Monday, 7 December 2015

ஏழரை சனி ஒரு குறிப்பு

ஏழரை சனி ஒரு குறிப்பு
இது ஒரு பொதுவான கணித அமைப்பில் சொலவது உங்கள் ராசி குடும்ப ராசி அடிப்படையில் வாழ்க்கை அமையும்
முப்பது வயதுக்கு முன் நடக்கும் ஏழறைச் சனி கெடுதலை மட்டுமே செய்யும்.
ராஜ யோக அமைப்பில் கிரகம் அமைந்திருந்து, ராஜ யோகம் அளிக்கும் கிரஹத்தின் திசை புத்தி நடந்தாலும் 30 வயதுக்கு முன் நடக்கும் ஏழரைச் சனி கெடுதலை தான் செய்யும்.
ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும், எந்த லக்னமாக இருந்தாலும், சனி ஜனன ஜாதகத்தில் நல்ல நிலையிலேயே இருந்தாலும் கூட, 30 வயதிற்கு முன்பாக சனி திசையும், ஏழறைச் சனியும் நடந்தால் அவர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
பிறக்கும்போதே ஏழறைச் சனி நடந்திருந்தாலும், அடுத்த சுற்று 30 வயதுக்கு முன்பாக வரும்போதும் பாதிப்புதான் உண்டாகும்.
முப்பது வயதுக்கு முன்பாக ஏழறைச் சனி ஆரம்பிப்பதற்கு முன் ஒருவர் வெகுளியாக இருந்தாலும், ஏழறைச் சனி முடிந்த பிறகு தெளிந்த அனுபவ ஞானியாவார்.
உலகம் என்றால் என்ன?, உண்மை என்றால் என்ன?, உறவுகள் என்றால் என்ன? என்று உலகின் பல உண்மைகளை உளவியல் ரீதியாக உணர வைப்பதே முப்பது வயதுக்கு முன்பு நடக்கும் ஏழறைச் சனியின் வேலையாகும். அப்படியும் சில ஜென்மங்களுக்கு உண்மையின் வலிமை புரியாது, அது அவரவர்களின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாமிடத்தின் முரன்பாடான நிலை ஆகும்.
30 வயதுக்கு முன் நடக்கும் ஏழறைச் சனி முடியும் போது அவரவர்களின் ஜாதக வலிமை மற்றும் அப்போது நடக்கும் திசை புத்தியை பொறுத்து ஏதாவது நன்மையை வழங்கி விட்டுத்தான் சனி பகவான் விலகுவார், அந்த வகையில் எனக்கு ஏழறைச் சனி முடிந்த போது ஜோதிடத்தை வழங்கினார்.
வயது முப்பது முதல் அறுபது வயதுக்குள் நடக்கும் ஏழறைச் சனியில் நன்மைகளைச் செய்வார், அந்த நன்மைகளின் அளவு, ஜனன ஜாதகத்தில் சனியின் நிலையை பொறுத்தும், அப்போது நடக்கும் திசை புத்தியை பொறுத்தும் அமைந்திருக்கும்.
அறுபது வயது முதல் தொண்ணூறு வயதுக்குள் நடக்கும் ஏழறைச் சனி ஆயுளை முடிப்பார் என்றாலும் அது ஜாதகத்தில் சனியின் நிலை, அப்போது நடக்கும் திசை புத்தியை பொறுத்து தான், ஜாதக ரீதியாக மூன்றாம் ஏழறைச் சனியில் மரணம் இல்லை என்றாலும் மரணத்திற்கொப்பான சம்பவங்கள் நடக்கும்.

No comments:

Post a Comment