Friday, 26 February 2016

குணங்களில் பிணைக்கப்பட்டுள்ள மனிதன் கா்மங்களை விட்டுவிடுவதால் என்ன நடக்கும் ?

குணங்களில் பிணைக்கப்பட்டுள்ள மனிதன் கா்மங்களை விட்டுவிடுவதால் என்ன நடக்கும் ?
கா்மேந்திாியங்களை அடக்கி, இந்திாிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய்யொழுக்கமுடையவன் என்று கூறப்படுகிறான். 3.6
இரு சக்கர வாகனத்தில், எாி சக்தியானது ஒரு புறம் வாகனத்தை உந்தித் தள்ளுகிறது. மற்றொரு புறம் வாகனத்தின் இயக்கத்தை நாம் தடுப்பது முறையற்ற செயல். முதலில் திரவ வடிவிலான எாி சக்தி வாகனத்துக்கு கிடைப்பதை நிறுத்த வேண்டும். பின்பு வாகனத்தை நிறுத்த வேண்டும்.
அது போன்றே, முக்குணங்களில் கட்டுப்பட்டிருக்கும் போது ஆன்மாவுக்கு, மனம் என்ற ஒன்று இருக்கிறது. மனம் ஒயாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஐம்புலன்களை மட்டும் தடுக்க முயற்சிப்பது முறையற்ற செயல். மனிதனுடைய பாவ புண்ணியங்கள் அவனுடைய செயல்களைச் சாராமல் அவன் மன நிலைமையைத்தான் சாா்ந்துள்ளன.

1 comment: