Friday, 28 August 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

பூரட்டாதி 4ஆம் பாதம், முதல் உத்திரட்டாதி,ரேவதி முடிய பிறந்த மீனம் ராசி நண்பர்களே 

வரும் 14.7.2015 ஆம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சியால் தங்களின் மீன ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்துக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்...

குருபதியும் ஆறில் ஏற,கெடுதி மிக செய்வான்
மகாபலியாம் மன்னன் சீரப்பாசிறைக்கூடம் சென்றாரப்பா’’

என புலிப்பாணி முனிவர் ஆறாம் இடத்து குரு கெடுதி தரும் என பாடியிருக்கிறார்..மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி மட்டுமல்ல..பத்தாம் அதிபதியும் கூட குருதான் தொழில் ஸ்தானாதிபதி மறைவதால் தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும்,..தொழில் மந்தமடையும் வருமானம் தடங்கலாகும் என்ற நிலை அடிக்கடி உண்டானாலும் குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது இருப்பதால் முற்றிலும் பாதிக்காது...வாக்கு தன ஸ்தானமாகிய இரண்டாமிடத்தையும் குரு பார்ப்பதால் வருமானம் குறைவின்றி நடக்கும்...

குரு தன் ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வூண்டாகும் ஆறாம் இடத்து குரு உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்கு சிறு விபத்துக்கள் ,அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழல்,புதிதாக கடன் வாங்குதல்,புதிய எதிரிகளையோ பகையையோ உண்டாக்கிக்கொள்ளும் சூழல் உண்டாகும்..

குரு மறைந்தால் செல்வாக்கு மறையும் செல்வாக்கு எதனால் மறையும் கெட்ட பெயர் உண்டானால்தான் செல்வாக்கு மறையும் எனவே நெருங்கிய உறவுகளிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சம்பாதிக்கும் பணமெல்லாம் சுப விரயம் ஆகும் வாய்ப்புகளே அதிகம்..வீடு கட்டுதல்,வீடு பழுதுபார்த்தல்,மனை வாங்குதல் போன்றவை செய்தால் சுப செலவுகளாகி விடும்..புதிய வங்கிக்கிடன் வாங்கினால் கூட ஆறாமிடத்து குரு தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம் இல்லையெனில் மருத்துவ செலவு உண்டாக்க கூடிய தோசம் தொடரும்...பிள்ளைகளுக்கு சுபகாரியம் செய்தாலும் வீட்டில் விருந்து நடத்தினாலும்,சுபவிரயமே.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்...இருவருக்குமிடையே இருந்து வரும் பிரச்சினைகள் குறைய துவங்கும் ....உங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற இக்காலகட்டத்தில் நிறைய போராட வெண்டி வரும் ..சில போராட்டத்துக்கு பின் நீங்களே வெல்வீர்கள்..முடிந்தவரை சவாலோ,வாக்கோ கொடுத்துவிடாதீர்கள் அதை காப்பது மிக கடினம்...அதிக அலைச்சல் ,பலவிதமான தடைகளை தாண்டிதான் ஒரு காரியத்தை இந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

சிலருக்கு வீண் தொல்லைகள்,பங்காளி பிரச்சினை,முன்னோர் சொத்து வில்லங்கம்,குலதெய்வ கோயில் பிரச்சினை,சொத்து தகராறு மூலம் கோர்ட் படியேறும் சூழல் வரலாம்..அண்ணன் தம்பிகள் சித்தப்பா பெரியப்பா இவர்கள் மூலம் இப்போது வாக்குவாதம் ,கலவரம்,வாக்குவதம் உண்டாகும் கலம் என்பதால் முடிந்தவரை சுமுகமாக பேசி முடிக்கப்பாருங்கள் வீண் சவடால் விட்டு தேரை இழுத்து நீங்களே தெருவில் விட்டுவிடாதீர்கள்...

கடன் கொடுத்தால் திரும்பி வராது கடன் வாங்கினால் வட்டி கட்டுவதே பெரும் சிரமம்...ஜாமீன் கையெத்து போட்டு யாருக்கேனும் நண்பர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செய்தால் ,அந்த பணத்தை நீங்கள்தான் கட்டியாக வேண்டும் உங்கள் நண்பர் கட்ட மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்..

உங்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பில்லை ஆனால் பழைய பிரச்சினைகள் எல்லாம் கிளறி விட்டு தொல்லை கொடுக்கும் ஆட்களால் உங்கள் மனதுதான் சிறிது வருத்தமுண்டாகும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்..

குரு வக்ரமாகும் காலத்தில் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ரம்...பெரிய பாதிப்புகள் இருக்காது வருமானமும் நன்றாக இருக்கும் தொழிலும் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும்..

29.1.2016ல் ராகு கேது பெயர்ச்சி வருகிறது அது உங்கள் ராசிக்கு மட்டும் அஷ்டலட்சுமி யோகமாக அமைகிறது...6ஆம் இடத்து குருவுடன் ராகு சேர்வது ராஜயோகம்..எனவே ராகு பெயர்ச்சிக்கு பின் சிலருக்கு ஒட்டு மொத்த கடனும் அடைந்துவிடலாம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வாய்ப்பும் உண்டு..

சிலர் வெளிநாட்டில் பெரிய சம்பளத்துடன் செட்டில் ஆவார்கள்..நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெரிய விசயங்கள் சுலபமாக கையில் கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளும்...தொழில்,வேலை இல்லாமல் அமைந்தவர்களுக்கு உறுதியா நிலையானதாக அமைத்து கொடுக்கும்..அரசு வேலை சிலருக்கு அமையும் பெரிய இடத்து வரன்கள் அமைந்து இந்த ராசி பெண்கள் மகிழ்ச்சியாக புதிய வாழ்க்கை துவங்குவர்.

செல்வவளம் உண்டாக

ஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

No comments:

Post a Comment