Tuesday, 1 December 2015

வேதம் கண்ட விஞ்ஞானம் -

வேதம் கண்ட விஞ்ஞானம் -
🌼🔯முன்பே சொன்னதுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், உலகத்தின் தொடக்கம் முதலே இருக்கும் ஒரே மதம் இந்துமதம் மட்டுமே. சில ஈவெரா அடிமைகள் எப்போதும் விவாதங்களில் இந்து மதம் இந்தியாவை விட்டு வெளியே எங்கும் ஏன் இல்லை என்று கேட்பதால், அதற்கான ஆதாரங்களைத் தேடினேன், நீண்ட தேடலுக்குப் பிறகு ஆதாரம் கிடைத்தது. இது அமெரிக்காவில் இந்துமதம் வாழ்ந்ததற்கான ஆதராப் பதிவு.
🌼🔯உங்களுக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான், உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்த இந்துமத்ததை ஆங்காங்கே சூழ்ச்சிகளின் காரணமாக அழிக்க நினைத்தார்கள்,அழிக்கவும் செய்தார்கள், ஆனால் எங்கெல்லாம் அழித்தார்களோ அங்கெல்லாம் அதைவிட பல நூறுமடங்கு வளர்ந்துகொண்டே வருகிறது.
🌼🔯இந்த மாதிரி சம்பவங்கள் உலகில் நடந்துள்ளன , இன்றும் நம் முன் சாட்சியங்களாய் இருகின்றன. இது மனித அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமே உண்மை .. 1990ல் நடந்த நிகழ்வை இன்றுதான் நானே அறிந்துகொண்டேன், இதுபோல இன்னும் எத்தனையோ உண்மைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன இவை எல்லாம் நிச்சயம் வெளிவரும் காலம் தொலைவில் இல்லை.
🌼🔯இவை மறைந்துதான் உள்ளதே தவிர அழிந்துவிடவில்லை.. இந்து மதத்தை அழிக்க நினைப்பவன் நிச்சயம் அழிந்துபோவான்..
🌼🔯அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென் கிழக்கில் உள்ள இடம் தான் மிக்கி பேசின். இங்கு நிலவும் கடுமையான வெப்பம் இந்த பகுதியில் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.
🌼🔯வான் வழியா மட்டுமே இந்தப் பாலை வனத்தைக் கடக்க முடியும். பில் மில்லர் என்ற விமானப் படை விமானி (Pilot in the Idaho Air National Guard )August 10, 1990 ல் அவருடைய க்ளிடர் விமானத்தில் கடக்கும் போது பார்த்தது தான் இந்த அறிவியல் அதிசயத்தை உலகுக்கு ஆதாரமாகக் காட்டியது.
🌼🔯சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு (13.3 மைல்) சதுர அளவில் வரைபடம் மாதிரி குறுக்கும் நெடுக்கும் கோடுகளால் வரையப்பட்ட ஒரு குறியீடு.. அதுவும் சுமார் 9000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதன் முழு வடிவமும் தெரியும் ...பார்த்ததும் ஒன்றும் பிடிபடவில்லை அவருக்கு, இது ஏதாவது வரைபடமா? இல்லை ஏதாவது குறியீடா? என்னவாக இருக்கும் என்று குழம்பியவர்,
🌼🔯இதைப் பற்றி ஒரு விசாரணை மேற்கொண்டார் .அப்பொழுது தான் இது வெறும் குறியீடோ , வரைபடமோ அல்ல , இது காலம் காலமாக இந்து சமயத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் எனபது தெரிந்தது ..
🌼🔯மேலும் விமானப் படை தளத்தின் ஆரம்ப கட்ட விசாரணையில் இதற்கு முன் அந்த பகுதியில் பயிற்சி மேற்கொண்ட விமானிகள் இந்த சக்ரா வடிவத்தை பார்கவில்லை எனவும் , மில்லர் இதை பார்பதற்கு 2 நாட்கள் முன்புதான் அங்கே விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிய வந்தது .. இதனால் அதிர்ச்சியும் ஆச்சர்யமமும் ஒரு சேர , 48 மணி நேரத்தில் யாருமில்லாத , ராணுவ கண்காணிப்பில் இருக்கும் பாலைவனத்தில் எப்படி இவ்வளவு பெரிய சக்ரம் வந்தது என்ற கேள்வி அவர்களைப் படுத்தியது ..
🌼🔯மேலும் 9000 அடி உயரத்தில் பறந்து ஒரு முறை இந்த சக்கரத்தை சுற்றி வருவதற்கு மில்லர் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள். 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு இவ்வளவு துல்லியமாக மணலை தோண்டி , அதுவும் மூன்று அடி ஆழம், இந்த சக்ரத்தை உருவாக்குவது என்பது எந்த மனித சக்தியாலும் சாத்தியமில்லை என்ற உண்மை மட்டும் நன்றாக அவர்களுக்கு நன்றாக உரைத்தது..
🌼🔯முதலில் இது எப்படியோ மனிதர்களால் உருவாக்க பட்டது. இது முற்றிலும் பொய் என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கதறின. ஆனால் August 12, 1990 Boise TV இதை பற்றிய செய்தியை வெளி இட்டது , செய்தி வெளியானவுடன் இது இந்து மதத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் மேலும் இது எப்படி அமெரிக்க பாலைவனத்தில் அப்படித் தோன்றும் , இது பொய் , இதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் உலகெங்கும் விவாதிக்கத் தொடங்கினர்.
