Friday 28 August 2015

பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம்..நம் குணத்தை செய்ல்பாடுகளை ,தன்னம்பிக்கையை,செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம்..ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.

.நம் லக்னம் கெட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகளை தடுத்து தோல்விகளையே தருகிறது..தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது ..கிணற்று தவளை போல பலர் தங்கள் வாழ்வை சுருக்கி கொள்வதற்கு லக்னம் வலிமை இழப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...லக்னம் வலுவடைந்தவர் சமூகத்தில் அந்தஸ்து அடைகிறார்..லக்ன யோகர்கள் பலம் அடைவோர் மாவட்ட அளவில் புகழ் அடைவார்..லக்ன கேந்திராதிபதிகள் பலம் அடைவோர் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் புகழ் அடைகிறார்...நல்ல திசாபுத்திகள் நடந்தால் இன்னும் உன்னதமான பலன்களை அடைகிறார்..

லக்னாதிபதி லக்னத்துக்கோ சந்திரனுக்கோ 6,8,12ல் மறைந்து போனால் ,அல்லது நீசம்,வக்ரம்,அஸ்தமனம் ,பகை கிரகங்களுடன் சேர்தல்,பகை வீடுகளில் இருந்தால் என்ன பரிகாரம் என பார்ப்போம்.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு

மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்...

பஞ்சபூத ஸ்தலங்கள்;

மண் -காஞ்சிபுரம்
நீர்-திருவானைக்காவல்
நெருப்பு-திருவண்ணாமலை
காற்று -ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்

உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்..

விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிரதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

No comments:

Post a Comment