Tuesday, 24 November 2015

திருக்கார்த்திகை விளக்கு பூஜை விதிமுறை ...............

திருக்கார்த்திகை விளக்கு பூஜை விதிமுறை ...............

* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.

* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.

* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் என்பது ஏற்றப்படும். பரணி தீபத்திற்கு உண்டான முறைப்படி, அதை ஏற்றுகின்றோமோ இல்லையோ, அதைப் பற்றிய தகவல்களையாவது தெரிந்து கொள்வோம். வாருங்கள். பரணி தீபம் என்பது கார்த்திகை தீபத்திற்குப் பூர்வாங்கமானது ஆகும். பரணி தீபத்தைக் கொண்டே, மறு நாளான கார்த்திகை தீபத்தன்று, திருவண் ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதாக ஐதீகம் உண்டு. பரணி நட்சத்திரத்திற்குத் தலைவன் யமதர்ம ராஜா. அந்த யமதர்மராஜாவைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே பரணிதீபம்.
பரணிதீபம் ஏற்றுவதிலும் முறைகள் உண்டு. நம் கையால் பஞ்சைத் திரித்துத் திரியாக ஆக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட 360 திரிகளை, ஒரு மடக்கில் போட்டு (மண்ணால் செய்யப்பட்ட பெரிய அகல் விளக்கில்) எண்ணெய் விட்டு ஏற்ற வேண்டும். ஏன் இப்படி?
நமது வாழ்நாள் முடிந்ததும், நமது ஆன்மா இரண்டு வகையான வழிகளில் பிரயாணம் செய்து, மேலுலகை அடைகிறது. ஒருவழி உத்தராயண வழி, இரண்டாவது வழி தட்சிணாயண வழி. நற்செயல்கள், தானம், தவம், வழிபாடு முதலானவற்றைச் செய்தவர்கள், ஒளிமிகுந்த உத்தராயண வழியில் பயணம் செய்து, பிரம்மலோகத்தை அடைவார்கள். அவ்வாறு செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள், ஆகியோரின் உயிர், தட்சிணாயணம் என்னும் இருள் மயமான வழியில் பயணம் செய்து, இருள் மயமான உலகை அடையும். அப்படிப்பட்ட ஜீவர்கள் பயணம் செய்யும் அந்த இருள் வழியிலும் ஒளி காட்ட வேண்டுமென யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே - பரணி தீபம்.
நமக்கு ஓர் ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதைக் குறிக்கும் முகமாகவே 360 திரிகளை ஒன்றாகச் சேர்த்துப் போட்டு பரணி தீபம் ஏற்றுகி றோம்.
அதாவது இருள்மயமான வழியில், இறந்து போய் பயணப்படுபவர்களுக்கு ஒளிமயமான வழியைக் காட்டு என தினந்தோறும் (தேவலோக கணக்குப் படி) பிரார்த்திப்பதாகக் கருத்து. பரணி தீபம் யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்பட்டாலும், அந்தத் தீபத்தில் பார்வதி-பரமேஸ்வரரை ஆவாகனம் செய்து, அவர்களை வழிபட வேண்டும். அதனால் யமதர்மராஜா மகிழ்வார். .
மேலும் நம் வீட்டிலும் சில காரணங்களால் சில நாட்களில் தீபம் ஏற்ற முடியாது இந்த தீபம் ஏற்றுவதால் இத்தோஷமும் நீங்கும் என பெரியவர்கள்
சொல்லீருக்கிறார்கள் இத்னை ஏற்றும் போது பார்வதி,,பரமேஸ்வரனை மனதில் தியானம் செய்து ஏற்ற வேண்டும்

1 comment: