Friday, 28 August 2015

ஜாதகத்தில் மாந்தி

ஜாதகத்தில் மாந்தி என்பது நம்ம தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனா கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்குவாங்க..சனி புத்திரன் மாந்தி ..எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள்..அதாவது ஜூனியர் சனிபகவான் .

இவர் ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்னென்ன பலன்களை தருவார் என பொதுவாக பார்ப்போம்...இதை அப்படியே எடுத்துக்கொள்ள தேவையில்லை..சுபருடன் சேர,சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும்.

மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் .

லக்னத்துக்கு 2ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும் இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

3ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன் பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில் போராடி கொண்டிருப்பர்.

4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்...பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும்...முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும்.

5ல் மாந்தி புத்திர தோசம்..குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்..

6ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும்

7ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன் கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும்.

8ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல் ,அதிர்ஷ்டமின்மை

9ல் மாந்தி பூர்வீகம் கெடுகிறது...தந்தையுடன் மனக்கசப்பு...எதையும் குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல் 

10ல் மாந்தி தொழில் மேன்மை,பதவி,புகழ் கிடைக்கும்

11ல் நிற்க ,எப்போதும் தன லாபம்

12ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள்

No comments:

Post a Comment