Tuesday, 16 June 2015

சாமுத்திரிகா லக்ஷ்ணம்

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]
சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..அவைகள்ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்ஆறு இடம் மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள்  இருந்தாலும் மொத்தம் 32 உயர்ந்து இருக்க வேண்டும்ஏழு இடம் சிவந்து இருக்க வேண்டும்மூன்று இடம் விசாலமாக இருக்க வேண்டும்மூன்று இடம் குறுகி இருக்க வேண்டும்மூன்று இடம் தாழ்ந்து இருக்க வேண்டும்நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.கண்2.கை3.கதுப்பு4.முழுங்கால்5.மூக்குஇவைகள் ஆகும்மிருதுவாக இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.மயிர்2.விரல்3.நகம்4.தோல்5.பல்இவர்கள் ஆகும்உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்1.நெற்றி2.தோள்கள்3.வயிறு4.அக்குள்5.மார்பு6.புறங்கைஇவைகள் ஆகும்சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்1.கடைக்கண்2.உள்ளங்கை3.நகம்4.வாய்5.ஆண்குறி [ அல்லது ]பெண்குறி6.உள்ளங்கால்7.உதடுஇவைகள் ஆகும்விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.மார்பு.  2. இரு பீஜங்கள் ஆகும் குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.கழுத்து2.முழங்காலின் கீழ்3. ஆண் குறிதாழ்ந்து இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.நடுமார்பு2.நெற்றியின் கீழ் பகுதி3.தொந்திஇவைகள் ஆகும்இந்த தன்மைகள் குறையாது இருப்போர்கள் அரசனுக்கு இணையாக கிரீடம் அணியும் அளவிற்க்கு வாழ்வான்

 சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 2                     தலையின் லக்ஷ்ணம்  1] வட்டமாக பருத்தமான தலை அமைப்பை கொண்டவர் செல்வந்தராக இருப்பார்2] வட்டமாக சிறுத்த தலை அமைப்பை கொண்டவர் அழகும் செல்வமும் சேரப்பெற்றவர்3] நீண்ட தலையை கொண்டவர் சதா எந்நாளும் வறுமை நிலையை கொண்டவர்                      தலைமயிர் லக்ஷ்ணம் 1]பிளவுபட்ட தலைமயிர் கொண்டவர் மிகுந்த செலவுகள் கொண்டு சுகமான போஜனம் [சாப்பாட்டிற்க்கு வழியற்ற நிலை] 2] பருத்த கருத்த மயிருள்ளவர் செல்வநிலையை கொண்டவர்.3] பருத்த ஆனால் கொஞ்சம் சிவந்தநிலை மயிர் உள்ளவர் வறுமைநிலையிலேயே இருப்பார்.4]யானைமுடியை போன்ற அமைப்புள்ளவருக்கு வியாபார விருத்தி நன்றாக அமையும்5]மிகுந்த அடர்த்தியாகவும் நெருக்கமான மயிர் அமைப்பு கொண்டவர் தீர்க்க ஆயுள் உள்ளவர் 6] சிறுத்த சிவந்த நிறமுள்ள மயிர் அமைப்பை கொண்டவர் “அதிக காமம் கொண்டவர்”7] சுருண்ட சொற்ப மயிர் உள்ளவர் விகாரமும் சொற்ப செலவுகளை கொண்டவர் 8] மிகுந்த நீண்ட மயிர் உள்ளவர் அதிக பழிசொல்லுக்கு ஆளாவார்.            தலையில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம் 1] தலையில் ஒரே ஒரு சுழி வலமாக பெற்றவர் அதிகமான சொந்தபந்தங்கள் அமைந்தவராக இருப்பார். 2] தலையில் ஒரே ஒரு சுழி இடப்புறமாக அமையப்பெற்றவர் வாழ்க்கை  வறுமை நிலையில் இருக்கும் 3] இரண்டு சுழியும் இடம்புரியாக [இடமாக] அமையப்பெற்றவர் அற்பாயுளும் வறுமை நிலையும் கொண்டவர். 4] இடப்புறத்தில் வலமாக சுழி இருக்க பெற்றவர் பூர்ண ஆயுளும் மிகுந்த செல்வம் உடையவராக இருப்பார். 5] மூன்று சுழி இடப்புறத்தில் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் விரைவில் தன் தாய்-தந்தையை இழப்பார். 6] மூன்று சுழியும் தொங்கினாற்ப்போல் கூடி இருக்கப்பெற்றவர் வெட்டுப்பட்டு இறக்கும் நிலையை தரும். 7] இரண்டு சுழியில் ஒரு சுழி வலம்புரியாகவும் ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப்பெற்றோர் கொஞ்சம் காலம் வறுமையும் பின்நாளில் செல்வநிலையும் அடைவார்கள்                 முகத்தின் லக்ஷ்ணம் 1] சிறுத்தமுகம்  உடையவர் அழகுள்ளவர்  2] சிங்கம்போல பருத்தமுகம் உடையவர் யாருக்கும் யோக்கியனானாக நாணயஸ்தனாராக இருப்பார். 3]பருத்து முகமும் கருத்து முகத்தில் மிகுந்த மயிர் உள்ளவர் யாரையும் வசீகரிக்கும் தன்மையும் செல்வமும் உள்ளவராக இருப்பார் 4] சிவந்த மயிர் உள்ள முகம் உள்ளவர் கபட நாடகதாரியாக இருப்பார். 5] மிருதுவான முகத்தில் மயிர் உள்ளவர் அழகனாக இருப்பார் முகத்தில் அமையும் சுழியின் லக்ஷ்ணம் 1] முகத்தில் வலதுபக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் சுகமான போஜனம் அமையப்பெற்றவர். 2] முகத்தில் இடதுபக்கத்தில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர் சிலநாள் வறுமையும் சில நாள் செல்வநிலையும் மாறி மாறி அமையப்பெற்றவர். 3] முகத்தில் இடதுபக்கம் ஒருசுழி வலம்புரியாக அமையப்பெற்றவர் நல்ல நினைவாற்றல் கொண்டு நினைத்ததை முடிக்கும் வல்லவன். 4] தாடையின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் அதிக செல்வந்தர் ஆக இருப்பார்கள். 5] தாடையின் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் வறுமையும் வியாதியும் உடையவர் உள்ளவர்கள்.                  நெற்றி சாமுத்திரிக்கா லக்ஷ்ணம் 1]நெற்றியின்  நான்குவிரல் அளவு அகலம் இருக்கப்பெற்றவர்  நல்ல ஞானியாக இருப்பார்கள்2] நெற்றி மூன்றுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் நல்லஞானமும் செல்வமும் அமையப்பெற்றவர் ஆவர்.3] நெற்றியில் இரண்டுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர்.4] நெற்றியில் ஒருவிரல் அகலம் மட்டுமே இருக்கப்பெற்ற நபர் மிகுந்த மூடத்தன்மை உடையவர் ஆக இருப்பார்கள்            நெற்றியில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம் 1] நடு நெற்றியில் ஒருசுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர். 2]நடு நெற்றியில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர் சதா எந்நாளும் வறுமைப்பிடியில் வாழ்வார்கள். 3] முன்நெற்றியில் இடமாக ஒருசுழி இருக்கப்பெற்றவர் விரைவில் தாய்தந்தை இழக்கும் நிலையில் ஏற்ப்படுத்தும். 4] முன்நெற்றியில் இருசுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவர் காமவெறியால் தவறு செய்வதும் பாவசெயல்களை செய்வராகவும் இருப்பார்கள். 5] நெற்றியிலும் அதிகமான மயிர் மிகுந்து இருப்பவர்கள் அதிகமான கபட நாடகதாரியாக இருப்பார்கள்..


சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 3 நெற்றியில் ஐந்து  கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 100 வயது வாழ்வார்கள். நெற்றியில் நான்கு கீறல் இருக்கப்பெற்றவர் 80 வயது வாழ்வார்கள் நெற்றியில் மூன்று கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 90 வயது வாழ்வார்கள். நெற்றியில் இரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 40 வயது வாழ்வார்கள். நெற்றியில் ஒரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 20 வயது வாழ்வார்கள். நெற்றியின் நடுவே ஒருநரம்பு குறுக்காக எழும்பி இருக்கப்பெற்றவர் நல்ல குணவானாகவும் செல்வ அதிபதியாகவும் இருப்பார்கள் நெற்றியில் வெகுநரம்புகள் புடைக்க இருக்கப்பெற்றவர்கள் சதா வறுமையும் வியாதியும் கூடியவராக இருப்பார்கள்.நெற்றியில் மயிரே இல்லாத அமைப்பில் இருக்கப்பெற்றவர் தற்பெருமை நிறைந்த ஆசாமியாக இருப்பார்கள்                புருவத்தின் லக்ஷ்ணம் புருவத்தின் கடைமயிர் சாய்த்து கறுத்து மிருதுவாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து நிறைந்தவர் புருவத்தின் மயிர் பருத்து இருக்கப்பெற்றவர் பலவான் கீழ்நோக்கிய அமைப்பில் இருக்கப்பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார் இருபுருவமும் கூடி இருக்க பெற்றவர் தன் தாய் தந்தையை விரைவில் இழக்கும் நிலையை ஏற்படுத்தும்             கண்கள் லக்ஷ்ணம் கண் இடமாய் சரியாக செதுக்கியதுபோல கடைகண் சிவந்து இருக்கப்பெற்றவர் அதிக செல்வம் உடையவர் ஆவர் இமை மயிர்கள் அதிகமாக அடர்த்தியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள் கண்கள் ஒன்று சிறுத்தும் ஒன்று பெறுத்தும் இருக்கப்பெற்றவர் வியாதியுடையர் ஆக இருப்பர் சிமிட்டும் கண் இருக்கப்பெற்றவர் கபடியாக இருப்பார் மறுகண் இருக்கப்பெற்றவர் கபடியாக பொய்யனும் வறுமையுடையனும் ஆக இருப்பார்கள் சிறுவிழியாக இருக்கப்பெற்றவர்கள் ஆயுள் விருத்தி அதிகமாக கொண்டவராக இருப்பார்கள் விழிகள் கறுத்து இருக்கப்பெற்றவர்கள் வெகு பெண்களை சேர்ந்து இன்புறும் போகியாக இருப்பார்கள் விழிகள் தேன்நிறமாக இருக்கப்பெற்றவர்கள் காமியாகவும் கபடியாகவும் இருப்பார்கள் வெண்மையாக இருக்கப்பெற்றவர்கள் கபடியாக இருப்பார்கள்              கண்களின் மச்ச லக்ஷ்ணம் வலதுகண்ணில் வெள்ளை விழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் புக்திகூர்மை இருக்கப்பெற்றவர்கள் இடதுகண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் காமவிகாரியாக இருப்பார்கள் பிறவிக்குருடனாக இருக்கப்பெற்றவர் பரவிய மனக்குறை இருக்கப்பெற்றவர் விழிக்குருடன் ஆனால் மிச்சிய புக்திசாலியாக இருப்பார்கள்             மூக்கு லக்ஷ்ணம் மூக்கு தன் கையால் மூன்று அளவு இருக்கப்பெற்றவர் ஆயுளும் செல்வநிலையும் இருக்கப்பெற்றவர் .அதற்க்கும் மேலே இருக்கப்பெற்றவர்கள் கடின போகம் உடையவர் .அளவு குறைய இருக்கப்பெற்றவர் அற்ப போகி உடையவர். மூக்கு பறுத்து இருக்கப்பெற்றவர்கள் செல்வந்தனாக இருப்பார்கள் மூக்கு ஒருபுறம் சிறுத்து இருக்கப்பெற்றவர்கள் சதா வியாதியுடன் இருப்பவர் மூக்கு நடுத்தரமாக இருக்கப்பெற்றவர்கள் கபடமும் வறுமையும் கூடியவரும் ஆக இருப்பார்கள்         மூக்கின் மச்ச லக்ஷ்ணம் மூக்கின் நுனியில் மச்சம் இருக்கப்பெற்றவர் சொற்ப செலவுகள் உடையவர் மூக்கின் வலபுறம் மச்சம் இருக்கப்பெற்றவர் செல்வநிலையை உடையவர்கள் மூக்கின் இடபுறம் மச்சம் இருக்கபெற்றவர் வறுமைநிலையை உடையவர்கள்          வாய் லக்ஷ்ணம் வாய் சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர் வாய் சிவந்து இருக்கப்பெற்றவர் அழகு உடையவர் வாய் கறுத்து இருக்கப்பெற்றவர் மிடுக்கானவர் வார்த்தையில் வலுஇருப்பவர் முன்கோபமும் கபடில்லாத தன்மையும் உடையவர் வாய் மிருதுவாக இருக்கப்பெற்றவர் கபடும் நற்குணமும் உடையவனாக இருப்பார் பிறவி முதல் ஊமையாக இருக்கப்பெற்றவர் வெகுபாவியாகவும் கபடியாகவும் இருப்பார்            வாயில் ரேகை லக்ஷ்ணம் வாய்க்குள்ளே சங்கு சக்ரம் போலிருக்க பெற்றவர் அதிகமான சம்பத்து உள்ளவர் வேலாயுதம் போல் இருக்க பெற்றவர் நல்ல ஞானம் இருக்க பெற்றவர் கமலம் (தாமரை) போல இருக்க பெற்றவர் வித்தை உடையவர் சாமரம் போல் இருக்க பெற்றவர் நீண்ட ஆயுளும் செல்வமும் இருக்க பெற்றவர் அங்குசம் போல இருக்க பெற்றவர் வெற்றியை அடைபவராக இருப்பார்கள் குடைபோல இருக்க பெற்றவர் செல்வநிலையை உடையவர் பாம்பு போல இருக்க பெற்றவர் கபடும் உடையவர்  
சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 4வாயின் சுழி ல்க்ஷ்ணம்வாயில் வலம்புரிசுழி இருக்கப்பெற்றவர் தைரியவார்த்தை உடையவர் ஆவர்.இடம்புரியாக சுழிய இருக்கப்பெற்றவர் வறுமையுடனே வாழ்க்கை அமையும்.பற்கள்  லக்ஷ்ணம்பற்கள் சிவந்து இருக்கப்பெற்றவர் அழகுடையவர் பற்கள் விலகி இருக்கும் அமைப்பை பெற்றவர் காமம் நிறைந்தவர் பற்கள் பருத்திருக்க பெற்றவர் தரித்திரவான் தெத்துபற்க்கள் அமையப்பெற்றவர் முன்னே சொத்துக்களை உண்டாக்கி பின்னர் உடனே அழிக்கும் வித்தைவான்மேற்பல் கீழ்பல் நடுப்பல் ஆகியவைகளோடு சிறுபல் அமையப்பெற்றவர் செல்வந்தர் ஆகினும் சுயபுக்தியை இல்லாதவர் ஆக இருப்பார்கள்உதடு சிறுத்திருக்க பெற்றவர் செல்வந்தர் கன்னம் நெடுகி இருக்க பெற்றவர் சகல சகல சம்பத்து நிறைந்தவர் கன்னம் தாழ்வாய் பருத்தாற்போல இரண்டாக  இருக்கப்பெற்றவர் கபட நாடகதாரி.கன்னம் ஒன்றி இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்.கன்னத்தின் தாழ்வாயில் வலசுழி இருக்கப்பெற்றவர் நல்ல உணவை உண்டுவாழ்வார்கன்னம் இடசுழி இருக்கப்பெற்றவர் எந்நாளும் வறுமை உடையவர்  காது லக்ஷ்ணம் காதின் மேல் செவி இடமாக இருக்கப்பெற்றவர் முன்கோபம் கொண்டவர்  காது குறுகி இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்காது உள்ளே மேல்செவி மடங்கி இருக்கப்பெற்றவர் கபடுநாடகதாரி.நடுவில் காது பறுத்து இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர் காது உள்செவி வலம்புரிசுழியாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து உடையவர்காது உள்செவி இடம்புரிசுழியாக இருக்கப்பெற்றவர் வறுமை உடையோர்காதில் முடி பருத்து கறுத்து மேல் நோக்கி இருக்கப்பெற்றவர் செளக்கர்யம் உடையவர்காதில் முடி பருத்து கறுத்து கீழ் நோக்கி இருக்கப்பெற்றவர் பஞ்சம் உடையவர்கழுத்தின் லக்ஷ்ணம் கழுத்தில் தன்கையால் நான்கு அங்குலமும் பாடும்போது நரம்புகள் எழாமல் பிறழாமல்  இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர் நரம்புகள் காணப்பெற்றவர் நோய்நொடி உடையவர்கழுத்து ஒடுங்கி இருக்கப்பெற்றவர் வறுமையும் கபடும் உடையவர் கழுத்தில் நான்குபிறை கீரல் இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான் கழுத்தில் இருபிறை கீரல் இருக்கப்பெற்றவர் கபடதாரி.கழுத்தில் ஒருபிறை கீரல் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிக்கும் வல்லவன் ஆவர்ஒருபிறை கீரல்கூட இல்லாதவர் மனோவியாதி உடையோன் பிடரி லக்ஷ்ணம் பிடரியில் இரண்டு கீரல் இருக்கப்பெற்றவர் சுகபோசனம் உடையவர் பிடரி உயர்ந்து இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர் பிடரி எந்நாளும் உலர்ந்து இருக்கப்பெற்றவர் சதாவறுமை உடையவர்தோள்கள் லக்ஷ்ணம் தோள்கள் இரண்டும் உயர்ந்து இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்தோள்கள் தாழ்ந்து இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்தோள்கள் சரிவாக இருக்கப்பெற்றவர் மிகுந்த அறிவாளி இருதோள்களில் அதிகமான மயிர் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிப்பதில் வல்லவன்அக்குகள் லக்ஷ்ணம் அக்குகள் உயர்ந்து மயிர் சிறுத்து கருத்து இருக்கப்பெற்றவர் தூக்கம் இழந்தவர் நல்ல செல்வநிலை உடையவர்அக்குகள் கற்றாழை நாற்றத்துடன் இருப்பவர் அதிகமான காமவிகாரி ஆக இருப்பார்கள் அக்குகள் சுண்ணாம்பு நாற்றம் உடையவர் நோய்நொடியுடன் இருப்பார்கள் அக்குகள் யானைமூத்திர நாற்றத்துடன் இருப்பவர்களுக்கு குறிபிட்ட நேரத்தில் உண்ண முடியாத அற்பபோகி ஆவர்அக்குகள் இளநீரை போன்ற வாசனை உடையவர் தீர்க்கபோகி ஆவர்அக்குகள் தாமரைமலரின் வாசனை கொண்டவர் அனேக பெண்களை அணைவார்அக்குகள் ஒருமயிர் இல்லாது இருக்கப்பெற்றவர் கோழிபோக உடையவர் அக்குகள் மயிர் நெருங்கி தாழ்வாக இருக்கப்பெற்றவர் வறுமைநிலை உடையவர் கைகள் லக்ஷ்ணம் கைகள் முழங்கையின் கீழ்வரை நீண்டு இருக்கப்பெற்றவர் லக்ஷ்மி கடாஷம் கொண்டு அதிக செல்வமும் தீர்க்க ஆயுளும் இருப்பவர். முழங்க்கால் மட்டும் இருக்கப்பெற்றவர் செல்வம் மட்டுமே உடையவர். முழங்காலுக்கு ஒரு விரல் அளவு மேலே இருக்கப்பெற்றவர் நல்ல போஜனம் உடையவர்.