Saturday, 5 December 2015

" ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு "

" ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு "
சப்தரிஷிகளில் ஒருவரான,
அத்ரி முனிவருக்கும்,
அனுசுயா தேவிக்கும்,
ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன்,
என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து,
மகனாகப் பிறந்த அவதாரமே,
ஸ்ரீ தத்தாத்ரேயர்.................
இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும்.ஞானம்,மோக்ஷம்,நற்குணங்கள் தரும்.(க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.
ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே.அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது.இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு.சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||
பொருள்: மாலை,கமண்டலம் ,உடுக்கை, ஈட்டி ,சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||
ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-
1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||
2.ஓம் குரு தத்த நமோ நமஹ||
குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-
1.
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
2.
பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.
முற்பிறவிப் பாவவினைகள் தீர, கர்மவினையின் பதிப்பால் தீராவியாதி,வறுமை நீங்க :-
அத்ரி புத்ரோ மஹாதேஜ தத்தாத்ரேயோ மஹாமுனியே |
தஸ்ய ஸ்மரண மாத்ரேன சர்வபாபை ப்ரமுச்யதே ||
இந்த மந்திரத்தை தினம் ஜெபிக்க நன்று .ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்கப் பன்மடங்கு பலன்தரும்.
சித்த புருஷர்களாக ,யோகிகளாக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து வர உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடையலாம்.
1.ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயாய நமஹ |
2.ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ||
ஸ்ரீ தத்தாத்ரேயரைத் தரிசிக்க :-
யதுகுலோ வனிகம் வௌஷட் ||
இந்த மந்திரத்தை இரவில் படுக்கையில் அமர்ந்தபடியே ஜபித்து வர ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்கலாம்.
சந்தானபாக்கிய ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:
தூரிக்ருத பிஸாச்சார்த்தி ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|
யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||
இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குருஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் பாக்கியம் கிட்டும்.

No comments:

Post a Comment