Wednesday, 6 May 2015

நட்சத்திர கந்தாய பலன் கண்டறியும் முறை

மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன்
(நட்சத்திர கந்தாய பலன் கண்டறியும் முறை.)

பஞ்சாங்கத்தில் போடும் நட்சத்திர கந்தாயம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் சைத்ர சுத்தபிரதமை தினத்தின் 1) திதி, 2) நாள், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்று சொல்லும் பஞ்ச அங்கம் 5யையும் குறித்துக் கொள்ளவும்.

1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ

முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)

உதாரணம் : மன்மத வருடத்துக்கு பரணி நட்சதிரத்திற்கு கந்தாயம் கண்டறிவோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாள்.
மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், பிராம்யம் யோகம், பவம் கரணம் அன்றைய பஞ்ச அங்கங்கள் ஆகும்.

1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ = பிரதமை = 1
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ = சனி = 7
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ = உத்திரட்டாதி = 26
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ = பிராம்யம் = 25
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ = பவம் = 1
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ = 1+7+26+25+1 = 60 ஆகும்
ஊ = 67

பரணி நட்சதிரத்திற்கு முதற்கந்தாயம் கண்டறிவோம்.
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ = பரணி = 2

முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) = ((60+2)x3) / 8 = 186 / 8 இன் மீதம் = 2 ஆகும்.

பரணி நட்சதிரத்திற்கு நடுகந்தாயம் கண்டறிவோம்.

நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) = ((60+2)x7) / 3) = 434 / 3 இன் மீதம் = 2 ஆகும்.

பரணி நட்சதிரத்திற்கு கடை கந்தாயம் கண்டறிவோம்.

கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) = ((60+2)x3) / 5) = 186 / 5 இன் மீதம் = 1 ஆகும்.

இவ்வாறு மற்ற நட்சத்திரத்திற்கும் கண்டறியவும்.

No comments:

Post a Comment