Saturday, 2 May 2015

எது பகுத்தறிவு?

எது பகுத்தறிவு?
சில வருடங்களாக "கடவுள் இல்லை" என்று சொல்வது மட்டுமே பகுத்தறிவு என்று தவறாக கருதப்படுகிறது.
உண்மையில் கடவுளே இல்லை என்று சொல்வது பகுத்தறிவல்ல.உண்மையில் கடவுள் என்றால் என்ன என்பதனை ஆராயும் அறிவுக்கே பகுத்தறிவு என்று பொருள்.
எது கடவுள்?
நம் வேதங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை,அவன் ஆதியும் அந்தமும் அற்றவன்.அனைத்தும் ஆனவன்.ஏகன் அநேகன் என்றெல்லாம் கூறுகிறது.
அக்கூற்றுகளின் வழியில் சென்றால் நமக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாக தெரியும்.
அது "கடவுள் ஒன்றே" என்பதுதான்.
ஒன்றான இறைவன் பலபெயர்களாலும் உருவங்களாலும் கற்பனை செய்யப்படுகிறான்.
அதை"ஏகம் சத்! விப்ரா பஹுதா வதந்தி" என்கிறது ரிக்வேதம்.
உலகில் ஒரே கடல்தான் உள்ளது. ஆனால்
"இந்தியப்பெருங்கடல்" "வங்கக்கடல்" "அரேபியக்கடல்"...........என்றல்லாம் அதற்க்கு கற்பனப்பெயர்கள் பல வழங்கப்பட்டாலும் கடல் பெயரற்ற ஒன்றுதான்.
அவ்வணமே இருக்கும் ஒரே இறைவனுக்கு, இறைவன்,கடவுள்,ஆற்றல்,இயற்க்கை,நுண்ணறிவு,சித்,ப்ரஹ்மம்,சிவன்,விஷ்ணு,அல்லாஹ்,அருகன்,ஈஷ்வா,அடநோமஸ்......................என்றெல்லாம் பற்பல கற்பனை பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன.ஆனாலும் இறைவன் என்று கூறப்படும் அது பெயரில்லா, உருவமில்லா, முழுமையான ஒன்று.
அது இரண்டுகள் அற்றது.
எப்பொழுது நம் மனம் வியவகரித்து கற்பனைகளை உண்டாகுகிறதோ அப்பொழுது இரண்டுகளற்ற இறைவன் என்னும் உண்மை நம் கண்களுக்கு பலவான உலகம் என்னும் மாய தோற்றமாக தெரிகிறது.
எப்பொழுது மனம் கற்பனைகளை உண்டாக்க நிறுத்தி அனைத்தையும் ஒன்றாக கருத துவங்குகிறதோ அப்பொழுது ஆத்மலாபம் சித்திக்கும்.
தங்கம் ஒன்றுதான் ஆனால் அதற்க்கு கம்மல்,மாட்டி, வலை, கொலுசு, சங்கிலி என்று எண்ணற்ற கற்பனைப் பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன. பொருட்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் ஆதாரம் ஒன்றுதான்.அதுவே தங்கம்.பொருட்கள் இல்லமல் தங்கம் இருக்கும்.ஆனால் தங்கம் இல்லாமல் அப்பொருட்கள் நிலைநிற்காது.
அதுபோலவே நாம் பலவற்றை நம் மனம் என்னும் கண்ணால் கண்டாலும் அனைத்த்ரிக்கும் ஆதாரமாக இருபது ஒரே சக்திதான்.அச்சக்தியையே நமக்கு புரிய கடவுள்,ப்ரஹ்மம்.......என்றெல்லாம் கூறுகிறோம்.
எவ்வாறு நீர்க்குமிழி நீரிலயே பிறந்து,வளர்ந்து,உடையுமோ அவ்வணமே அனைத்தும் இறைவனிடமே தோன்றி,வளர்ந்து,ஒடுங்குகின்றன.
இருப்பது அவ்வாற்றல் ஒன்றே.இருப்பவன் இறைவன் ஒருவனே.அவனத்தவிர்த்து நீங்களும்,நானும் இல்லவே இல்லை.இறைவனத்த்விர்த்து நமக்கும் வேறு பொருட்களுக்கும் இம்மியளவும் தனித்ததொரு இருப்பு இல்லை.

No comments:

Post a Comment