Monday 14 September 2015

ஒரு விவசாய இடத்தை வாங்கும் முன் என்ன செய்யவேண்டும்

ஒரு விவசாய இடத்தை வாங்கும் முன்,முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்கள்..விடியற்காலையில் கோழி வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...கோழி கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்

No comments:

Post a Comment