Thursday, 14 January 2016

துளசி

துளசியை பார்த்தாலே ஒருவனின் பாவங்கள் போய்விடும் துளசியைத்தொட்டு வணங்கினால் உடல் மனம் தூய்மையாகும். துளசியைப் பிரார்த்தனை செய்தால் நோய்கள் தீரும். துளசியை நீர் ஊற்றி வளர்த்தால் மரணபயம் விலகும் துளசியை நடுவதும் மாற்றி நடுவதும் கடவுளுக்கு நிகரான ஆற்றல் தரும். துளசியை கிருஷ்ணரின் பாதகமலத்தில் சேர்த்தால் இறைவன் அகமகிழ்ந்துபோய் அனைத்தும் அருளுவான். துளசி என்றாலே ஒப்புயுர்வற்றவள் என்று பொருள் வண்ண மலர்கள் எதற்கும் இல்லாத ஆற்றல் ஒரே ஒரு துளசி தளத்துக்கு உண்டு. துளசி தளமே இல்லாத வீடு இறைவனே இல்லாத வீடு. துளசி இருக்கும் இடத்தில் விஷ்ணுவும் மகாலஷ்மியும் நிரந்தரமாக குடியிருக்கின்றனர் என்பது வேதவாக்கு.images (2)
ஸ்ரீமத் பாகவதம் துளசியைப் பற்றி சொல்லும்போது துளசி மட்டுமே பகவானுடைய சரணத்திலும் கழுத்திலும் இருக்கக் கூடியவள். எவன் ஒருவன் ஒரு துளசி தளத்தையும் சிறு துளி தண்ணீரையும் எனக்கு அர்பணீக்கிறானோ பகவான் அந்த பக்தனிடம் தன்னைத் தானே அர்ப்பணித்துக்கொள்கிறான். என்பது கீதை வாக்கியம்.download (1)
மகாலஷ்மி துளசிச் செடியாக பூமிக்கு வந்த புராணக்கதைகள் பல உண்டு. மார்க்கண்டேய மகரிஷிக்கு துளசி வனத்தில் குழந்தையாகக் கிடைத்தவள் மகாலஷ்மி. ராதையின் மறுபிறவியே துளசி என்றும் சொல்லப்படுகிறது, ராதைக்கு பிருந்தா என்ற பெயரும் உண்டு அதனால்தான் துளசி வனங்கள் பிருந்தாவனம் என்றழைக்கப்படுகின்றனimages (4)
வட மானிலங்களில் கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியில் மஹாவிஷ்ணுவுடன் துளசி விவாகம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். வண்ண மலர்கள் மலர்ந்திருக்கும்போது மட்டுமே மணம் பரப்பும். ஆனால் துளசிக்கு நிரந்தர மணம் உண்டு. அதன் வேர் தண்டு இலை விதை அனைத்தும் மணம் நிறைந்தவை.
துளசிச் செடிக்கான மகத்துவத்துக்கு காரணம் அதன் பாகங்களில் அனைத்து தெய்வங்களும் அனைத்து வேத புராணங்களும் உறைவதுதான்.பிரம்மா அதன் கிளைகளிலும் அனைத்து தெய்வீகஸ்தலங்களும் அதன் வேர்பகுதிகளிலும் கங்கை நதி தண்டுப்பகுதியிலும் அனைத்து தெய்வங்களும் துளசிச் செடியின் உச்சிப்பகுதியில் இருப்பதாக ஐதீகம்.download (2)
துளசிக்கான பெயர்களோ ஏராளமானவை, வகைகளும் பல உள்ளன. வைஷ்ணவி விஷ்ணுவல்லபா ஹரிப்பிரியா வ்ருந்தா மஞ்சரீ என்று ஆன்மீகப் பெயர்கள் கொண்டிருந்தாலும் ஆண்டாள் இதனை நாற்றத்துழாய் என்கிறாள். தமிழ் இலக்கியம் திருத்துழாய் என்கிறது. இது தவிர துளவுகொல்லை வனம் விருத்தம் மாவங்கர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
துளசியின் வகைகளும் நற்றுளசி செந்துளசி தாய்துளசி நிலத்துளசி கல்துளசி கருந்துளசி என்று பலவகையாகச் சொல்லப்பட்டாலும் நமக்குத் தெரிந்த வகைகளான கிருஷ்ணதுளசி ராமதுளசி வனதுளசி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.images (3)
துளசியின் மருத்துவ குணம் பற்றிப் பேசாத பழம் பெரும் மருத்துவ  நூல்களே இல்லை எனலாம் பதார்த்த குண சிந்தாமணி அகஸ்தியர் குரல் தன்வந்திரி சுஷ்ருத சம்ஹிதா சரக சம்ஹிதா போன்ற பல ஆயுர்வேத நூல்கள் துளசியின் மகத்தான மருத்துவ குணங்களையும் எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பக்குவத்தில் துளசியை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளன. ஸர்வ வியாதி நிவாரணியானவளை ஸர்வ பக்தி ப்ரதாயினியாக விளங்குகின்ற துளசி மாதாவை சதா நம் மனதில் தியானம் செய்துகொண்டு இருப்போம்.

No comments:

Post a Comment