Thursday, 10 December 2015

கர்மவினை தீராமலேயே ஜீவன் இறந்தவுடன் எங்கேயோ ஒரு இடத்தில் பிறப்பான் என்பது நிஜம்தானா?

கர்மவினை தீராமலேயே ஜீவன் இறந்தவுடன் எங்கேயோ ஒரு இடத்தில் பிறப்பான் என்பது நிஜம்தானா?
🌼 அப்படியென்றால் நாம் செய்யும் பித்ரு கர்மாக்கள் அவர்களை எப்படி போய் சேரும்?
🌼இறந்தவுடன் ஜீவன் 
பிறக்கமாட்டான்.
🌼நம் கணக்குப்படி ஒரு வருடம் யமபுரி (யமலோகம்) சென்று அங்கு தக்க தண்டனையை அனுபவித்து சூக்ஷ்ம ரூபத்தில் என்றால் அணுரூபத்தில் ப்ரஹ்மாண்டத்தில் தொங்கி கொண்டிருப்பான்.
🌼 மழை பெய்யும் பொழுது
🌼பூமிக்கு வந்து நீரிலோ, பழங்களிலோ, மரங்களிலோ சேர்ந்து நாம் சாப்பிடும் பொழுது நம் சரீரத்தில் சேர்ந்து வீரியத்தில் தாயின் கர்ப்பத்திற்குள் நுழைந்து அங்கே புது பிண்டரூபத்தில் ஜன்மா எடுப்பான்.
🌼இது பாப புண்ணியத்தின் பலனை பொறுத்து அமையும்.
🌼இதுவே பூச்சியாக,
மிருகமாகவோ ஜன்மா
🌼எடுக்க வேண்டி வந்தாலும் இதே முறையே.

No comments:

Post a Comment