Thursday 14 May 2015

முருங்கையின் முத்தான நன்மைகள்

முருங்கையின் முத்தான நன்மைகள்
இன்றைய தலைமுறை பச்சைக்காய்கறிகளை சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.
உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற கலர் காய்கறிகளில் செலுத்தும் ஆர்வத்தை பச்சை காய்கறிகளில் அவர்கள் காட்டுவதில்லை.
ஆனால் பீன்ஸ், அவரை போன்ற பச்சைக்காய்கறிகளில் தான் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுபோல் ஒரு பச்சைக்காய்கறி தான் முருங்கைக்காய்.
முருங்கையை “கற்பகத் தரு” என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
முருங்கையின் மகத்துவங்கள்
ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.
முருங்கை இலை காம்புகளை தனியாக காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.
முருங்கை பட்டை கட்டினால் வரும் வீக்கத்தை குறைக்கும்.
முருங்கை வேரை பாலுடன் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.
நரம்பு தளர்ச்சிக்கு முருங்கை பூ ஒரு சிறந்த மருந்து.
முருங்கை காய் சூப் எடுத்துக்கொண்டால் இருமல் மற்றும் தொண்டை வலி, ஓய்வு ,நெஞ்சு நெரிசல் என எல்லாவற்றிற்கும் உதவுகிறது.
முருங்கைகாய் சாறு முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெறும்.
முருங்கை கீரை சாம்பார்
முதலில் பருப்பை அலசி அத்துடன் வெள்ளை பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
பின்னர் அதில் கத்தரியும், கீரையும் சேர்த்து ஒரு விசில் விட்டு உடனே திறந்துவிடவும்.
வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்.
பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
அதனை பருப்பில் சேர்த்து தேவையான நீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் இறக்கவும்.
பயன்கள்
இரத்தம் சுத்தமடையும்.
தாய்ப்பாலை ஊறவைக்கும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
முருங்கை பூ கஷாயம்
முருங்கைப்பூவை நிழலில் காயவைத்து கொள்ளவும்.
பிறகு அதை பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில் நீரை விட்டு கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் சேர்த்தால் முருங்கை பூ கஷாயம் தயார்.
பயன்கள்
உடல் வலிமையடையும்.
விந்து கெட்டிப்படும்.
பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுவாகவும்.
பித்தம் குறையும்


No comments:

Post a Comment