Saturday, 11 July 2015

கோபத்தை வரையறுப்போமா !!!

கோபத்தை வரையறுப்போமா !!!
கோபம் மனதின் எதிர்பாராத வெளிப்பாடாகும். அதனை கீழ்க் கண்டவாறு வரையறுக்கலாம்.
மன வலிமை + ஒவ்வாமை = கோபம்
ஆம் ஒருவருக்கு எப்போது கோபம் வரும் அவர் ஒரளவுக்கு தைரியமாக & வலிமையாக இருக்கும்போது அவருக்கு ஒத்துவராத/ பிடிக்காத ஏதோ ஒரு விசயம் நடக்கும்போது (ஒவ்வாமை) தான் அவருக்கு கோபம் வரும்.
ஆம் ஒருவருக்கு தைரியம் & வலிமை குறையும்போது அவருக்கு ஒத்துவராத/ பிடிக்காத ஏதோ ஒரு விசயம் நடக்கும்போது (ஒவ்வாமை) அவருக்கு கோபத்திற்கு பதிலாக பயம் தான் வரும்.
இப்போது ஜோதிட ரீதியாக சிந்திப்போம், மன வலிமை , ஒவ்வாமை எனும் போது முதலில் நமக்கு வருகிற கோள் செவ்வாய், சற்று இன்னும் உள்ளே போகும்போது அதாவது சந்திரன் வீட்டில் செவ்வாய் நீச்சமாகிறார் அதுபோல செவ்வாய் வீட்டில் சந்திரன் நீச்சமாகிறார். இதன் மூலம் மனம் சாந்தமாக,பாசமாக, அன்பாக (சந்திரனாக) இருக்கும்போது கோபம் / மோடுமுட்டி தனம் இருக்காது. அது போன்று கோபம் / மோடுமுட்டி தனம் இருக்கும்போது மனம் சாந்தமாக,பாசமாக, அன்பாக (சந்திரனாக) இருக்காது. ஆம் ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை, ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதால் மனத்திற்காக சந்திரனும் வருவார். மேலும் மன வலிமை , ஒவ்வாமை எனும்போது நமக்கு ஞாபகம் வரும் முக்கிய பாவகம் ஆறாம் பாவகம். அது தானே பகை / விரோதம்/ எரிச்சல் ஆகியவற்றை குறிக்கும் ஆகையால் செவ்வாய் , சந்திரன் & ஆறாம் பாவகம் ஆகிய இவற்றை இணைத்து விதிகள் உருவாக்கலாமா !!!!

No comments:

Post a Comment