீதையில் அறிவுரை கூறுகிறார்.
ஆத்ம சுத்திகரிப்பை பற்றியே ஆலயங்களும், மந்திரங்களும், கடவுள் உருவ சிலைகளும், பூஜைகளும், ஆகவிதிகளும் கூறுகின்றன. மனித ஆத்மாவை கோயிலாக உருவாக்க, முன் மாதிரியாக அமைந்தவைகளே கற்கோவில்கள் என்பதையும் உணருங்கள்.
அதனால் கர்மாவை கவனியுங்கள். கர்மபலன்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மா, இறைவனை தேடி அலைந்து பிராத்தனை செய்ய தேவையில்லை, அதற்கு அவசியமும் ஏற்படாது. ஏனெனில் அந்த சுத்தப்படுத்தபட்ட ஆன்மாவே கடவுள் நிலையை அடைகிறது.
இவ்வாறு உங்கள் கர்மத்தினை செம்மையாக்க உதவும் கலையே "ஜோதிடம்". இக்கலை ஒரு வகையில் இறைநிலை அடைய செப்பனிடுகிறது.
தங்கள் செயல்களில் (கர்மங்களில்) அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என்பதை உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து மதங்களும் கற்ப்பிக்கின்றன.
"பிற உயிருக்கும் தன் ஆத்மாவிற்கும் துன்பம் தராத செயல்கள் அனைத்தும் நற்செயல்களே"

No comments:

Post a Comment