Friday, 18 December 2015

புல்லாங்குழலை

கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் இச்சையுள்ளவன். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன்... அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, "திவ்விய பிரபந்தம்' அழகாகப் பாடுகின்றது.
புல்லாங்குழலில் "ஸ்வரங்கள்' பிறக்க அதை இசைப்பவனின் பிராண சக்தியும், குழலில் உள்ள துளைகளும், இசைப்பவனின், "சிறு விரல்கள் தடவிப் பரிமாறுதல்' என்னும் நயமும் தேவைப்படுகின்றன.
இந்த உடலும் ஒன்பது துவாரங்கள் உடையதாக உள்ளது. அவை கழிவுகளை வெளியேற்றப் பயன்படுகின்றன. ஆனால் அழியக்கூடிய இந்த உடலை "கிருஷ்ண சேவை'க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும். "கிருஷ்ண சிந்தனம்' என்ற "பூரகத்தை' (மூச்சை உள்ளிழுத்தல்) செய்து, "கிருஷ்ண தியானம்' எனப்படும் "கும்பகம்' (மூச்சை உள்ளே அடக்குதல்) பயின்று, "கிருஷ்ண நாம கீர்த்தனம்' எனப்படும் அவனது திருநாமங்களாகிய "ரேசகத்தை' (மூச்சை வெளிவிடுதல்) செய்து யோகியாக மாறிவிடுபவனே உண்மையான கிருஷ்ண பக்தன். அவனுடைய மனதிலுள்ள "தீய குணங்கள்' என்னும் கழிவுகள், தாமாகவே வெளியேறிவிடுகின்றன.
"இப்படிப்பட்ட பக்தனே தனக்குப் பிரியமானவன்' என்று (யோமே பக்த: ஸமே ப்ரியா:) ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா வெ.சாமி அவர்களே !

    "ஶ்ரீ கிருஷ்ணாஷ்டகம்" கூறுகிறேன்.

    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    அதஸீ புஷ்பசங்காசம் ஹாரநூபுர சோபிதம்
    ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
    விலஸக் குண்டலதரம் தேவம்
    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
    பர்ஹி பிஞ்சாவசூடாங்கம்
    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    உத்புல்ல பத்ம பத்ரா௯ஷம் நீலஜீமூத ஸந்நிபம்
    யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ருக்மிணீ கேளிசம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்
    அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வ௯ஷஸம்
    ஶ்ரீநிகேதம் மகேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும்

    ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம்
    சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும்

    க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய:படேத்
    கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி

    ஶ்ரீ கிருஷ்ணாஷ்டகம் மொத்தம் 8. அய்யா வெ.சாமி அவர்களின் சமூகத்திற்கு வருகிறது.

    ReplyDelete