Tuesday 30 June 2015

குரு பலம் என்றால் என்ன?

குரு பலம் என்றால் என்ன?

சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது குரு பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம். அந்த குரு பலம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை பார்ப்போம். ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் மிகவும் எளிமையானது அஷ்டகவர்க முறையாகும். அந்த முறையில் ராகு,கேதுக்களைத்தவிர மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் அவை:

1) தான் நின்ற ஸ்தானம் (1)
2) ( தான் நின்ற ஸ்தானம் மற்றும் ராகு,கேதுக்கள் நின்ற ஸ்தானங்களைத் தவிர) பிற கோள்கள் நின்ற ஸ்தானம் (6)
3) லக்கின ஸ்தானம் (1)

ஆகிய எட்டு ஸ்தானங்களிலிருந்து கணக்கிட எந்தெந்த வீடுகளுக்கு தங்களுடைய பரல்களைத் தருவார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் அட்டவணையாக தரப்பட்டுள்ளது.அதில் கோச்சார குரு,ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ஆகிய ஐந்து இடங்களுக்கு தன்னுடைய பரல்களைத் தருவார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களை தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும். இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதன்படி கோச்சார குரு, ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார குரு பலம் வாய்ந்தவராக இருப்பார். இதையே குரு பலம் என குறிப்பிடுகிறார்கள்

No comments:

Post a Comment