Friday 27 November 2015

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமா இறக்கவில்லை.
அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நட த்திய வேட்டை குரூரமாக இருந்தது.
‘அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ…’
அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலை கள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண் ட அஸ்வத்தாமா காற்றி னும் கடிதாய் விரைந்தான்.
“துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலை களைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித் தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசி யில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!”
பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற் றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட் டுகின்றன. இறுதிப் புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புல ன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக் கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திர ங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடு ங்குகிறான்.
துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழு த்து வருகின்றது.
“மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்க ளின் தலையைக் கொண்டு வந்திருக்கிறா யே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்று வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட் டாயே!”
வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல் லை.
அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். ‘பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?’ மடங்கி அழத்தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ண ன்.
“அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன் னும் ஏன் வஞ்சத்தோடு திரி கிறாய்! நீ பிராம ணன்… கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும்பார்… மகா பாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிரா சையும், தனிமையும், துரோகமும் பீடிக் கப்பட்டோர்! அதோ பார்! ஏக லைவனை… உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கு ம் பித்தனாய் த்திரிந்து கொண்டிருப்பதை… இன்னும்… இன்னும் துக்கத்தாலும், துரோ கத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனை பே ர்… அம்பை தொடங்கி, சிகண்டியும், அரவா னும், கர்ணனும்… இதோ உத்தரை முடிய… வேண்டாம் அஸ்வத்தா மா… உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கி வைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்து விடும்.”
அஸ்வத்தாமா கைகூப்பினான். ” இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத் தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ் வத்தாமா இறந்தான் என்று பொய் யுரைத்து குருத் துரோகத்தின் மூலம் என் தந்தையைக் கொன்றா ர்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமக னான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபா ணியான கர்ணனைக் கொ ன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரிய னை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்… இன்னும் பாரதயுத்த மெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சி செய்து வந்தி ருக்கின்றது.
கிருஷ்ணா! இனி நீயிருக்கும் வரை பாண்டவ ர்களைக் கொல்ல முடி யாது என்று எனக்குத் தெரியும். நான் போ கிறேன் கிருஷ்ணா!
இன்னும் சொல்கிறே ன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன் ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அத ன் சுழலில் சிக்குபவர் எப் போதும் இறப்பதி ல்லை. அவர் கண்கள் என் றும் மூடுவதில்லை. துரோ கிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமி யெங்கும் நிரம்பியிருக்கின் றது.
அதன் ஒலியி ல் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவ டைத்துப் போட ட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”
அஸ்வத்தாமா காற்றோடு கரைந்து போனான். யுகாந்திரங்களைத் தாண் டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ் சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன் னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கி றான்.
அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவி ல்லை!
ஒரே நேரத்தில் இரு பிரம்மாஸ்திரங்கள் மோதிக் கொண்டால் பூமி அழிவைச் சந்திக்கும் என்பதை உணர்ந்த வேத ஞானி வியாசர் தன் ஞான சக்தியின் மூலம் இரு பிரம்மாஸ்திரங்களையும் தடுக்கிறார்.அர்ஜீணனையும் அஸ்வத்தாமனையும் பிரம்மாஸ்திரங்களை திரும்பப்பெறச் சொல்கிறார்.அர்ஜீணன் பிரம்மாஸ்திரத்தை திரும்பச்செய்ய, அஸ்வந்தாமனோ மறுக்கிறார். உயிர்களின் நலன் கருதி யாராவது ஒரு உயிரை தானமாக தர முன் வருகிறான் தருமன், ஆனால் அஸ்வத்தாமனோ அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை நோக்கி செழுத்துகிறார்.அவள் கருவை அழித்து உறைவிடம் செல்கிறது பிரம்மாஸ்திரம்.அத்தோடு பாண்டவர் மற்றும் பாஞ்சால தேசத்தின் அனைத்து வாரிசுகளும் அழிந்து போகிறார்கள்.(சிகண்டி மற்றும் திருஷ்டதுய்மணன், அவர்கள் மகன்கள்,திரொளபதியின் மகன்கள் என அனைவரையும் முதல் நாள் இரவே கொன்றுவிட்டார்).காவியங்களில் முதல் கருவருத்தல் என்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டவர் அஸ்வத்தாமன்.
இவ்வளவு அரும்பாடுபட்டு போரை வென்று ஒரு உபயோகமும் இல்லை என்று எண்ணி பாண்டவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.அஸ்வத்தாமனின் செயல் கண்டு வெகுண்டு எழுகிறார் ஸ்ரீகிருஷ்ணர், அஸ்வத்தாமனை அழிக்க தன் சுதர்சண சக்கரத்தை ஏவுகிறார், ஆனால் அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் சாமந்தாகமணி அவரை காப்பாற்றுகிறது.அவருடைய சாமந்தாகமணியை பறிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்."கருவில் இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும் உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் சாமந்தாகமணி உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ,தூக்கமோ எதுவும் இருக்காது, மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக்கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே "பகவானே, நான் செய்தது குற்றமென்றால் நீங்களும் பாண்டவர்களும் செய்தது எந்த விதத்திலும் தர்மம் இல்லை, நீங்கள் இட்ட சாபம் என்னை கேட்குமாயேன் அதன் முழுகாரணகர்த்தா தாங்களே, அதனால் என் தேகத்தில் இருந்து வடியும் உதிரத்தை காலம் உள்ளவரை அருந்திக் குடிக்கும் புழுவாக தாங்கள் ஜனனம் எடுக்கவேண்டும்" என்று சாபம் தருகிறார்.கடவுளால் சாபம் பெற்ற ஒரே மனிதனும், கடவுளுக்கே சாபம் தந்த ஒரே மனிதனும் அஸ்வத்தாமனே.
தருமன் அஸ்தினாபுர அரியணை ஏறியதும் காட்டுக்குள் சென்று வேத முனிவர் வியாசரின் ஆசிரமத்தில் சேர்ந்து வேதங்களை போதிக்கிறார் அஸ்வத்தாமன்.மனவந்திரங்களையும், அதர்வண வேதத்தையும் திருத்தி எழுதுகிறார்.வியாசரின் அறிவுரைப்படி அன்னை யோகமாயாவை நோக்கி தவம் புரிந்து ஸ்ரீகிருஷ்ணரின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார்."துவாபர யுகம் முடிந்து கலி யுகத்தில் கி.பி 4044ம் வருடம் நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில் நீயும் நானும் சந்திப்போம், அப்போதுதான் உனக்கு முக்தி கிடைக்கும், அதுவே மனித குலத்தின் அழிவும் ஆகும், அதுவரை மனித இனத்திற்காக நீ வாழவேண்டும்" என்று வரமளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.36 ஆண்டுகள் கழித்து பரிக்ஷித்து மகாராஜன் அரியணை ஏற்றதும் தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள இமயம் புறப்பட்ட பாண்டவர்கள் அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும், அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின் கண்ணில் படவில்லை என்றும் புராணங்கள் சொல்கின்றன.
இன்றும் குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு.அவர் நெற்றியில் பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார் 10அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும் அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக் கொண்டு அர்ச்சணை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

1 comment: