Thursday 14 May 2015

மெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை

மெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை
காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
கொடி இனத்தை சேர்ந்த இந்த மூலிகைக்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என்ற வேறு பெயர்களும் உண்டு.
இந்த மூலிகையை கயிற்றில் கட்டி தொங்கவிட்டால், பார்ப்பதற்கு ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போல தோற்றமளிப்பதால் இதற்கு கருடன் கிழங்கு என்று பெயர்.
மருத்துவ பயன்கள்
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது.
ஆனால் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும், இது அதிக கசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு சாப்பிட கொடுக்க உடனே விஷமும் முறிந்து விடும்.
இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும்.
இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணையை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment