உலகை உருவாகியது இறைவனா?
இல்லை. நாம் தான்!!!
--------------------------------------------------
யாரைக்கேட்டாலும் உலகை படைத்தவர் இறைவன்தான். அவரே அணைத்து தொழில்களையும் செய்பவர். என்று கூறுவார். ஆனால் அது மகா முட்டாள்தனமான வாதம். நமக்கு முதலில் இறைவன் என்றால் என்ன என்றே தெரியாது. பிறகு எப்படி அதன் தொழிலையும், தன்மையையும் நம்மால் தீர்மானிக்க இயக்கும்?!
நாம் அனைவருமே நம் வீட்டில் வசிக்கிறோம். வாஸ்தவத்தில் வீடு என்ற பொருளே உலகில் இல்லை. பல்லாயிர செங்கற்கள், பல லக்ஷம் ஜல்லிக்கல்கள், பல வண்டி மண், பல மூட்டை சிமென்ட்........... முதளியவையின் ஒருங்கிணைப்பே வீடு எனப்படுகிறது, தவிர வீடு என்ற தனிப்பொருள் எங்குமே இல்லை.
அதே போன்று, நிஜத்தில் உள்ள மான், மீன், மலை, மடு, மனிதன், மிருகம், மரம், உலகம், சூரிய சந்திரன், எண்ணிலடங்கா நக்ஷடிரங்கள், வால்நட்சத்திரங்கள், அனந்தகோடி கோள்கள், இன்னும் நம் கற்பனைக்கே எட்டாத என்னென்ன உண்டோ அந்த ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த முழுமைக்கு பெயரே கடவுள், தவிர தனியே எந்த லோகத்திலும் கடவுள் என்ற தனி நபர் இல்லை.
எவ்வாறு பல லக்ஷம் கற்கள் ஒன்று சேர்ந்தவுடன் அந்த அமைப்பு "ஒரே" வீடாக கருப்படுகிறதோ,
அவ்வாறே, பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தின் ஒருங்கிணைப்பே இரண்டுகளற்ற பிரம்மம், கடவுள்....... என்றெல்லாம் கூறப்படுகிறது.
பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே உலகம். இறைவன் பிரபஞ்ச வடிவினன். அந்த பூரணமான இறைவனின் ஒரு அங்கமே உலகம். பிறகு எப்படி இறைவன் உலகை படைத்திருப்பார்? தன்னைத் தானே எவ்வாறு கடவுள் படைப்பார்? இருப்பது அனைத்துமே கடவுளாக இருக்க, இங்கு படைப்பேது? காப்பது ஏது? அழிப்பது ஏது???
இயக்கம் அனைத்துமே இறைவனுடயதாக இருக்க, பாவ புண்ணிய வினைகலேது?
ஒரு பொறியாளர் வீடு கட்டுவதற்கு முன், அந்த வீட்டை தன் மனதில் ஒரு கற்பனை வடிவில் கொண்டு வருவார்(plan). பிறகு ஒரு பேப்பரில் தன் கற்பனையை ஒரு ஓவியமாக வரைவார்(sketch). பிறகு அதை வைத்து வீடு கட்டுவார்.
இங்கு கூர்ந்து நுண்ணறிவுள் சிந்தியுங்கள். அந்த வீடு பொறியாளரின் கற்பனையின் வெளிப்பாடே தவிர வேறு இல்லை. வீடாக இங்கு நிற்கும் பொருள், ஒருவரின் கற்பனையே. நிஜத்தில் அங்கு உள்ளது பிரபஞ்ச வடிவினனான இறைவன்தான். இறைவனே இங்கு வீடாக கற்பனை செய்யப்படுகிறான்.
அதே போலத்தான் அனைத்தும். நீங்கள் உபயோகிக்கும் வாகனம் முன்பு ஒருவரின் கற்பனையில் இருந்தே வந்தது. நீங்கள் தலைவாரும் சீப்பு முன்பு ஒருவருடைய கற்பனையே. நீங்கள் எழுதும் எழுதுகோலும், நீங்கள் இதை படிக்கும் கணினியும்,..... எல்லாமுமே முன்பு ஒருவரின் கற்பனே. ஆனால் நிஜத்தில் இங்கு இவையாக இருப்பது. இறைவனே.
சரி. இவை கற்பனை. ஆனால் தென்னை மரம். மாமரம். கடல், மலை, நாய், நரி, மனிதன்...... இவை எப்படி கற்பனையாகும்???
உங்களுடம் ஒரு நாய் வந்து, Hello. Glad to meet you. என் பெயர் நாய். என்று என்றாவது சொன்னதுண்டா? நீங்கள் தான் அதை நாய் என்கிறேர்கள். ஆகவே நாயும், நரியும் அனைத்துமே நம் கற்பனையே. எதோ ஒன்று அங்கு உள்ளது. அதற்க்கு வெப்ப மரம், புளிய மரம், மலை, மடு என்று பெயர் வைப்பதும், நீர் குளிர்ச்சி, தீ சூடு, இவன் நல்லவன் தீயவன், யோகியன் அயோக்கியம்.... என்று தீர்மானிப்பதும் நாம்தானே!!! இருப்பது அனைத்துமே பிரபஞ்சமே. இறைவனே. அதைத்தவிர்த்து இம்மியளவும் எதுவும் இல்லவே இல்லை.
இருப்பது அந்த இரண்டிலா, பெயர் உரு இல்லா, குண தோஷம் இல்லா அந்த சத்தியம் மட்டுமே.
அது எதுவோ தெரியாது. ஆனால் அது மட்டுமே உள்ளது.
இதை நானாக இருந்து எழுதுவதும் அதுவே.
நீங்கலாக இருந்து படிப்பதும் அதுவே.
படிக்க உதவும் கணினியும் அதுவே.
சொற்களும் அதுவே. பிரபஞ்சமும் அதுவே. அனைத்தும் அது மட்டுமே!!!!

No comments:
Post a Comment