அழிவில்லாத ஒளிதேகம் அடைவது எப்படி?....
படைப்பின் ரகசியம்.....
தநதையின் சரீரத்தில் உறையும் உயிரும், தாயின் சரீரத்தில் உறையும் உயிரும், பூமிக்கு ஒரு புதிய உயிரை கொண்டு வர சங்கல்பம் கொள்ளும்போது, இரு உயிர்களும் உணர்ச்சியாக விரிந்து, உஷ்ணமாக பரவி, சரீரம் உருகி, பின் தந்தையிடம் சுக்கிலமாகவும், தாயிடம் சுரோணிதமாகவும் வெளிப்படுகிறது.
வேல் வடிவம் கொண்ட உயிரணு தந்தையிடம் இருந்து புறப்பட்டு கோடானுகோடி அணுக்கள் நிறைந்த பந்தயத்தில் ஓர் உயிரணு மட்டும் வெற்றி அடைகிறது, அதுவே நீ.
தன் கூரான வேல் முனையால் அண்டம் எனும் தாயின் கருமுட்டையினை பிளந்து கொண்டு, சுக்கில சுரோணாதிகளை கொண்டு கருவாக வளர்கிறது.
ஆதியாக வந்த வேல் ரூபமான உயிரணுவே(ஞான உடல்) ஞான காரகன் எனும் கேது, அந்த ஐந்து இந்திரியங்களை கொண்ட உயிரணுவின் தத்துவமே ஐந்தலை நாகம், ஐந்தலை கொண்ட பிரம்மா.(அர்த்தமுள்ள இந்து மதம்).
கேதுவான/ ஞானமான உயிரணு ராகு எனும் உலக உடலை உருவாக்கி 285 நாட்களில் முழு சிசுவாக ஜனிக்கிறது.
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் அவை நம்முள் தான் உள்ளது. நம் சரீரமே நிழல் தான். கருவில் நிழலான ஒரு சரீரம் உருவாவதற்கு முன் உயிரின் கருத்தில் ஒரு நிஜமான சரீரம் உண்டாகிறது.
நிஜமான உயிர்சரீரம் அசையும்போது நிழலான ஊன் சரீரம் அசைகிறது. அவனன்றி ஏதும் அசையாது. அந்த உயிர் சரீரம் மட்டுமே கடவுள். அவரவர் சரீரமே கோயில், அவரவர் உயிரே கடவுள்.
நம் உருவத்திலே நம்மோடு பொய் சரீரம் கடந்து உள்ளாய் ஒளி சரீரமாக ஒளிந்திருக்கும் கடவுளான உயிர் தன் கவனத்தில் இருந்து இந்த பொய் சரீரத்தை விடுத்தலே மரணம்.
நம்முள் கடந்து உள் கடவுளாய் உயிர் ஒன்றே உறை வதறியாது புறத்தில் தேடினால் இறுதி வரை கடவுளை காண இயலாது.காலன் மட்டுமே எதிர்படுவான்.
ஊன் சரீரம் மறந்து உயிர் சரீரம் கவனத்தில் கொண்டு அழியா நிலை அடைதலே சம்மதம் உயிர்கலை.
உயிரே கடவுள்....அகம் பிரம்மாஸ்மி....
No comments:
Post a Comment