Saturday 20 February 2016

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறை

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.

முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.

1 comment: