Friday, 19 June 2015

பொருத்தம் பார்ப்பது ஏன்?

மக்களுள் பொரும்பாலோருக்கு குறிப்பாகப் படிப்பு வாசனையறியாத பாமர மக்களுக்கு பிறந்த தேதியோ மாதமோ வருஷமோ நேரமோ தெரிவதில்லை படித்தவர்கள் பலருக்கும் பிறந்த தேதி மட்டும் தெரிந்திருக்கும். மிகப் பலருக்குப் பிறந்த நட்சத்திரங்கள்கூட தெரிந்திராது இவைஎல்லாவற்றையும் விட பகுத்தறிவு நாத்திகம் பேசுவோருக்கு ஜோதிடத்தின் மீது வெறுப்பும் வேண்டாமையும் இருக்குமே தவிர அவர்களும் தங்களுடைய சொந்த ஜாதகங்களை பார்க்காமல் இருப்பதில்லை தம்முடைய பிள்ளைகளுக்கோ பெண்களுக்கோ திருமணம் செய்யும் எண்ணம் தோன்றும்போது தான் ஜாதகப்பொருத்தம் பார்ப்பது அவசியம் என்பதை அவர்களே நிர்பந்த்த்தினால் உணர்கிறார்கள் ஏனென்றால் பாரத சமுதாயம்பண்பாட்டுச் சிறப்புடைய சமுதாயம் இங்கு வாழும் மக்களுக்கு அவர்கள் இரத்திலேயே ஊறியுள்ள இந்த உறுதியை எந்தவித மாற்று கருத்துகளாலும் மாற்ற முடிவதில்லை.திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது சம்பிரதாயமுறை மரபுவழிச்செயல் ஆகையால் ஜாதகமல்லாதவர்க்கும் பிறந்த நட்சத்திரம் என்பதை மட்டுமே தெரிந்தவர்களுக்கும் அல்லது சொந்தப்பெயர் மட்டுமே நன்றாக தெரிந்தவர்களுக்கும் பயன்படுத்துவதற்குத் தான் இந்தப் பத்துவிதப்பொருத்தங்களும் பார்ப்பது அவசியமாகிறது இது ஜோதிட தொழிலின் நுட்பமான தொழில் முறையே தவிர ஜோதிடசாஸ்திரப்படி மணமகன் மணமகள் ஆகியோரின் ஜாதங்களைப் பார்ப்பதுப் பரிசீலிப்பதுதான் திருமணப் பொருத்தங்களை மிகச்சரியாகப் பார்க்கும் முறையாகும்
கைவைத்தியத்தை விடச் சிறப்பிற்குரிய வைத்திய சிகிச்சைதான் சிறப்பான பயனையளிப்பதாக இருக்கும் நட்சத்திரப்பொருத்தங்களான பத்துப் பொருத்தங்களும் பொதுவானவை ஜாதகப் பொருத்தங்கள் சிறப்பானவை.ஜாதகப்பொருத்தங்கள் நுட்பமானை உண்மை நிலையை ஊடுருவிப் பார்த்து உறுதி செய்யக்கூடியவை இதனால்தான் நட்சத்திரத்தை ஸ்தூலப் பொருத்தமாகவும் ஜாதகபொருத்த்தை சூஷ்மப் பொருத்தமாகவும் கருதுகிறார்கள்.மனிதனின் உடல் ஸ்தூலம் உயிர் சூஷ்ம்ம் ஆகையால் நட்சத்திர அடிப்படையில் பார்க்கும் பொருத்தங்களை மட்டுமே திருமணபொருத்தங்கள் என்று சொல்லிவிடமுடியாது நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது ஜாதகமில்லாத போது பயன்படுத்துவது ஜாதகமிருந்தாலும் பார்ப்பதால் நன்மை தானே தவிர தீமை எதுவுமில்லை ஆனால் பத்துபொருத்தங்கள் என்று நட்சத்திர அடிப்படையில் வகுக்கப்பெற்ற பொருத்தங்கள் பலருடைய வாழ்க்கையிலும் சரியானபயனை அளிப்பவைதான் என்றாலும் அதே பொருத்தங்கள் மட்டும் பார்ப்பது பலருக்குப்போதாமலும் இருக்கலாம்.அதனால்தான் திருமணம் செய்வதற்கு முன் ஆணின் ஜாதகத்தைப் பெண்வீட்டாரும் பெண்ணின் ஜாதகத்தை ஆண் வீட்டாரும் வாங்கிச்சென்று தகுதியும் திறமையும் வாக்குப் பலிதமுடைய ஜோதிடர்களைக்கொண்டு திருமணப்பொருத்த்தைபார்க்க சொல்வது வழக்கமாகிவிட்டது பத்துப்பொருத்தங்களே திருமணப்பொருத்தம் பார்ப்பதற்குப் போதும் என்றால் இத்தகைய ஜாதகப்பரிமாற்றத்தைச் சம்பந்திமார்கள் செய்து கொள்ளமாட்டார்கள்.
ஜாதகப் பொருத்தங்கள் மட்டுமே பார்த்தால் போதாதா நட்சத்திர ரீதியான பத்துப்பொருத்தங்களையும் ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு இடமே இல்லை ஏனென்றால் ஜாதகப்பொருத்தம் சரியாக இருந்தாலே போதுமானது அத்துடன் நட்சத்திரப்பொருத்தமும் இருந்தால் அழகான பெண்ணுக்கு அழகான ஆடை ஆபரணங்கள் அணிவிப்பது போலத்தான் அழகுக்கு அழகு செய்வதாக அமையும் நட்சத்திரப்பொருத்தங்கள் இல்லாமல் ஜாதகபொருத்தங்கள் மட்டுமே இருந்தாலும் போதும் திருமணத்தைச்செய்து வைப்பதில் எந்த தவறும் இல்லை அப்படிச் செய்வதுதான் சரியானமுறை சம்பிரதாயமுறை அதுவே தருமநீதி.பத்துப்பொருத்தங்களுள் சில பொருத்தங்கள் மட்டுமே எப்போதும் பொருந்தி இருக்கும்முடியும் எல்லா பொருத்தங்களும் பொருந்திஇருக்கும் என்று சொல்லமுடியாது.ஆனால் ஜாதகப்பொருத்தம் பார்ப்பதில் நிச்சயமான தீர்க்கமானமான முடிவுக்கு வந்துவிடமுடியும் ஆண் ஒருவனுக்கு அவனது களத்திரபாவம் வலிமையாக இருந்து அவனையடையும் பெண்ணுக்கு மாங்கல்ய பாவம் உறுதியாக அமைந்திருந்தால் அவர்களிருவரும் தீர்க்காயுளுடன் தான்வாழ்வார்கள் அவர்களுடைய தீர்க்காயுளை வேறு எந்தச்சக்தியாலும் மாற்றிவிடமுடியாது தீர்க்காயுளுடன் வாழ்ந்தால் போதுமா வாழ்க்கையில் சுகமாக இருப்பதற்கு வேண்டிய சகலஐசுவரியங்களையும் சுகபோக சௌகரியங்களையும் அவர்கள் இருவருமே பெறவேண்டும் அதற்கு இருவரின் ஜாதகங்களிலும் பாக்கியாதிபதியும் தனாதிபதியும் இலாபாதிபதியும் சுகாதிபதியுமான கிரகங்கள் வலிமையாக அமைந்திருக்கவேண்டும் அந்தக்கிரகங்கள் அத்தகைய நிலையிலும் வலுப்பெற்றிருந்தால் தான் அவர்கள் அத்தகைய செளபாக்கிய வாழ்வை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள் என்பது நிச்சயம் நட்சத்திரப்பொருத்தங்களே இல்லாமற்போனாலுற்றங்கூட ஜாதகப்படி உள்ள செளபாக்கியங்களும் தீர்க்காயுளும் நிச்சயமாக்க் குறைந்து விடுவதற்கில்லை.
சிலவகைப்பொருத்தங்கள் இல்லையென்றால் அவற்றை யாராலும் ஏற்படுத்திவிடமுடியாது ஆனால் அந்த இல்லாத பொருத்தங்களால் ஏற்படும் குறையை போக்குவதற்குரிய கிரகபலம் அந்த ஆண் பெண் ஜாதகங்களில் இருக்கிறதா என்பதைப்பார்க்க வேண்டும் ஆகவே ஜாதக கிரகபலந்தான் அஸ்திவாரத்தைப்போன்றது அஸ்திவாரம் எப்போதுமே உறுதியாகவும் நிலைத்து நிற்க்க் கூடியதாகவும் நிலைத்து நிற்க்க கூடியதாகவும் இருக்கவேண்டும்.இதுவரை பத்துப்பொருத்தங்கள் என்னென்ன என்பதையும் அவற்றின் ஒவ்வொன்றைப்பற்றிய விவரங்களையும் விளக்கமாக்க் கண்டோம் இவற்றைக் கொண்டு நீங்கள் திருமணத்திற்குரிய பத்துப்பொருத்தங்களை எளிதாக்க் கண்டறிந்துகொள்ளவும் செய்யலாம்கூறவும்முடியும் ஆனால் ஜாதகப்பொருத்தம் என்பதைப் பற்றியும் விளக்கமாக்க் கூறிவிட்டால் நீங்களும் அவற்றை அறிந்து கொண்டு பத்துப் பொருத்தங்களின் முக்கியத்துவத்துக்கும் ஜாதகப்பொருத்தங்களின் முக்கியத்துவத்துக்கும் உள்ள தாரதம்மியத்தை நீங்கள் அறிந்து கொண்டு விடமுடியும் திருமணங்கள் அதிகமாக நிகழும் மாதங்களில் தான் திருமணப்பொருத்தம் பார்ப்பவர்கள் ஜோதிடர்களை அணுகுவது