Sunday 6 December 2015

கர்ணனும் அர்ஜுனனும்!!

கர்ணனும் அர்ஜுனனும்!!
----------------------------------
அர்ஜுனனுக்கு சமான மாவீரன் கர்ணன் ஆவான். ஆனால் அவனுடைய தவறான சேர்கயினால் மரணத்தை தழுவினால் என்பது பாரதம் தெரிந்த அனைவரும் அறிந்ததே. இங்கு கர்ணன் மற்றும் அர்ஜுனனை மையமாகக்கொண்டு ஆன்ம விசாரணையின் பொருட்டு, தத்துவ ஆராய்ச்சியில் முனைவோம்!!
அர்ஜுனன் மற்றும் கர்ணன் இருவருமே இங்கு ஜீவர்கலாக (அ) ஜீவான்மாக்கள் ஆவர். அதாவது நாம். நாம் பயணிக்கும் தேர் நம்முடைய உடம்பு. நம் சரீரத்தைக் கொண்டு தான் நாம் நம் வாழ்வினை நடத்துகின்றோம். இங்கு மிகவும் முக்கியமானது நம் வாழ்வினை யார் இயக்குவது என்பதுதான். ரதத்தை யார் ஓட்டுகிறார் என்று பார்த்தல், அர்ஜுனனுக்கு பரமாத்மாவாகிய கண்ணனும், கர்ணனுக்கு தொல்லை மிகுந்த சல்லியன் என்பவனும்.
கண்ணன் என்பது இறைவன் அல்லது தர்மம்.
சல்லியன் என்பது நமது ஆணவம் (அ) நம் மனம்.
அர்ஜுனன் துவண்டு விழும்போதெல்லாம் அவனை கை தூக்கி விடுவது ஆண்டவன் கன்னன்பிறான்.
கர்ணன் தயிரியத்துடன் இருந்தாலும் அவனை தளர்ச்சியுற செய்வது ஆணவமாம் சல்லியன்.
"நீ ஒன்றுக்கும் உதவாதவன். தேரோட்டியின் மகன் நீ. அர்ஜுனன் கரத்தால் மடிவது உனது விதி. கையாலாகாதவன் நீ" என்று கர்ணனை சல்லியன் சதா இகழ்ந்துகொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் போரின்னடுவே கர்ணனது தேர் பள்ளத்தில் சிக்கிக்கொள்ள அம்போ... என்று கர்ணனை விட்டுவிட்டு சல்லியன் சென்று விடுவான்.
ஆனால் கண்ணன் அப்படியல்ல. காண்டீவன் துவண்டபோதும், "காண்டீபா! நான் உள்ளேன். எதற்கும் நீ அஞ்சாதே. கவலை அனைத்தையும் விட்டு என்னை நம்பு" என்று சரணம் அளித்தான். அர்ஜுனனை வெற்றியுரச்செய்தான்.
இப்போது நம் கதைக்கு வருவோம்.
சல்லியன் என்பது நம் ஆணவம், நம் மனம் ஆகும். நமது ஆணவமும், மனமும் நமக்கு எப்பொழுதும் குழப்பத்தையும், துன்பத்தையும் தான் தரும். மனதைக்கொண்டு எப்பொழுதுமே நாம் உன்னதமான முடிவை எடுக்கவே முடியாது.
ஒருவன் நம்மிடம் வந்து "ஐயா! பசி. சாப்பாடு போடு" என்று கேட்டால், தர்ம சிந்தனையுள்ள நம் புத்தி அவனுக்கு உணவளிக்க தயாராய் இருந்தாலும், கேடுகெட்ட மனம் குறுக்கே வந்து, "கையும் காலும் அவனுக்கு நல்லா தானே இருக்கு. சாப்பாடெல்லாம் இல்லேன்னு சொல்லு." என்று நாம் செய்யும் தர்ம காரியத்திற்கு தடையால் இருக்கும்.
பேருந்தில் ஒரு முதியவர் நிற்கமுடியாமல் அவதியுறுவர். அப்போது நம் நற்புத்தி சொல்லும், "பாவம் நாம் எழுந்து அவருக்கு இருக்கை தருவோம் என்று" ஆனால் ஈன மனம் குறுக்கே வரும், "பார்! எவ்வளவு கூட்டம். நிற்க முடியுமா உன்னால்? பெரியவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவார். எல்லோரும் அமைதியாக இருப்பதைபோல் நீயும் இரு." என்று குடியை கெடுக்கும். நம் மனமே நம் விரோதி.
"மனமானது ஒரு நல்ல அடிமை. ஆனால், மிகக்கொடிய எஜமானன்"
நம் வாழ்வை நம் மனதின் சொல்படி கேட்டு நடந்தால், சல்லியனால் வஞ்சிக்கப்பட்டு கர்ணன் மாண்டதைப்போல நாமும் நாசமாவோம்.
எப்போதும் இறைவன் மீது பாரத்தை போட்டு, அந்த சமாயதிர்க்கு எது தர்மமோ அதை செய்யுங்கள். மனம் கூறுவது தவறு என்று தெரிந்தும் அதன் வழி செல்லாதீர்கள். உங்களுக்கு தெரியும் எது தர்மம், எது அதர்மம் என்று. தர்மத்தின் சொல்கேட்டு நடந்தால், கண்ணனது சொல்கேட்டு அமரனான அர்ஜுனைப்போல எப்போதும் வெற்றிதான்.
தர்மம் எப்போதும் வெற்றியே தரும் என்றல்ல. தர்மத்தின் வழியில் சென்று தோல்வியுற்றாலும் அதுவும் வெற்றிதான்!!!

No comments:

Post a Comment