முழங்காலுக்கு இருவிரல் மேலே இருக்கப்பெற்றவர் சொல்வாக்கு காப்பாற்றும் எண்ணம் உள்ளவர்.மூன்றுவிரல் மேலே இருக்கப்பெற்றவர் அழகும் ஐஸ்வர்யம் உடையவர்.முழங்காலுக்கு மேலே நான்குவிரல் அளவு இருக்கப்பெற்றவர் அற்பசெல்வம் உடையவர்.முழங்காலுக்கு மேலே ஐந்து விரல் அளவுக்கு இருக்கப்பெற்றவர் சதா வறுமையும் கஷ்டமும் நிறைந்தவர்.கைகள் திரண்டு மிருதுவாக இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர்,கைகள் கரடியை போல இருக்கப்பெற்றவர் சூது நிறைந்தவர்.கைகள் மிகப்பருத்து இருக்கப்பெற்றவர் கிலேசமுடையவர்.மூக்கு சிறுத்து இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர்.கை விரல் அமைப்பு கையின் சிறுவிரல் [சுண்டுவிரல்] மோதிர விரல் அளவு இருக்கப்பெற்றவர் 100 ஆண்டு வாழும் ஆயுள் தீர்க்கம் உள்ளவர்.மோதிரவிரல் நடுவிரல் அளவுக்கு இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும் சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கு சரியாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 80 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கு சற்றே குறைவாக  இருக்கப்பெற்றவர் ஆயுள் 75 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும் நடுவில்  சற்று மேலே இருக்கப்பெற்றவர் ஆயுள் 70 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும்  சரியாக நடுவில் இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும்  சரியாக நடுவில் கொஞ்சம் கீழாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 40 ஆகும்.இதற்கும் கீழாக அமைப்பில் இருப்போர்கள் எல்லாம் அற்பாயுள் என அறிக

சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 5 உள்ளங்கை ரேகை லக்ஷ்ணம் உள்ளங்கை ரேகை அற்பமாய் சிவந்து சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வமும் ஆயுளும் உடையவர் . ரேகை கனத்து இருக்க பெற்றவர் துக்கமுடையவர் வலதுகையில் சங்கு சக்கரம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த திரவியம் தன்னிடம் வைத்து இல்லையென கேட்போர்களுக்கு அள்ளிதரும் வள்ளல். மச்சரேகை அமைப்பை பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர் உள்ளங்கைரேகை குடைபோல இருக்கப்பெற்றவர் தயாளகுணவான் தமரகம் போல இருக்கப்பெற்றவர் பேரும் புகழும் உடையவர் வாள்போல இருக்கப்பெற்றவர் வீரியகுணம் கொண்டவர் கும்பம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த பொறுமைசாலி சந்திரன் போல இருக்கப்பெற்றவர் வித்தைகள் அதிகம் கற்றவர் வெண்சாமரம் போல இருக்கப்பெற்றவர் வெகுஜன ஆதரவுடன் வாழ்வார்  தாமரைபுஷ்பம் போல இருக்கப்பெற்றவர் எந்நாளும் லக்ஷ்மிகடாஷ்சம் நிறைந்தவர் மாலைபோல இருக்கப்பெற்றவர் போகபாக்கியம் பெற்றவர் வேல்போல இருக்கப்பெற்றவர் எடுத்தகார்ய வெற்றியாளர் ஆவர் லிங்கம் போல இருக்கப்பெற்றவர் சிவபக்தன் ஆவர் ரிஷபம் போல இருக்கப்பெற்றவர் வாகன விருத்தி உடையவர் மணிக்கட்டு முதல் நடுவிரல் நுனி வரை ஒரேரேகை இருக்கப்பெற்றவர் ஞானி ஆவார் அந்த ரேகை நடுவிரல் அடியுடன் நிற்கப்பெற்றவர் வித்தைகள் பல கற்றவர் அது ஆட்காட்டி விரல் அடிவரை வந்து இருக்கப்பெற்றவர் செல்வநிலை அதிகம் உடையவர் அந்த ரேகை மோதிரவிரல் வடிவரை வந்து இருக்கப்பெற்றவர் ஆபரணமும் அணிகலனும் அதிகம் பெற்றவர் ஆவர் அந்த ரேகை சுண்டுவிரல் அடி வரை வந்து இருக்கப்பெற்றவர் கிராம அதிகாரி & தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்ற பொறுப்புக்கு செல்வார்கள் பெருவிரல் வரை வந்திருக்கப் பெற்றவர் பலமாதரை அணைவார் உள்ளங்கையில் நிற்கப்பெற்றவர் செல்வமும் புத்ரபாக்யமும் உடையவர் அந்த ரேகை அமையப் பெறாதவர் உடல் ஊனம் அடையக்கூடும் உள்ளங்கை ரேகை பறுத்து இருக்கப் பெற்றவர் மகாபாவ செயல்களை மனசாட்சி இல்லாமல் செய்யும் நபராக இருப்பார். விரல்களின் கீரல்கள் லக்ஷ்ணம் பெறுவிரல் கீரலில் சங்கிலி போல ஒருரேகை இருக்கப்பெற்றவர் பலராலும் வணங்கப் பெறுவார். நடுகீரல் பிளவாய் இருக்கப்பெற்றவர் வெகுதான்ய சம்பத்து அடையப் பெற்றவர் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் அலைச்சல் உடையவர் நடுகீரல் பலபலவிதமாக அமையப்பெற்றவர் கபடுநாடகதாரி ஆவர் வலதுகை பெருவிரலில் கீரலுக்கு மேலே வலஞ்சுழி இருக்கப் பெற்றவர் வெகுவிதமான செல்வங்கள் உடையவர் இந்த இடத்தில் இடசுழி இருக்கப் பெற்றவர் ஆயுள்விருத்தி உடையவர் மடிப்புகள் இருக்கப் பெற்றவர் வறுமைநிலையே ஜீவனமாக இருக்கும் சுண்டுவிரலில் அடிக்கீரல் ஒன்று இருக்கப்பெற்றவர் வறுமை இருக்கப்பெற்றவர் சுண்டுவிரலில் அடிக்கீரல் பலவாறாக கீரல் இருக்கப்பெற்றவர் எடுத்த கார்ய வெற்றியாளர் ஆவர் சுண்டுவிரலில் நடுக்கீரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் சிக்கனம் நிறைந்தவர் பலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர் சுண்டுவிரலில் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்துக்கள் நிறைந்தவர் இடசுழி இருக்கப் பெற்றவர் நல்லபுத்திசாலி ஆவர் மடிப்புகள் இருக்கப் பெற்றவர் வீண்செலவுகளை உடையவர் ஆவார் நடுவிரலில் ஒர்ரேகை இருக்கப் பெற்றவர் சிக்கனம் உள்ளவர் மேலேபலரேகை இருக்கப் பெற்றவர் தாராளகுணவான் மேலே ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் வித்தைகள் நிறைந்தவர் மேலே பலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் மந்திரிஆகும் அமைப்புள்ளவர் மேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் புத்திமான் வலதுகை நடுவிரலில் அடியில் ஒரு கீரல் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர் வலதுகை நடுவிரலில் அடியில் பலவாறாக கீரல் இருக்கப் பெற்றவர் துன்பமுடையவர் நடுவிரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் வித்தைகள் பலகற்றவர் நடுவிரல் நடுகீரல் பலவாறாக இருக்கப் பெற்றவர் அதிக ஸ்திரி போகம் உடையவர் நடுவிரல் நடுகீரல் ஒன்றி இருக்க பெற்றவர் அற்பபோகம் உடையவர் நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் சகல போஜன வசதி உடையவர் நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் சுகபோஜனம் கிடைக்காத நிலையில் இருப்பார். நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே மடிப்பாக இருக்கப் பெற்றவர் வீண்செலவாளி வலதுகை அணிவிரல் அடியிறை ஒன்றை இருக்கப் பெற்றவர் நல்ல போகம் உள்ளவர் . இரண்டு அடியிறை கீரல் இருக்கப்பெற்றவர் வெகு பூசணம் இருக்கப்பெற்றவர் நடுயிறை ஒன்றை இருக்கப்பெற்றவர் அலைந்து திரிபவர் பலவாறாக இருக்கப்பெற்றவர் உறவுகளை ஆதரிப்பவர் மேலிறை கீரல் ஒன்றை இருக்கப் பெற்றவர் தேசாந்திரியும் காமுகனும் ஆவர் அணிவிரல் மேலிறை கீரல் மேல் வலசுழி இருக்கப் பெற்றவர் பலரிடம் விபசாரம் கொள்வர் [குறிப்பு சாமுத்திரிகா லக்ஷ்ணம் ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கு பொருந்தாது] இட சுழி இருக்கப்பெற்றவர் அதிகமான வார்த்தைகள் வீசுபவர் மடிப்பாக இருக்கப் பெற்றவர் மனம் ஒருநிலை இல்லாதவர் வலதுகை சுண்டுவிரல் அடியிறை ஒன்றாக பெற்றவர் கபடநாடகதாரி. ஆனால் பலவான் ஆவர். வேடிக்கையாக பேசும் ஆசாமி ஆவர். நடு இறை ஒன்றாக இருக்கப்பெற்றவர் அழகுடையவர் பலவான் ஆயுள்தீர்க்கவான். மேல் இறை ஒன்றாக இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யத்தை முடிப்பதும் பலவானாகவும் ஏழையாகவும் இருப்பார்கள் மேல் இறை மேல் வலசுழி இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான் ஆவர்!! இடசுழியாக இருக்கப்பெற்றவர் பலவான் ஆக இருப்பார். மடிப்பாக இருக்கப்பெற்றவர் வெகுசெலவாளி ஆவர். ஆணுக்கு இடது கையும் பெண்ணுக்கு வலது கையும் வைத்து பலாபலனை பார்க்க கூடாது!!! 


சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 6] வலதுகையில் ஆறுவிரல் இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வநிலையில் இருப்பார்கள்இடதுகையில் ஆறுவிரல் இருக்கப்பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள் சிறுவிரலில் கையோரத்தில் ஒரு ரேகை இருக்கப்பெற்றவர் ஒரு விவாஹம் அமையப்பெற்றவர் இரண்டு ரேகை இருக்கப்பெற்றவர் இருவிவாஹம் அமையப்பெற்றவர்மூன்று ரேகை இருக்கப்பெற்றவர் மூன்றுவிவாஹம் அமையப்பெற்றவர்நான்கு ரேகை இருக்கப்பெற்றவர் நான்குவிவாஹம் அமையப்பெற்றவர்இதுபோல எத்தனை ரேகை அமைகிறதோ அத்தனை மனைவியை அடைவார்கள்மணிக்கட்டுக்கு அருகில் கட்டைவிரலுக்கு எதிர்புறமாக எத்தனை ரேகை இருக்கிறதோ அத்தனை புத்திர ப்ராப்தி அமையப்பெற்றவர் ஆவர்புறங்கை மிருதுவாக இருக்கப் பெற்றவர் செல்வமும் அழகும் அமையப் பெற்றவர்புறங்கையில் நரம்புகள் எழ பெற்றவர் வறுமையை அனுபவித்து வாழ்வார் ரோமங்கள் அமையப் பெற்றவர் தான தர்ம குணம் அமையப் பெற்றவர் கை நகம் லக்ஷ்ணம்             கையில் நகம் மிருதுவாக இருக்கப் பெற்றவர் செல்வநிலையை அடைவார்கள் உரமாக இருக்கப் பெற்றவர் காமவிகாரம் கொண்டவர்சிவந்து இருக்கப் பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்வெளுத்து இருக்கப் பெற்றவர் வறுமையில் இருப்பார்கள்விரல்கள் மெலிதாக இருக்கப் பெற்றவர் அழகும் ஆயுள்விருத்தியும் கொண்டவர் ஆவர்விரல்கல் பருத்து இருக்கப் பெற்றவர் திடமான மனநிலையில் இருப்பார்.விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவர் குணவான் ஆவர்.விரல்கள் குறுகி இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள் முழங்கை லக்ஷ்ணம் முழங்கை பறுத்து இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் கபடும் உடையவர்சிறுத்து இருக்கப் பெற்றவர் வறுமை உடையவர் நரம்பு தோன்றி இருக்க பெற்றவர் துக்கம் நிறைந்தவர்எலும்பு எழ பெற்றவர் வறுமை உடையவர்முழங்கை சந்தில் வலசுழி இருக்கப் பெற்றவர் தயாள குணவான் இடசுழி இருக்க பெற்றவர் கஞ்சதனம் நிறைந்தவர்முழங்கை சிறுத்து கறுத்து இருக்க பெற்றவர் எந்நேரமும் பெண் போகம் எண்ணம் கொண்டவர்முழங்கை சிவந்து இருக்க பெற்றவர் வறுமை உடையவர்முழங்கை பறுத்து இருக்க பெற்றவர் பலவான் முழங்கைக்கு மேலே தோள் வரை மயிர் இல்லா அமைப்பு பெற்றவர் அழகுடையவர்முழங்கைக்கு மேலே தோள்வரை மயிர் இருக்க பெற்றவர் வறுமையும் தயாள குணமும் கொண்டவர்மார்பு லக்ஷ்ணம் மார்பு தன்கையால் 24 அங்குலம் அளக்க பெற்றவர் செல்வமுடையவர்மார்பில் குறுக்கே ஒரே ஒரு ரேகை இருக்கப் பெற்றவர் எல்லோராலும் வணங்க தக்க நிலையில் இருப்பார்கள்ஒருவர் மேல் பிரகாரம் அதற்க்குறிய லக்ஷ்ணம் அறியவும்உள்ளங்கால் லக்ஷ்ணம் உள்ளங்கால் சிவந்து இருக்கப் பெற்றவர் செல்வமுடையவர் உள்ளங்கால் கறுத்து இருக்கப் பெற்றவர் வறுமையுடையவர்குதிகால் தொடுத்து நடுவிரல் நுனிவிரல் மட்டும் ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் எங்கே போனாலும் செல்வநிலை செல்வம் ஈட்டுவார்.குறுக்கே ஒரே ரேகை எங்கே போனாலும் செல்வம் சேர்க்க வழி அமையாதுஉள்ளங்கால் ரேகை இருதுண்டாக இருக்கப் பெற்றவர்கள் முகத்திலும் விழிக்கக்கூடாது உள்ளங்கால் கட்டில் கால் போல நான்கு ரேகை இருக்கப்பெற்றவர் வெகுஜனங்களை ஆதரிப்பார்கள்கால் விரல் லக்ஷ்ணம் இரண்டு காலுக்கும் பெரிய விரலுக்கு அடுத்த விரலுக்கும் நன்கு நீண்டு இருக்கப் பெற்றவர் சொல்வாக்கு உடையவர்சிறுவிரலுக்கு அடுத்த விரலும் நீண்டு இருக்கப் பெற்றவர் பழிசுமந்து வாழ்வார்கால்விரல்கள் அனைத்தும் நெருக்கமாக இருக்கப் பெற்றவர் உறவுகள் அனைத்தும் சேர அனுசரித்து வாழ்வார்கள் கால்விரல்கள் வரிசையாக இருக்கப் பெறாதவர் உறவுகளை இழந்து வாழ்வார்வலதுகாலில் ஆறுவிரல் இருக்கப் பெற்றவர் செல்வநிலை அதிகம் உடையவர்இடதுகாலில் ஆறுவிரல் இருக்கப் பெற்றவர் அலைச்சல் மிகுந்தவர் கால்விரல்களில் மயிர் அதிகமாக இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை சேர்ப்பவர் கால்விரல்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி இருக்கப் பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்கள்பெருவிரலுக்கு அடுத்த விரல் பெருவிரலை விட நீண்டு இருக்கப் பெற்றவர் வெகு சொத்துக்களை அடைந்து பிரபலமாக வாழ்வார்கள் நடுவிரல் நீண்டு இருக்கப் பெற்றவர் நீண்ட ஆயுள் தீர்க்கவான்கால்விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர் வலதுகாலில் பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை உடையவர் இடதுகாலில் பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஒரளவு சொத்துக்களை உடையவர்இதுபோக வேறு விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலை உடையவர் வலதுபெருவிரலில் மயிர் ஆவது மச்சமாவது சுழி மச்சம்  அல்லது வலசுழியாவது இடசுழியாவது இருக்கப் பெற்றவர் அதிகமான செல்வநிலை உடையவர் வலதுகாலில் மற்றவிரல்களில் வலசுழி இருக்கப் பெற்றவர் செல்வநிலை இருப்பவர்.  இடசுழி இருக்கப் பெற்றவர் வாழ்க்கையில் கடும்போராட்டம் மூலமாக பொருள் சேர்ப்பார்கள் இடதுகாலில் பெருவிரலில் இடசுழி இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யம் முடிப்பார்  

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 7] மச்சம் ஆனது உள்ளங்காலில் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் 100 வயது வாழ்வார்கள். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் பலவான் ஆக இருப்பார்கள்.புறங்காலில் வலதுகாலில் பக்கத்தில் நடுவில் பக்கத்தில் இருக்கப் பெற்றவர் நினைத்தை முடிப்பவர்கணுக்காலில் இடதுபக்கத்தில் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலது முழங்காலில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்இடது முழங்காலில் மச்சம் இருக்கப் பெற்றவர் அலைச்சல் நிறைந்தவர்வலது தொடையில் இருக்கப் பெற்றவர் நன்மைகள் அடைவார்கள் இடது தொடையில் இருக்கப் பெற்றவர் தீமை உள்ளவர் வலது பீஜத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் பரஸ்திரி தார நோக்கம் உள்ளவர்இடது பீஜத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஸ்திரி இச்சை இல்லாத நிலையில் இருப்பார்கள் .ஞானம் உள்ளவர்கள்.முதுகின் நடுவில் இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்து உள்ளவர்முதுகின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உள்ளவர்முதுகின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமைநிலை உள்ளவர்இடதுவிலாவில் மச்சம் இருக்கப் பெற்றவருக்கு பெண்போகம் அமைவது கடினம் வலதுவிலாவில் மச்சம் இருக்கப் பெற்றவருக்கு போகம் நிறைவாக அமையும்நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் வெற்றியாளர் ஆவார்நாபியின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவர் சுகம் அற்றவர் ஆவார்நடுவில் இருக்கப் பெற்றவர் சகல சம்பத்து நிறைந்தவர்வயிற்றின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வம் உடையவர்வயிற்றின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வியாதி உடையவர்வயிற்றின் நடுவில் இருக்கப் பெற்றவர் கபடு உள்ளம் உடையவர்மார்பில் வலது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் அதிக சம்பத்து நிறைந்தவர் மார்பில் இடது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் சாதாரண நிலையில் இருப்பார்கள்வலது கிச்சில் மச்சம் இருப்பவர் தன் மனைவியோடு சச்சரவு இல்லாமல் வாழ்வார் இடது கிச்சில் மச்சம் இருப்பவர் இல்லற போகம் சரிவர அமையப்பெறாதவர்வலது தோள்பட்டையில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் இருந்து செல்லும் இடத்தில் வெற்றிகளை குவிப்பார்கள்இடது தோள்பட்டையில் மச்சம் செல்வம் இருந்தாலும் பயந்த சுபாவம் உள்ளவர் எழுதில் ஏமாந்து போவார்கள்.வலது முழங்கை நுனியில் மச்சம் அமையப் பெற்றவர் வசீகரமாக இருப்பார்கள்இடது முழங்கை நுனியில் மச்சம் அமையப் பெற்றவர் பகைகள் நிறைந்த வாழ்க்கையில் இருப்பார்கள்வலது முன்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையில் இருப்பர்இடது முன்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் வலிமையுடையவர்வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் சுகம்பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது உள்ளங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுகை பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஞானம் உள்ளவர் வலதுகை ஆள்காட்டி விரலில் மச்சம் அமையப் பெற்றவர் அறிவுள்ளவர்வலதுகை நடுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் தீர்க்க ஆயுள்வான் வலதுகை சிறுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் நன்மைகள் நிறைந்தவர்இடதுகை பெருவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் பாவியாக இருப்பார்கள் இடதுகை ஆள் காட்டி விரலில் மச்சம் அமையப் பெற்றவர் தாய்பாசம் இருப்பவர்கள்இடதுகை நடுவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் அற்பாயுள் அமையப் பெற்றவர்இடதுகை மோதிரவிரலில் மச்சம் அமையப் பெற்றவர் வறுமையே வாழ்க்கையாக அமையும்இடதுகை சுண்டுவிரலில் மலட்டு தன்மை உள்ளவர்கள்வலது புறங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் புகழ் பெருமைக்கு உடையவர்இடது புறங்கையில் மச்சம் இருக்கப் பெற்றவர் மனவியாதி உடையவர்வலது அக்குகளில் மச்சம் இருக்கப் பெற்றவர் தயாளகுணம் உள்ளவர்இடது அக்குகளில் வெகுகபடதாரியாக இருப்பார்கள் வலது கழுத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் சாதாரணமாக வாழ்வதாரமும் போகமும் அமையப் பெற்றவர்இடது கழுத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் அற்பபோகம் உடையவர்வலது கன்னத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் அலைச்சலும் அமையப் பெற்றவர்இடது