Tuesday 30 June 2015

ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள் தேவதைகளை சென்றடையுமா?

ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள்
தேவதைகளை சென்றடையுமா?


தேவதைகளை மகிழ்விப்பதற்காகவும்,அவர்களின் அருளாசியை பெறுவதற்காகவும் செய்யப்படுவது ஹோமாதிக்காரியங்காளாகும். இதை யாகம் என்றும்,யக்ஞம் என்றும் கூறுவர்.
ஹோமம் செய்யும்போது நெருப்பு வளர்த்து அதில் நவதானியங்கள், அன்னம், பட்சணங்கள், நெற்பொரி முதலிய பொருட்களை ஆகுதியாக நெருப்பிலிடுவார்கள்.இவ்வாறு நெருப்பிலிட்ட பட்சணங்கள் குறிப்பிட்ட தேவதையை சென்றடையுமா? எனக்கேட்டால் சென்றடையும் என்பதற்கு தத்துவார்த்தமான விளக்கம் உண்டு.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மை என்னவென்றால் நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தைப்பற்றி நிற்கும். அதாவது நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தை நோக்கியே கொழுந்து விட்டு எரியும். எனவே பூமியில் நெருப்பு வளர்க்கும்போது, அந்த நெருப்பானது வானத்திற்கும்,பூமிக்கும் இடையே ஒரு இணைப்பை உண்டாக்குகிறது. அதாவது நெருப்பானது வானத்திற்கும்,பூமிக்கும் இடையே ஒரு ஊடகமாக செயல்படுகிறது. எனவே நெருப்பிலிட்ட பட்சணங்களின் சுவையை வானவர்கள் நெருப்பின் வழியாக பெற்றுக்கொள்கிறார்கள் என்பது நம்பிக்கை. மேலும் நெருப்பிலிட்ட பட்சணங்கள் யார் யாருக்குப்போய் சேரவேண்டும் என்பதை சங்கல்பம் மூலம்,பிரார்த்தனை மூலம் தெரிவித்தால் ,அந்தந்த தேவதைகள் மட்டும் வந்து பெற்றுச்செல்வார்கள்.
ஹோமாதி காரியங்கள் செய்யும்போது மந்திரங்கள் ஜெபிக்கப்படுகின்றன.இந்த மந்திரங்களை வானவர்களிடம் எடுத்து செல்வதும் நெருப்புதான். எனவே ஹோமாதி காரியங்கள் செய்வது வீண் விரையம் என யாரும் நினைக்கவேண்டாம்.
மந்திர ஜெபம் செய்யும்பொழுது பக்கத்தில் ஒரு தீபமாவது ஏற்றி வைக்க வேண்டும். அந்த தீபம் உங்கள் பிரார்த்தனையை குறிப்பிட்ட தேவதையிடம் எடுத்துசெல்லும்.
தீபம் ஏற்றாமல்,நெருப்பு வளர்க்காமல் இந்துக்கள் எந்த பிரார்த்தனயும் செய்வதில்லை

No comments:

Post a Comment