Friday, 28 August 2015

விருச்சிக லக்கினம் :

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

விருச்சிக லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் அனுபவங்களையும் வாரி வழங்குவார், செய்யும் தொழில் சார்ந்த கல்வியினை பெறுவதற்கு சரியான நேரமிது, கல்வி துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் உண்டாகும், மேலும் கல்வி துறையில் புகழும் அந்தஸ்து கௌரவம் கிடைக்க பெறுவீர்கள், தங்களின் சார்ந்த முயற்ச்சிகள் யாவும் நிறைவான நன்மைகளை வாரி வழங்கும், வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் இனிவரும் ஒரு வருட  காலத்தில் நிச்சயம் அமையும், மருத்துவ துறையில் உள்ள அனபர்களுக்கு எதிர்பாரத லாபமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அளவில்லா தன வரவையும் வாரி வழங்கும், புதிய வருமான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், பேச்சு திறமையின் மூலம் நல்ல வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கூடி வரும், இதுவரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் வாய்ப்புகள் கூடி வரும், நல்ல இல்லற வாழ்க்கை அமையும்,  சமூதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்க பெறுவீர்கள், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக காலமாக கருதலாம், புதிய பொறுப்புகள் தங்களை தேடி வரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு சாதகமாக அமையும், சரளமான வாத திறமையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எதிர்பாராத பதவிகளையும் பெற்று தரும், இனி வரும் ஒரு வருடம் கை நிறைவான வருமானத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய  சொத்துகள் வண்டி வாகனம், மண் மணை யோகத்தை தரும், கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சி மிகவும் அபரிவிதமாக அமையும், சுய முயற்ச்சியின் மூலம் சகல விதமான நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்று பெரிய தன வரவையும், புதிய தொழில் முதலீடுகளையும் செய்யும் யோகத்தை தரும், இது வரை விற்பனை செய்ய இயலாத சொத்துகளை இனிவரும் ஒரு வருட காலத்தில் நல்ல லாபத்திற்கு விற்க ஏதுவான சூழ்நிலை அமையும், தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், தங்களின் திட்டமிடுதல்களும், லட்சியங்களும் நிறைவேறும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் உடல் தொந்தரவுகளை தரக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகளும், பித்தம் சார்ந்த தொந்தரவுகளும் அதிக அளவில் துன்பத்தை தரக்கூடும், எதிரிகள்  மூலம் எதிர்பாராத முன்னேற்ற தடைகளை சந்திக்கு சூழ்நிலை தரும், கடன் தொந்தரவுகள்  எதிர்பாராத நேரங்களில் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், புதிய கடன்களை வாங்கும் பொழுதும், மற்றவர்களுக்கு ஜாமீன் இடும் பொழுதும் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், சிறு பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிட்டும், மருந்து மருத்துவ உபகரணங்கள் மூலம் எதிர்பாராத நல்ல லாபங்களை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும், தொழில் புரிவோருக்கும், ஒரு இடத்தில் பணியாற்றும் அன்பர்களுக்கும் எதிர்பாராத இன்னல்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் யாவரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நலம் தரும்.

குறிப்பு : 

விருச்சிக லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது விருச்சிக லக்கினமே இரண்டாவது  இடத்தை பெறுகிறது,

No comments:

Post a Comment