Wednesday, 23 December 2015

துளசி

பகவான் ஸ்ரீமன் நாராயணனை அர்சிப்பதற்கு துளசி தலமே மிகவும் சிறந்ததாகும். துளசியை ஹரிக்கொழுந்து என்றும் வில்வத்தை சிவக்கொழுந்து என்றும் அழைப்பார்கள். ஹரித்துழாய், துளவு, குல்லை, வளம், விருத்தம், பிருந்தா என பலப் பெயர்களைக் கொண்ட துளசி செடியின் அடிப்பாகத்தில் சகல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
எனவே துளசியை புண்ணிய தலமாகக் கருதி நமது இல்லங்களில் அதனை வலம் வருவது, பூஜைகள் செய்வது, நீருற்றி வளர்ப்பது ஆகியவற்றை செய்துவருகின்றோம்.
துளசி செடியில் பல வகைகள் உண்டு. அவை நற்துளசி, கருந்துளசி, நாய்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி என்று பல வகைகள் உண்டு. இவற்றில் நற்துளசி, கருந்துளசி இரண்டை மட்டுமே பூஜைக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நமது இல்லங்களில் சாளக்கிராமத்திற்கு துளசி தளத்தையும், சிவ லிங்கத்திற்கு வில்வ தளத்தையும் கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இத்தகைய பெருமைகள் வாய்ந்த துளசி செடியை நமது இல்லங்களில் வளர்த்து பூஜை செய்து நல்ல பலன்களைப் பெறுவோமாக.

No comments:

Post a Comment