வழக்கம் ஓர் ஆணுக்குப் பத்துப்பெண் ஜாதகங்கள் ஒரு பெண்ணுக்கு பத்து ஆண் ஜாதகங்கள் வீதம் ஜோதிடரிடம் கொடுத்து அவற்றுள் எந்தஜாதகம் பொருந்துகிறது என்று சொல்லுங்கள் என்று கேட்பார்கள் வரதட்சனை வாங்கும் வழக்கமுள்ள இந்த காலத்தில் இந்தப்பொருத்தம் பொருந்திவிட்டாலே போதும் வரனுக்கு உரியவரதட்சனையும் கூடுதலாகிவிடும் ஒருபெண்ணுக்குப் பொருத்தமான கணவன் அமைவது தவங்கிடக்கும் முனிவனுக்குத் தெய்வம் வரம் தருவதைப்போன்றதாக இருப்பதாலேயே ஆணின் ஜாதகத்தை வரனின் ஜாதகம் என்கிறார்கள்.
ஜோதிடம் என்பது பரந்துவிரிந்து விளங்கும்சமுத்திரத்தை போன்றது ஒவ்வொரு ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட நட்சத்திரப்பொருத்தங்களை நட்சத்திரப்பொருத்தங்களை பார்த்துப்பொருத்தம் சொல்வது ஜோதிடர்களுக்கு எளிதாக இருப்பதாலும் மக்களிடையே தோஷமுள்ள ஜாதகங்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்திருப்பதாலும் இந்தப் பொருத்தங்களைப் பார்க்கும் வழக்கம் பரவலாக உள்ளது.உலகம் எங்கிலும் உள்ள தேசங்களில் எல்லாம் இது போலப் பத்துப் பொருத்தங்களையோ ஜாதகங்களையோ பார்த்துத் திருமணம் செய்வதில்லை புராதனப் பெருமையும் பண்பாடும் உடைய நாடுகளில்தான் பொருத்தம் பார்த்துத் திருமணங்கள் நடத்தப்பெறுகின்றன வடநாட்டிலுங்கூட ஜாதகப்பொருத்த்தைதான் பார்க்கிறார்களே தவிர பத்துப்பொருத்தங்களை அவ்வளவாகப் பார்ப்பதில்லை ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் அரேபியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ளவர்கள் தங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்வதற்கு முன்பு இந்தப் பொருத்தங்களையா பார்க்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டவர்கள் தீர்க்காயுளுடன் கணவன் மனைவியுமாக சௌகரியமாகவும் சகலவசதிகளுடனும் வாழவில்லையா என்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்படவேண்டிய கேள்விகள்தாம் என்றாலும் நாம் வாழும் தேசத்தின் சம்பிரதாய முறைகளை நாம் பின்பற்றுவதுதான் நமது மரபு என்பதுமட்டுமல்ல நமது முன்னோர்கள் நமக்குவகுத்து கொடுத்த சாஸ்த்திர வலிமையினால்தான் மற்றமேலைநாடுகளில் ஏற்படும் கடுமையான மணவாழ்க்கை பிணக்குகளும் விவாக இரத்துகளும் கணவன்மனைவிப் பிரிவுகளும் போன்ற பல பிரச்சனைகள் நம் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கே முக்கிய காரணம் இந்தப்பொருத்தங்களைப் பார்த்த பிறகே திருமணம் செய்வதாகும்.இன்றைய நிலையில்நமது நாட்டிலுங்கூட விவாகஇரத்துகளும் மணவாழ்க்கைபிணக்கு வழக்குகள் ஆகியவை அதிகமாயிருப்பதற்கு உரியகாரணம் மேலைநாட்டு நாகரிக மோகத்தினால் நமது சமூக சம்பிரதாய முறைகளைச் சிலர்கைவிட்டதேயாகும் மேலைநாட்டு நாகரிகத்தை ஏற்பவர்களும் மேலைநாடுகளிலும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற நமது இந்தியர்கள் எங்கிருந்தாலும் இத்தகையபொருத்தங்கள் பார்த்தபிறகு தான் தமது பெண்களுக்கோ பிள்ளைகளுக்கோ திருமணம் செய்து வைக்கிறார்கள்

No comments:

Post a Comment