Monday, 18 January 2016

வீட்டு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்....

வீட்டு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்.....
.......
*பூஜையறை என்று தனியாக இருப்பது நல்லது.

வெள்ளி,செவ்வாய் ஆகிய தினங்களில் பூஜையறையை கழுவ வேண்டும்.அல்லது ஈரதுணியால் 

துடைக்க வேண்டும்.அம்மாவாசையை,பவுர்ணமி,வருடபிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் முதல் 

நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

*பூஜையறையில் உடைந்த சிலைகள்,தெய்வபடங்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.இது இறை சக்தியை குறைக்கும்.


*தெய்வ படங்கள் எதுவாயினும் சாந்தமான படங்களை வைக்க வேண்டும். வினாயகர், சிவ குடும்பம், 


லக்ஷ்மி (அமர்ந்த நிலையில்) சரஸ்வதி, மற்றும் காயத்திரி இந்த தெய்வ படங்களை மின் வயர்களால் 

அலங்கரிக்க கூடாது.

*தெய்வ படங்களுடன் காலம் சென்றவர் படங்களை வைக்க கூடாது.



* தெய்வ படங்கள் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு வைக்கவேண்டும் 


*காமாட்சி விளக்கை வெறும் தரையில் வைக்ககூடாது. பலகையில் பச்சரிசி இட்டு நாணயம் ஒன்று 


வைத்து அதன் மேல் வைக்கவும்.

*பூஜையறையில் ஐம்பொன்னால் ஆன (வினாயகர், லக்ஷ்மி என சாந்த) விக்ரகம் வைப்பது வழிபடுவது 


நல்லது. இச்சிலைக்கு வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் அபிஷேகம் செய்து ஆராதிப்பது நல்ல 

பலன்கள் கிடைக்கும். மற்றும் இது இறை சக்தியை பன்மடங்காக அதிகரிக்குவும் செய்யும்.

*தெய்வங்களுக்கு வாசனை இல்லாத மலர்களை வைக்க கூடாது.


*நர்மால்யம் என்பது வாடிய மலர்கள் அதாவது (முதல் நாள் வைத்த மலர்கள்) இதனை விட்டு வைக்க 


கூடாது.

*பூஜையறையில் நின்றவாரு வணங்க கூடாது இது குற்றம் ஆகும். குடும்பத்துடன் அமர்ந்து 


வணங்குவதே சிறப்பாகும்.

*ஓம் என்ற மந்திரத்தை பூஜையறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடர்ந்து கூறி தியானம் செய்து 


வந்தால் எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், ஏன் வியாதியும் நெருங்காது.

1 comment: