Wednesday, 23 December 2015

செவ்வாயின் பரிகாரம்

செவ்வாய் தோஷம்
ஒருவர் ஜாதகத்தில் குடும்ப
ஸ்தானமான 2,
சுகஸ்தானமான 4, களத்திர
ஸ்தானமான 7, மாங்கல்ய
ஸ்தானமான 8, கட்டில் சுக
ஸ்தானமான 12 போன்ற
இடங்களில் செவ்வாய்
அமைந்திருந்தால்
செவ்வாய் தோஷம்
உண்டாகிறது.
செவ்வாய் தோஷம்
உள்ளவருக்கு செவ்வாய்
தோஷம் உள்ளவரை திருமணம்
செய்தால் மட்டுமே மண
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இல்லையெனில் மண
வாழ்க்கை ரீதியாக
செவ்வாய் திசை அல்லது
புக்தி காலங்களில்
பிரச்சினைகளையும் இழப்புகளையும்
சந்திக்க நேரிடும்.
செவ்வாய் ரத்தகாரகன்
என்பதால் பெண்கள்
ஜாதகத்தில் செவ்வாய்
பலம் பெறுவது நல்லது.
செவ்வாய் பலமிழந்து
இருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட
பாதிப்பு, மாதவிடாய்
கோளாறு உண்டாகும்.
செவ்வாயின் பரிகார
ஸ்தலம்
செவ்வாயின் பரிகார
ஸ்தலமாக வைத்தீஸ்வரன்
கோவில் விளங்குகிறது.சகல
வியாதிகளையும் தீர்க்கும்
வல்லமை கொண்டு
ஸ்ரீவைத்திய நாத சுவாமி
இத்ரரிருத்தலத்தில்
செவ்வாயின்
தொழுநோயை குணப்படுத்த
மருத்துவராக வந்தவர். இங்கு
செவ்வாய் எனும்
அங்காரகன் வீற்றிருப்பதால்
இது அங்காரக ஷேத்திரம்
எனப்படும். முத்தையா என
அனபுடன் அழைக்கப்படும் முத்து
குமாரசுவாமியே இத்தலத்தின்
முருகன். வைத்தீஸ்வரன் கோவில்
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம்
சாலையில் 10 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.
செவ்வாயை வழிபடும் முறை
செவ்வாய்க்குரிய
அதிதேவதையான முருகனையும்
சிவனையும் வழிபடுவது.
கோதுமை ரொட்டி, சர்க்கரை,
வெள்ளை, எள்கலந்த
இனிப்பு வகைகள் மற்றும்
துவரையை செவ்வாய்
கிழமைகளில் ஒரு மணமாகாத
ஆணுக்கு
தானம் கொடுப்பது.
செவ்வாக்கிழமைகளில்
விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி
விரதம் மேற்கொள்வது,
தினமும் கந்த சஷ்டி கவசம்
படிப்பது நல்லது.
கார்த்திகேய பூஜை,
ருத்ராபிஷேகம் செய்வது
மூன்றுமுகருத்ரலலட்சம்
அணிவது.
செண்பகப்பூவால்
அர்ச்சனை செய்வது,
பவழ மோதிரம் அணிந்து
கொள்வது, செப்பு
பாத்திரங்களை உபயோகிப்பது,
சிவப்பு நிற ஆடை மற்றும் கைகுப்டையை
பயன்படுத்துவது, நெற்றியில்
சிவப்பு சந்தனத்தால் திலகம்
அணிவது,
மாய நமஹ என்ற
செவ்வாயின் மூல
மந்திரத்தை 40 நாட்களில் 7000
முறை சொல்லி வழிபடுவது
ஆகியவை.

No comments:

Post a Comment