Tuesday 16 June 2015

அஷ்டவித விவாஹங்கள் [8 விதம்]

அஷ்டவித விவாஹங்கள் [8 விதம்] அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அது அவ்வாறு இல்வாழ்க்கையை சிறக்க இல்லாளின் பங்கு மிக அவசியமாகிறது,  1) ப்ராஹ்மம், 2) தைவம்,3)ஆர்ஷம்,4) ப்ராஜாபத்யம், 5) ஆஸுரம் 6) காந்தர்வம் 7) ராக்ஷஸம் 8) பைசாசம் அதன் விபரம் :- 1)ப்ராஹ்மம் என்பது ஒழுக்கமும் கல்வியும் நற்க்குடிபிறப்பும் இளமையு அழகும் கொண்ட மணமக்களை முறைப்படி கன்யாதானம் செய்து மணம் முடிப்பது ப்ராஹ்மம் ஆகும்,  2) தைவம் என்பது யாகங்களில் இளமையும் அழகும் கொண்ட மணமகனை தேர்வு செய்து தன் பெண்ணை கொடுப்பது தைவம்ஆகும்  3)ஆர்ஷம் என்பது மணமகன் தனக்கு பெண் தர மணமகளின் தகப்பனுக்கு பசுவும் கன்றும் அல்லது இரண்டுகாளை மாடு கொடுத்து பெண்ணை திருமணம் செய்வது   4) ப்ராஜாபத்யம் என்பது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேதத்தற்க்கு கட்டுபட்டு தர்மபடி வாழச்சொல்லி கன்னிகையை தானம் செய்வது  ப்ராஜாபத்யம் ஆகும், 5) ஆஸுரம் என்பதுதன்வீட்டுக்கு தெரியாமல் மணமகன் பெண்ணின் தந்தை அல்லது அவள் உறவுக்கு பணம் அதிகம் தந்து மணம்முடிப்பது ஆஸுரம் ஆகும் 6) காந்தர்வம் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொண்டு காமத்தில் தாலிகட்டாமல் உறவு கொள்வது என்பது காந்தர்வம் ஆகும் 7) ராக்ஷஸம் என்பது ஒரு பெண்ணின் மேல் ஒருதலைக்காதல் கொண்டு அவளை உறவினர்கள் தடுத்தும் உறவினர்களை  துன்புறுத்தி பெண்ணையும் துன்புறுத்தி தூக்கி சென்று “பலாத்காரம் “ செய்ய அது ராக்ஷஸம் ஆகும்  கடைசியாக வருவதுதான் 8) பைசாசம் என்பது உறங்கி கொண்டு இருப்பவளையோ அல்லது மயக்கத்தில் இருப்பவளையோ  இயல்பாக மனநிலை சரியில்லாத பெண்ணையோ அல்லது ஒழுக்கம் இல்லாத பெண்ணை பலவந்தமாக உறவு கொள்வது ,அவ்வாறு செய்பவன் பாவிகளுக்குள்ளும் மஹாபாவியாகி விடுகிறான் என மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது 


No comments:

Post a Comment