Thursday 24 December 2015

விஸ்வகர்மா என்றால் யார் ?

விஸ்வகர்மா என்றால் யார் என்று
பார்ப்போம்?
ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப்
பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ரிக்
வேதம் 10.81, 10.82 போன்ற ஸ்லோகங்களில்
விஸ்வகர்மாப் பற்றிய விஷயங்கள் உள்ளன.
(1) முழு உலகத்தையும் வடிவமைத்த தேவ
சிற்பி விஸ்வகர்மா.
(2) உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும்
சக்தியாகவும், உலகத் தந்தையாகவும்
விளங்குபவர் தனது அனைத்துப்
புறங்களிலும் விழிகளையும்,
வதனங்களையும், புஜங்களையும்,
பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா
காவியங்கள் “கலைகளின் தேவன்.
ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை
விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி,
மிகவும் முதல்தரமான, மேம்பட்ட,
தலைமையான தொழில் நிபுணர்,
அணிகலன்களில் புதுமைகளைப்
புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற
நிலையான இறைவன்.” என்று விராட் விஸ்வ
ரூபத்தைப் புகழ்கின்றன.
(3) தெய்வங்களின் வசிப்பிடங்களையும்,
அவர்களது வாகனங்களையும்,
ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும்
வடிவமைத்த என்ஜீனியர் ஆவார்.
விஸ்வகர்மாவின் பரம்பரை
விஸ்வகர்மாவின் புதல்வராக ஐவரை, வாயு
புராணம் நான்காம் அத்தியாத்தில்
கூறப்பட்டுள்ளது.
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற
முனிவரின் மகளாகிய காஞ்சனையை
மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா.
பிற்காலத்தில் மனுவின் பெயரினால்
அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில்
தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே
இலக்கணம் வகுத்து, மனுநீதி சாஸ்திரம்
என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
ஆங்கிலச் சொற்கள் Man , Hu man , Wo man
போன்றவைகளுக்கு இவரே காரணகர்த்தா
என்பது சிந்தனைக்குரியதே ! ஆங்கிலத்தை
இங்கிலீஷ் என்று கூறினாலும், பல உலக
மொழிகளில் இன்றும் ஆங்கிரஸ் என்றே
குறிப்பிடுகிறார்கள்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால
சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர
முனிவரின் மகளாகிய சுசனை இவரது
மனைவி. பராசர முனிவர் ஜோதிட சாஸ்திரம்
எழுதியவர்.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக
மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை
மணந்தார்.
4) சில்பி :
ப்ருஹூ முனிவரின் புத்ரி
கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜெய்மினி முனிவரின் மகளான சந்திரிகா
இவரது மனைவி.ஜெய்மினி முனிவர்
ஜெய்மினி சூத்திரம் என்ற ஜோதிட சாஸ்திர
நூலை எழுதியவர்.
விஸ்வகர்மாவின் கோத்திரங்கள்
1) மனுவின் வழித்தோன்றல்கள்
(இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும்
கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக்
வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக்
கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் –
சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில்
தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி
கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில்
கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ
ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில்
எண்ணத்தைப் பொறிப்போருக்கு) –
ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம

No comments:

Post a Comment