🌼🔯இதைப் பார்த்து அரசாங்கம், முறையான விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியது. உடனடியாக இந்தப் பகுதி அமரிக்க ஆராய்ச்சி பகுதி ஏரியா 51 கட்டுப்பாட்டில் வந்தது.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மண் சோதனை நிபுணர்களால் இந்த பகுதி சோதனை செய்ய பட்டது. ஆனால் எவராலும் இது எப்படி ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை. வழக்கம் போலவே சில நாட்களுக்கு பிறகு இதை பொய் என்று நிரூபிக்க முயற்சி செய்து முடியாமல்,கடைசியில் ஆய்வைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
🌼🔯இதை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன, இதே மாதிரி இன்னொரு சக்ரத்தை உருவாக்கி, இது மனிதனால் தான் உருவாக்கப்பட்டது என உறுதி செய்வோம் என அதற்கான முயற்சியில் இறங்கிய போதுதான்
🌼🔯அந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது. ஆம், இதை மீண்டும் உருவாக்க முடியாது என்பதே அந்த உண்மை .. கட்டிட கலையில் வல்லுநர் குழு , இந்த வடிவத்தை சாதாரண காகிதத்தில் கூட இதை முழுமையாக வரைய தடுமாறினார்கள். இது ஒருCIPHER என தெரிய வந்தது .. மேலும் இந்த முயற்சிக்கு 75000 முதல் 100000 டாலர்கள் வரை செலவு ஆகும் எனவும், முழுமையாக 142 நாட்கள் இதை விரைந்து முடிக்க தேவைப்படும் எனவும், இவ்வளவு செய்தாலும், இது துல்லியமான சக்ரமாக இருக்காது எனவும் தெரிவித்தது,
🌼🔯ஆராய்ச்சியாளர்கள் Dr. James Deardorff, a Research Professor Emeritus at the Atmospheric Science Department of Oregon State University மற்றும் அவரது நண்பர்கள் Don Newman and Alan Decker, இதை பற்றிய ஆராய்சியை சவாலாக மேற்கொண்டனர்..
🌼🔯அப்போதுதான் இந்த வடிவம் ஒன்பது உட்கட்டு முக்கோணங்கள் அடங்கியது , அதில் நான்கு மேல் நோக்கியும் , ஐந்து கீழ் நோக்கியும் ( சிவா , சக்தி ) இந்த முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முடிவில் தாமரை இதழ்கள் போன்ற வடிவத்தை உருவாகுவதும் தெரிய வந்தது ..
🌼🔯மேலும் இந்த ஒன்பது முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேலும் 28 சிறிய முக்கோணங்களை உருவாக்குகிறது ..இவை அனைத்தும் ஆதார மையமான ஒரு சிறிய புள்ளியில் இருந்தே ஆரம்பிகிறது ..இவை அனைத்தையும் சதுர வடிவ தாந்திரிய வடிவம் காக்கின்றது என்பதையும் கண்டுபிடித்தனர்.
🌼🔯இதை மனித முயற்சியால் உருவாக்கவே முடியாது என்பதை தெரிவித்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை..
🌼🔯உடனடியாக இவர்களது ஆராய்ச்சியின் முடிவுகளை பிரிட்டிஷ் பத்திரிகை UFO - Volume 6, # 3 in 1991 under the heading, ‘A Symbol on the Oregon Desert' என்ற தலைப்பில் வெளிஇட்டது.
15 வருடங்கள் விடா முயற்சியாக போராடிய இந்த மூவரும் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு கடைசியில் கண்டு பிடித்த உண்மை ..
🌼🔯எல்லாம் தொடங்கும் ஆதார புள்ளி..பூமி எனவும் , அதை சுற்றி உள்ள ஒன்பது முக்கோணங்கள் 9 கோள்கள் எனவும், மேல்நோக்கிய 12 சிறிய முக்கோணங்கள் சூர்ய மண்டலத்தை சார்ந்த 12 ராசிகள் எனவும் , கீழ் நோக்கிய 16 முக்கோணங்கள் புது நிலவில் இருந்து முழு நிலவாகும் 16 காலங்கள் ( நாட்கள் ) என்பதும் இதை அனைத்தையும் காக்கின்ற தாந்த்ரிய வடிவம் பால்வெளி எனவும் கண்டு பிடித்தனர் ..
🌼🔯ஆனால் இதுவரை இந்த சிக்கலான வடிவம் எப்படி அந்த பாலைவனத்தில் உருவானது என்பது மட்டும் கடைசி வரை எவருக்கும் தெரியவில்லை...
🌼🔯அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை..
கூகுள் mapல் நிகழ்வு நடந்த இடம் தோராயமாக
https://www.google.com/maps/d/viewer…
🌼🔯இதை பற்றிய விபரங்கள் மற்றும் கட்டுரைகள் –
http://www.sriyantraresearch.com/Opt…/optimal_sri_yantra.htm
http://www.iccra.org/…/ICCRA%20-%20OR%20-%20Steens%20Mounta…
🌼🔯அமெரிக்கத் தினசரிப் பத்திரிகைகளின் ஆதாரம்
https://news.google.com/newspapers…
http://www.deseretnews.com/…/14-MILE-WIDE-HINDU-SYMBOL-APPE…
https://news.google.com/newspapers…
மேலும் படங்களுக்கு
https://www.google.nl/search…
🌼🔯இந்துமதமே உலகத்தின் உயிர்நாடி..
இங்கு இன்னும் பகுத்தறிவு பழுதுபார்க்கப்படும்...

No comments:

Post a Comment