Monday, 2 November 2015

கோதுமைப்புல்

கோதுமைப்புல் மிகச்சிறந்த மருத்துவத்தன்மைகளைக் கொண்டுள்ளதும் ஆரோக்கியமானதும் ஆகும்.நமது உடல் இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் இதில் அடங்கியுள்ளன.

கோதுமைப்புல் பொடி (Wheatgrass) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின்னர் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும்.

இதை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன.

கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

இதில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.

புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது.

இதிலுள்ள குளோரோபில்லானது எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, இரத்த உற்பத்தியையும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து, அவற்றை இயல்பான நிலையில் பேண உதவுகிறது.

இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைப்பதால் ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், கோதுமைப்புல் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

பற்சிதைவு மற்று இதர பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோதுமைப்புல் பவுடர் மிகச்சிறந்த மாற்றாகப் பயன்படுகிறது. அதற்கு கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

நச்சு நீக்கும் தன்மை கொண்டதால், இது இரத்தத்தை சுத்திகரித்து, மூச்சு மற்றும் வியர்வையில் உள்ள கெட்ட நாற்றத்தைப் போக்குகிறது.

கோதுமைப்புல் பவுடர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுறுதலில் மிகவும் உதவுகிறது.

சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.

No comments:

Post a Comment