Tuesday, 30 June 2015

செல்வ வளம் தரும் குறியீடு

செல்வ வளம் தரும் குறியீடு

ஜோதிடத்தில் தனஸ்தானம் எனக்குறிப்பிடப்படுவது இரண்டாம் பாவமாகும்.காலப்புருஷ லக்னமான மேசத்திற்கு இரண்டாம் பாவம் ரிசபமாகும்.ரிசப ராசியின் குறியீடு காளை மாடாகும். பொதுவாக பொன்,பொருள்,பணம் முதலியவை தனம் எனப்படும். தனம் என்றால் எருது,பசு எனவும் பொருள் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் ஒரு மனிதனுடைய தன நிலை,அவனிடம் இருந்த மாடுகளின் எண்ணிக்கையை வைத்துதான் நிர்ணயிக்கப்பட்டது.எனவே காளை மாட்டின் உருவம் ஒரு செல்வக்குறியீடாகும்.

பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நிகழும் பங்கு சந்தையில் பங்குகளின் ஏறுமுகப்போக்கை குறிப்பிட காளை மாட்டின் உருவம் பயன்படுத்தப்படுகிறது.
பணம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடும்போது காளை மாட்டையோ அல்லது பசு மாட்டையோ காண நேர்ந்தால் நிச்சயமாக அன்றைய தினம் பண வரவு உண்டு.காளை மாட்டின் உருவத்தை பொம்மையாகவோ அல்லது படமாகவோ வீட்டில் வைத்திருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

செல்வத்தைக்குறிக்கும் கிரகமான சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைகிறார்.மீன ராசி நீர் நிலையைக்குறிக்கும் ராசியாகும்.அங்கே நீச்சமடையும் புதன் நீர்த்தாவரங்களை குறிக்கும்.அங்கே உச்சமடையும் சுக்கிரன் மலர்ந்த தாமரைப்பூவைக்குறிக்கும்.எனவே தண்ணீரில் பூத்துக்குலுங்கும் செந்தாமரை மலர் ஒரு செல்வக்குறியீடாகும்.லக்ஷ்மிக்கு செந்தாமரை செல்வி என்று பெயர்.எனவே செந்தாமரை மலர் அல்லது செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியின் படத்தை வீட்டில் வைத்து தினமும் பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

செல்வத்தைக்குறிக்கும் கிரகமான சுக்கிரன் உச்சமடையும் நட்சத்திரம் ரேவதியாகும்.ரேவதி நட்சத்திரத்தின் உருவம் மீனாகும். எனவே வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்களை பராமரித்து வந்தால்,அது செல்வத்தை வசீகரிக்கும். மீன் வளர்க்க முடியாதவர்கள் மீன் படங்களை வீட்டில் வைக்கலாம்.
நீருக்கு செல்வத்தை வசீகரிக்கும் சக்தி உண்டு.செல்வக்கடவுளான லக்ஷ்மியை அலை மகள் எனக்குறிப்பிடுவர்.பாற்கடலை தேவர்களும்,அசுரர்களும் இணைந்து கடைந்த போது அந்த பாற்கடலிலிருந்து தோன்றியவள் லக்ஷ்மியாகும். கிட்டத்தட்ட எல்லா நாகரீகங்களும் ஆற்றங்கரையிலும்,கடற்கரையிலும் தான் தோன்றியுள்ளது. எனவே வீட்டின் வடகிழக்கு பாகத்தில் நீரை சேமித்து வைத்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும்.
நீர் நிலையில் நின்றுகொண்டு சிறு நீர்கழிப்பது,மலம் கழிப்பது,உடல் உறவு கொள்வது,நீரில் எச்சில் துப்புவது போன்ற செயல்கள் லக்ஷ்மியை அவமதிப்பதாகும். அவர்களிடம் லக்ஷ்மி இருக்க மாட்டாள்.

6 comments:

  1. சார் இரவு வணக்கம். தாங்கள் பதிவினை வரவேற்கிறேன். சார் எனக்கு விருச்சக ராசி ஆகையால் செல்வம் வளம் தரும் குறியீடு யாவை சற்று விளக்கம் தாருங்கள்.

    ReplyDelete
  2. எனக்கு ஜோசியம் கற்றுகொள்ள விருப்பம் உள்ளது. ஆகவே தாங்கள் எனக்கு கற்று தர முன் வரவேண்டுமாய் விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

    ReplyDelete
  3. சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

    சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்.
    இதை தவிற்க தகுந்த பரிகாரம் கூறவும்

    ReplyDelete
  4. சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

    சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்.
    இதை தவிற்க தகுந்த பரிகாரம் கூறவும்

    ReplyDelete
  5. சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

    சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்.
    இதை தவிற்க தகுந்த பரிகாரம் கூறவும்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete