Saturday, 12 September 2015

அமாவாசை இருள் நாள்

அமாவாசை இருள் நாள்..சந்திரன் மறையும் நாள்.சந்திரன் வளர்பிறையில் இருக்கும்போது மட்டும்தான் நாம் சுபகாரியம் செய்கிறோம்.சந்திரன் கெட்ட நாளில் கெட்ட காரியம் செய்யலாம்...செய்வினை,பில்லி சூனியம் செய்பவர்கள் இன்று செய்வர்.முன்னோர்களுக்கு இன்று திதி கொடுக்கலாம்..
அமாவாசையில் பிறந்தவன் திருடன் என சொல்வர்.காரணம் என்ன ?அவனுக்கு சந்திரனின் சக்தி கிடைக்காது .சந்திரன் மனதுக்கும்,அன்புக்கும் அதிபதி சந்திரன் கெட்டால் முரட்டுதனம் உண்டாகும்.இதனால் நல்லவை அவனுக்கு தெரியாது.கெட்ட காரியங்களிலும், குறுக்கு வழியிலுமே அவன் மனம் ஈடுபடும்.சந்திரன் பலவீனமான நேரத்திலும் நம் ராசிக்கு சந்திரன் பலவீனமாக வரும் நாளிலும் எதையும் செய்யக்கூடாது.அது விருத்தி ஆகாது.அமாவாசையில் குலதெய்வத்தை வழிபடலாம்

No comments:

Post a Comment