கன்னத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் சதா வறுமையில் வாழ்வார்கள் வலது தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் போகம் உடையவர்இடது தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் மனசஞ்சலம் உடையவர்நடு தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் உள்ளவர்கீழ்தாடையில் மச்சம் இருக்கப் பெற்றவர் சாப்பாட்டு பிரியராக இருப்பார்வலது மேல் காதில் மச்சம் அமைந்தால் சொற்ப செலவாளி ஆவார் இடது மேல் காதில் மச்சம் அமைந்தால் ஊரைதூற்றும் எண்ணம் உள்ளவர்இருகாதிலும் நடுவில் மச்சம் இருக்கப் பெற்றவர் சொல்வேறு செயல்வேறு என்பது போல இருப்பார்கள் நம்பவும் கூடாதுமூக்கின் வலது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் செல்வம் உள்ளவர்மூக்கின் இடது பக்கத்தில் மச்சம் அமையப் பெற்றவர் வறுமை உள்ளவர்மூக்கின் மத்தியில் மச்சம் இருக்கப் பெற்றவர் சொற்ப செலவாளி வலது கண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லபுத்திமான்இடது கண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப் பெற்றவர் வெகுகாமியாக இருப்பார்கள்வலது புருவத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் நல்லோரின் நட்பில் இருப்பார்கள்இடது புருவத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் தீயோரின் சேர்க்கையில் அவதியுருவார்இருபுருவத்திற்க்கு மத்தியில் மச்சம் அமைய நல்ல வாத திறமை கொண்டவர்நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் செல்வாக்கு உடையவர்நெற்றியின் இடது பக்கத்தில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலையை அடைபவர்நடு நெற்றியில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஆயுள்தீர்க்கம் நிறைந்தவர்வலது செவியில் இருக்கப் பெற்றவர் நல்ல ஞானம் உள்ளவர்இடது செவியில் இருக்கப் பெற்றவர் பழிச்சொல்லை பேசி பொல்லாதோர் நட்பில் இருப்பார்கள் 
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 8] சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ பகுதி 8 ]வலதுகாதினிலே வலசுழி இருக்கப் பெற்றவர் நல்ல வீரமுடையவர் ஆக இருப்பார்கள் இடதுகாதினிலே இடசுழி இருக்கப் பெற்றவர் நல்ல தைரியம் இல்லாமலும் புத்திசாலி தனம் இல்லாமலும் வறுமை நிலையில் இருப்பவராகவும் இருப்பார்கள்சுழியம் வலமுன்தலையில் இருக்கப் பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆக இருப்பார்கள் இடது தலையின் முன்பக்கத்தில் சுழியம் அமையப் பெற்றவர் பின்னிட்டு காலத்தில் வேறு ஊரில் இரந்துண்டு வாழும் நிலையே தரும்முன்தலையில் மத்தியில் சுழியம் இருக்கப் பெற்றவர் சாஸ்திர ஞானத்துடன் இருப்பார்கள் இப்படியாக மனிதனின் வெளியே தெரியும் தெரியாத லக்ஷ்ணங்களை பலவாறாக சொல்லி வந்தாலும் சில லக்ஷ்ணம் ஒருமனிதனின் “ஆயுள் ஐஸ்வர்யம்” பற்றி சில குறிப்புகள்.வலதுகையில் ஐந்து விரல்கள் அளவு கயிற்றை அளக்க நடுவிரல் நடுநுனி வரை வந்து இருக்கப் பெற்றவர் அதிகமான செல்வம் உடையவர் ஆவர்.அந்த விரலில் மேல் இறைவரை வந்து இருக்க பெற்றவர் “மந்திர சாஸ்திரம்”உடையவர்.நடுஇறை வரை வந்து இருக்கப் பெற்றவர் நன்மையுள்ளவர்நடுவிரல் வந்து இருக்கப் பெற்றவர் உத்தமசீடன் ஆவார்உள்ளங்கையுடன் எவருக்கு அந்த அளக்கப்பட்ட “கயிறு”நிற்க்கிறதோ அவர்கள் வறுமை நிலையில் இருப்பார்கள் ..கால் பெருவிரல் முதல் நடு நெற்றிவரை உள்ள அளவில் கயிறும் தன் மார்பில் அளக்கும் கயிறு இந்த இரண்டும் நான்கில் ஒருபாகம் சேர்த்து தன்கையின் அளவுக்கு 108 எட்டு அங்குலம் இருக்கப் பெற்றவர் குபேரசம்பத்து உடையவராம்108 அங்குலத்திற்க்கு அதிகம் இருக்கப் பெற்றவர் குறைந்த ஆயுள் உடையவர்108 அங்குலத்திற்க்கு குறைவாக இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுதோள் தொட்டு வலதுகை சுண்டுவிரல் வரை அளக்கப் பெற்றவர் இரண்டுமடங்கு கால் பெருவிரல் முதல் நெற்றிவரை வந்திருக்கப் பெற்றவர் 70 வயதுவரை ஆயுளும் செல்வநிலையும் உடையவர்நெற்றியின் மத்திவரை வந்து இருக்கப் பெற்றவர் 65 வயது உடையவர்புருவம் வரை வந்து இருக்கப் பெற்றவர் 80வயது உடையவர் நாசிவரை  வந்து இருக்கப் பெற்றவர் 75 வயதுடையவர் ஆவர்வால்வரை வந்து இருக்கப் பெற்றவர் 60 வயது சொற்ப வருமானம் உடையவர்முகத்தின் தாடைவரை இருக்கப் பெற்றவர் 55 வயதுடையவர்கழுத்துவரை இருக்கப் பெற்றவர் 45 வயதுடையவர்இந்த அளவுக்கும் குறைவாக அமையப் பெற்றவர்கள் “அற்பாயுள்”உடையவர்கள் இவ்வாறு அளக்கும் கயிற்றை முறையாக “நூலுக்கு மஞ்சள்- குங்குமம்-சந்தனம் வைத்து”: தூபம் முதலியன காண்பித்து விநாயகப்பெருமானை வணங்கி தியானித்து அளக்க வேண்டும் குறிப்பாக ஆணுக்கு 16 வயதை தாண்டியும் பெண்ணுக்கு 13 வயது தாண்டியும் அளக்க வேண்டும்குறிப்பு: சாமுத்திரிகா லக்ஷ்ணம் என்பது முன் காலத்தில் “புருஷ சாமுத்திரிகா லக்ஷ்ணம் என்றே சொல்வழக்கு இது ஆண்களுக்கே அதிகமாக பலாபலன் பொருந்தும் என்பதை மனதில் வைத்து வாசிக்கவும்


No comments:

Post a Comment