Sunday, 17 May 2015

அர்ஜீனனின் ஆணவம்

போரில் அர்ஜீனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம் இருபது மீற்றர் வரை பின் தள்ளப்பட்டது அதே அர்ஜீனின் ரதம் கர்ணனால் இரண்டு அங்குலம் மட்டுமே தள்ளப்பட்டது.
உடனே கண்ணன் கர்ணனை பாராட்டினார் அர்ஜீனன் கோபம் கொண்டு கண்ணனை கேட்டான்.
"என் தாக்குதலால் கர்ணனின் ரதம் இருபது மீற்றர் வரை நகர்ந்தது அதை பாராட்டாது நமது ரதம் நகர்ந்ததற்கு அவனை பாராட்டுகிறீர்களே என்றான்"
கண்ணன் கூறினான் "ஆம் அர்ஜீனா அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும் கர்ணனும் மட்டும்தான் இருக்கிறான் ஆனால் உன் ரதத்தால் மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நான் இருக்கிறேன் மூவுலகமும் என்னுள் அடக்கம் கூடவே உன் தேரின் கொடியில் மகா பலா சாலியாக அனைவரும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறான் நாம் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்க முடியாது ஆனால் கர்ணனின் தாக்குதலில் ரதம் இரண்டு அங்குலம் வரை நகர்ந்தது அர்ஜீனா சற்று யோசி உன் ரதத்தில் நானும் அனுமனும் இல்லையென்றால் கர்ணன் செலுத்திய பாணத்திற்கு உன் ரதம் பூமியை விட்டே தூக்கி எறியப்பட்டிருக்கும்.................................
"தனித்திருந்தாலும் வலிமை மிக்கவன் கர்ணன்"
I love Suryapuththra Karnan.

No comments:

Post a Comment