Saturday, 20 February 2016

சாமுத்ரிகா சாத்திரம்

சாமுத்ரிகா சாத்திரம்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.

இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.

பழமை

இந்துமதம், புத்தமதம், சமணமதம் ஆகியவற்றில் இதன் கூறுகள் மேற்கோள்களாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாத்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களுடன் இருந்ததாக அவர்களைப் பற்றிய புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

ஆண் பெண் வகைகள்


ஆண் வகைகள்

   முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண்,
   மான் சாதி (அ) மத்திம சாதி ஆண்,
   காளை சாதி (அ) அதம சாதி ஆண்,
   குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும்.
முயல் சாதி
ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.
மான்சாதி
அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.
காளைசாதி
மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.
குதிரைசாதி
கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.

பெண் வகைகள்

மூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப் பெண்கள் (பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.
சித்தினி
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.
சங்கினி
பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.
அத்தினி
அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

சில உதாரண லட்சணங்கள்

ஆண்

ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்

பெண்

சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.
உடல் அமைப்பு
நீண்ட கால்களும் கைகளும் உடைய பெண்கள், ஆண்களை அடக்கியாள்வார்கள்.. ஒரு பெண் சாதாரண நிலையில் நின்று கொண்டிருக்கும்போது (அவளது கைகள் தரையை நோக்கி தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில்) அவளது இரு முழங்கைகளுக்கும் இடையே ஒரு கற்பனைக்கோடு வரையப்படுவதாகக் கொள்வோம். அக்கோட்டின் மையப்பகுதிக்குச் சரியாக அவளது நாபி ( தொப்புள்) அமைந்திருந்தால் அவள் சிறந்த பெண்ணாவாள். அவளது பெண்ணுறுப்பு மிகச் சிறிதாக இருக்கும்; கணவனின் அன்பைப் பெறுவாள். உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி அதிகமிருக்காது. அவள் வைத்தது விளங்கும் ; தொட்டது துலங்கும்.

1 comment: