Saturday, 6 February 2016

வசீகரிக்க

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக
வழிமுறை !!!
-----------------------------------------
"வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி
சகலரும் வசி" என 18 முறை கண்ணாடியில்்
உங்க முகத்தை பார்த்தபடி
சொல்லுங்க.அன்றைய நாளில் இன்னும்
கூடுதல் அதிர்ஷ்டமா இருக்குமாம்
*
எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக
வழிமுறை:-
நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில்
அல்லது வேலை பார்க்கிறீர்களா?
இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல்
பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்
டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்
வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிப
ுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள்,
இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்
துறையில் இருந்தாலும் சரி! எல்லோரையும்
வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி
இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள்
செய்ய வேண்டும்.தினமும்
காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.
(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும்
பரவாயில்லை.தொடரலாம்)
ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு
விரிப்பின் மீது நின்று அல்லது
அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை
உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4
திசைகளையும் நோக்கி தலா 108 முறை
ஜபிக்க வேண்டும்.
ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு
கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில்
ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்க
க்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட
வேண்டும்.
துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே
குடிக்கவேண்டும்.
(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில்
பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள்
அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவி
ட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்)
91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில்
நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.
இது 90 நாளுக்குமேல் தான்
செயல்படத்துவங்கும்.
ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது
கோடான கோடி நன்றிகள்
முக வசியம் உண்டாக மந்திரம் !
------------------------------
நமது முகத்தில் லட்சுமி கடாட்சம்
உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன்
கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய
முறையினை பயன்படுத்தலாம்.
மந்திரம்
-------
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம்
திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி
என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும்
லட்சுமணரும் போலே அம்மா தாயே
லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே
சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர
அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து
பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே
சுவாகா.
பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து
சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம்
சொல்லி விபூதி சாத்தவும்.
இராஜ வசிய மந்திரம்
----------------------
வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட
பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,
துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு
செபிக்க ராஜவசியம் உண்டாகும்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என
அரசு சார்ந்தவர்களிடம்
வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.
வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள் :-
-----------------------------------------
வசி வசி என்று தினம் செபித்தாயானால்
மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும்
என்றார்கள் நம் சித்தர்கள்.
வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய
சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம்
ஆட்டி படைக்கிறது என்று பார்ப்போம்.
நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில்
மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.
அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது,
கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.
தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற
பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ்
கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக
முயற்சியே இந்த வசியம் எனப்படும்.
நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான
தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை
அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான்
வசியம்.
இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம்.
சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர்
வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம்,
பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று
ஆறு வகையாக பிரித்துள்ளனர்.
உலகம், பகைவர் மற்றும் விலங்கு
வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும்,
அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற
அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர்
வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும்
பயன்படுத்தி உள்ளனர்.
வசியத்தை நடைமுறை வாழ்க்கையில்
பயன்படுத்தும் பொழுது
1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு
நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி
இவைகளை பற்றி ஆராய்வோம்.
குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட
மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே
மந்திரம் எனப்படும்.
வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும்
அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய
முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர
எழுத்துகளுக்கு உண்டு.
நமது சித்தர்களும் நமசிவாய என்ற
ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின்
ரகசியங்களும் அடங்கி இருந்ததை
அறிந்திருந்தார்கள்.
நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன்
என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.
இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி
அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும்
பயன் படுத்தி உள்ளனர்.
ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது
வசியதிற்கான முலமந்திரமாகும்.
இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை
ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை
செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள்
சித்தர்கள்.
கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.
உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம்
இந்திரன்.
வசிய ஆற்றலைத்தான் இன்றைய விஞ்ஞானம்
மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.
எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை
படுத்தி படிக்கும் போது நமது உடலில்
மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும்.
இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று
குறிப்பிடுவார்கள்.
தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை
எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம்
தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின்
மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட
காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது
யந்திர முறையாகும்.
இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22
வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால்
செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம்
அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால்
ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.
இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள்
பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம்
வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.
இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை
மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது
கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று
லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும்.
இது ஒரு முறை.
எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும்
மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன.
இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற
நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர
முறையாகும்.
தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று
வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே
நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால்
எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும்
தராது.
தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின்
பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி
நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது
போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை
சிதற விட மாட்டார்கள்.
அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?
முறையாக உருவேற்றபடாத எந்த
சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

1 comment: