Friday, 15 May 2015

பங்காருபல்லி ,என்டிபல்லி

தங்கபல்லி
கெளதம முனிவர் ஆசிரமத்தில் ஒரு நாள் இரண்டு சீடர்களால் பூஜைக்காக கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தில் இரண்டு பல்லிகள் இறந்து கிடக்க கோபம் கொண்ட முனிவர் இருவரையும் பல்லிகளாக மாறும் படி சாபம் இட்டார்.தவறை உணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி விமோசனம் கேட்க மனம் மகிழ்ந்த முனிவர் விமோசன வழியை பின்வருமாறு கூறினார்
ஒரு நன்மை செய்தாலும் ஆயிரம் மடங்கு நன்மை தரும் ஆலயமான காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் தபம் செய்து சாப விமோசனம் பெற அறிவுறுத்தினார்.
அதன் படி தபம் செய்த இருவருக்கும் காட்சி தந்த கருணாமூர்த்தி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு விமோசனம் அளித்து,நீங்கள் பல்லிகளாக இருந்து தபம் செய்து வழிபட்ட இத்திருத்தலத்தில் பல்லி வடிவிலான உங்கள் இருவரையும் தரிசிப்போர்க்கு பாவங்கள் அனைத்தும் நீங்கி அவர்களின் ஆத்மா வைகுண்டம் அடையும். இதற்கு சூரிய சந்திரர்களே சாட்சி என்று வரமளித்தார்.
அதன்படி அன்றும் இன்றும் இத்திருதலத்தில் பல்லி மற்றும் சூரிய சந்திர உருவங்கள் உள்ளன.

No comments:

Post a Comment