Monday, 1 February 2016

நோய் குணமாக

மார்புச்சளிக்கு ஏலப்பொடி
தலை சுற்றல் குணமாக:
சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
இருமல் குணமாக:
ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.
தலைபாரம் குறைய:
நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
மார்புச்சளி நீங்க:
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.
ஜலதோஷம் குணமாக:
முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
வாந்தி நிற்க:
துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.
குமட்டல்:
கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

1 comment:

  1. மார்புச்சளி, ஆஸ்துமா, இவையெல்லாம், உடம்பில் அதிகச் சூட்டினாலோ, அல்லது அதிக குளிர்ச்சினாலோ வரக்கூடியது. முதலாவது, குழந்தையில் இருந்தே, தினமும் அதிகாலை குளித்து பழக வேண்டும். சளி பிடித்தால், ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால், சளிக்கு மருந்து எடுத்து, முற்றிலுமாக குணப்படுத்தி விட வேண்டும். இரவு, எக்காரணங்கொண்டும், குளிர்பானம், தயிர், எலுமிச்சை, ஆரஞ்சு மாதுளை, திராட்சை, கொய்யா, வாழைப்பழம், ஊறுகாய் ஐஸ்கீரீம், இளநீர் என்று அருந்தி பழகக்கூடாது. பெண்களாக இருந்தால், அதிகாலை குளித்ததும், சாம்பிராணி புகை தலைக்கு காட்ட வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள்
    சிறுநீர் கழித்தால், உடனே ஈரத் துணியை மாற்றிவிட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு, சளி பிடித்தால், உரசு
    மருந்து (ஜாதிக்காய், மாச்சக்காய், பெருங்காயம், இந்துப்பூ, வசம்பு இவற்றை சுட்டு வைத்துக்கொண்டு, பிறந்த மாதத்தை கணக்கிட்டு, ஒவ்வொன்றையும், தாய்ப்பாலிலோ, நக்சூட்டு வெந்நீரிலோ, கலந்து கொடுக்க சளி குணமாகும். முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெற்றோர், குளிர்ந்த ஆகாரங்கள் சாப்பிட்டால், குழந்தைகளுக்கும் சளி பிடிக்கும். ஆகவே, சிறு குழந்தையிலி
    ருந்தே, சளி பிடிக்காமல், பிடித்தாலும், அதை முற்றிலும் நீக்கிவிடும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, என் தாத்தா பரம்பரை சொத்து, எனக்கும் இருக்கிறது என்பதெல்லாம் அறிமையே.. ஒரு தாய் தன் குழந்தை வளர்ப்பில் சிரத்தை எடுத்துக் கொள்ளாமையே இதற்கு காரணம். இதுபோன்று தான் மூச்சு திணறலும். வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்யும்போது, குழந்தைகள் அருகில் இருந்தால், அவர்கள் மூச்சுக் குழலுக்குள் போய் விடும். குழந்தைகளுக்கு வெளியேற்றத் தெரியாது. அது அவர்களுக்கு சளியாகி
    மூச்சுத்திணறல் ஏற்பட வழிவகுக்கிறது.
    குழந்தை வளர்ப்பை, ஒரு கலை நயத்தோடு வளர்க்க வேண்டும். அழுக்கு துணிகள், வீட்டில் ஒட்டடைகள் அதிகம் சேர்க்கும் வீட்டில், இந்த மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்பிருக்கிறது. ஆஸ்துமா உள்ளவர்கள், குளிர்பானங்களை மறந்து விடுவது நல்லது. அதற்குப் பதிலாக பால் அருந்தலாம். தேன் மிகவும் நல்லது. காட்டில் முள்ளெலி என்று, உருண்டை வடிவில் நீள முட்களைக் கொண்ட ஆட்களைக் கண்டால், பந்து போன்று சுருண்டு கொள்ளக்கூடிய எலியை உறித்து, சமைத்து ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உணவாகக் கொடுத்தால், ஆஸ்துமா படிப்படியாக குறையும்.


    ReplyDelete