Monday 22 February 2016

சனீஸ்வரன்

புராணங்கள் ஒன்பது கிரகங்களையும் சப்த ரிஷிகளின் மூலமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதில் சிருஷ்டியின் கர்த்தாவான பிரம்மனால் படைக்கப்பட்ட ரிஷிகணங்கள் நிறைய உண்டு என்றாலும் அதில் முக்கியமானவர்கள் சப்த ரிஷிகள் ஆவார்கள். மிரிஷி, புலத்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரீஷ, புலகர், வசிஷ்டர், சூரியன்,  மரிசியன், புத்திரவைவதமனு .இவருக்கு 13 மணைவிகள் முதல் மணைவி அதிதியின் வயிற்றில் உதித்த வர் சூரியன். சூரியனுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மணைவியான நிழலரசி சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவர்தான் சனீஸ்வர பகவான்.

சனிபகவானுக்கு இரவிமகன், முடவன், சுன், முதுமகன், மந்தன், காரி, கரியவன், நீலன், என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும், பலதமிழ் நூல்களில் அந்தகன், கீழ்மகன், சாயாபுத்திரன், ச்ந்தில், சவுரி, சாவகன், தமனியன், நோய்முகன், பங்கு, மேற்க்கோள், கணங்கன், சனிக்கோள், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். நாடிகிரந்தங்களில்.

  ஈஸ்வரன் என்ற பட்டம் மூன்று பேர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. பரமேஸ்வரன், இராவனேஸ்வரன், சனீஸ்வரன், இம்மூவரில் எல்லாம் வல்ல இறைவனான பரமேஸ்வரனுக்கு அடுத்தபடியா  மக்கள் பயபக்தியுடன் தொழும் இறைவன் சனீஸ்வரன் தான்.

அஷ்டோத்திரத்தில் சில விஷேசமாக நமக்கு தெரிந்த்து என்னவென்றால், சனீஸ்வரன் மிக நல்லவர் என்றும் அவர் யாருக்கும் கஷ்ட்த்தை கொடுப்பதில்லை. மாறாக நன்மையே செய்கின்றார் என்று தோன்றுகிறது.
ஆனால் நடைமுறை மாறுபட்ட்தாக தோன்றுகிறது. அஷ்டோத்திரத்தில் சனீஸ்வராய, சாந்தாய, சர்வ பீஷ்டபிரதாய, சரண்யாய, வரேன்யாய, சர்வேசாய, சௌம்யாய, கரவந்தியாய், சுந்தராயாய, மந்தாய, மந்த சேஷ்டாய மஹனீய குணாத்மனே என்று போற்றப்படுகிறார்.

சனீஸ்வராய       = ஏ சனீஸ்வரனே
சாந்தாய           =  சாந்த சுபாவமுள்ளவனே 
                                                                                                                                                     சர்வபீஷ்பிரதாய= மனதில் தோன்றும்         எண்ணங்களைபூர்த்திசெய்பவனே                                                                     சரன்யா  = தன்னை சரண்னடந்தவர்களை காப்பாறும் ஈஸ்வரனே
வரேன்யாய       = கேட்ட வரங்களை அளிப்பவனே                              சர்வேசாய  = கிரகங்களுக்கெல்லாம் பிரதானமானவனே                                     சௌம்யாய        = கோபம் இல்லாத குண்ம கொண்டவனே                                     சுரவந்திய   = தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவனே                                                      சுந்த்ராயாய        = பேரழகுடையவனே                                                                   மந்தாய     = எதையும் கவனமாக, காரியங்கள் ஆற்றுபவனே    மந்தசேஷ்டா = துன்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அருள்பவரே        மகனீய குணாத்மனே= போற்றத்தக்க குணங்களை உடையவரே

என்று அஷ்டோத்திரத்தில் ச்னீஸ்வரனின் போற்றத்தக்க குணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் நலம். ச்னீஸ்வரனால் யாருக்கும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.மாறாக காலத்தை உணரச்செய்வதில் அவருக்கு நிகர் அவரே.

உயர்ந்த மனிதர்களை, தன்னலமற்ற சீலர்களை, சுயநலமற்ற சமூக சீர்திருத்த வாதிகளை, வலக்கை செய்ய இடக்கை அறியா மனம் கொண்டவர்களை, பார் போற்றும் சீமான்களை, கொள்கை பிடிப்புடன் லட்சியத்தை நோக்கி பீடுநடை போடும் அகிம்சாவாதிகளை நமன்கெல்லாம் தந்தருளும் ச்னீஸ்வரபகவான் பிரபஞ்சத்தில் வாயுத்த்துவத்தின் ஜீவகோளாகி நன்மை தீமைகளை அருளுகின்றார் என்பதை உணராதவர்களே கிடையாது.

கலியுகத்தில் கர்மத்தையும் தர்மத்தையும் தன் கையில் கொண்டு உலகில் உள்ள உயிரிணங்கள் அணைத்து கர்மாவையும் நிர்ணயித்து மேன்மை அடையச்செய்கிறார். சனி நின்ற வீட்டிற்க்கு பத்தாமிட்த்த்திபதியே நாம் கைக்கொள்ளும் நாம் ஜீவிக்க நமக்கு கடவுள் தரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதில் சிறப்புறுவது எப்படி? அவ்வாறு சனி நின்ற வீட்டிற்க்கு பத்துக்குடையவர், வலுப்பெற்வதும், சுபக்கிரகங்களால் பார்க்கப்படுவதும் யோகாதிபதிகளால் பார்க்க அல்லது சேர்ந்தே இருந்தால் நாம் கைக்கொள்ளும் ஜீவகர்மா நல்ல புகழோடும், பொறிக்கப்படவேண்டும்.

காலபுருஷ த்த்துவத்தில் 10,11 ஆம் இட்த்தின் அதிபதியுமான சனீஸ்வரன், துலாத்தில் உச்சமடைவதும் அதாவது மகரத்துக்கு 10லும், கும்பத்திற்க்கு 9லும் உச்சமடைவதால் கர்ம, தர்மாதிபதி என்று தனித்துவத்தின் மூலம் கர்மத்தை தர்மத்தால் நிலைநிறுத்து என்று உலக மக்களை ஜீவன்களை காலத்தால் அழியாத புகழுக்கு உலகமே போற்றும் படியாக வணங்கி வாழ்த்தும் நிலையை அளிக்கின்றார். நவக்கிரக்ச் சுழற்சிக்கு முதன்மையை வழங்குகின்றார். ஜீவாத்தமாக்கள், ஜீவ கர்மா இவையிரண்டுக்கும் பாலம் அமைப்பவரும் சனிபகவானே.

தர்மா, அர்த்தா, காமா, மோட்சா ஜோதிட சாஸ்த்திரத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வினைகள் நல்லாரையும், பொல்லாரையும், தர்மத்தையும், அதர்மத்தையும் இன்ம்பிரித்துக்காட்டும் இயல்புகளைக் கொண்ட்தாக நம்முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.

தர்மதிரிகோனம்= அறநெறியையும், ஒழுக்கத்தையும், இறையாண்மையையும், பகுத்தறிவு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக்கொள்ளல், தர்மத்தையும்,தயாள குணத்தையும் போதிப்பது மட்டுமல்லாமல்,இய்ற்க்கை இவர்களுக்கு நிலையான புகழையும் கௌரவத்தையும், அளித்து மேன்மை படுத்துகின்றது. மேலும் ஆன்மாவின் முந்தைய நிலைகளையும் வரும் ஜென்மத்தையும் வாழ்வியலோடு ஒத்து பயண்பெறுவதை தர்மத்திரிகோணம் விளக்குகிறது.

அர்த்த்திரிகோணம்= வாழ்வில் கர்ம்மேன்மையை அளித்து அதனால் பெறும் அனைத்து சுகங்களையும் பெறச்செய்கிறது. அவ்வாறு கிடைக்க்கூடிய சுக போகங்கள் எந்த மார்க்கமாக கிடைக்கப்பெறுகிறது என்பதையும், அர்த்த திரிகோணம் நமக்கு வழங்குகிறது. இதில் பொருள்மேன்மை, ம்ற்றும் கர்ம்மேன்மையை விளக்குவதாக அமைகிறது.

காமத்திரிகோணம்= வாழ்வில் முயற்ச்சிகளுக்கு வழிகாட்டுதலும் துணை நிற்க்க்க்கூடிய நல்ல மணிதர்களையும் முயற்ச்சிகளில் நாம் அடையும் வெற்றியையும், நமக்களீக்கும் காமத்திரிகோணம் நம்மை எந்த அளவுக்கு விட்டு கொடுத்து வாழும் மணமுடையவர்கள் என்பதையும் தன்னைப் போன்று எல்லோரையும் சம்மாக பாவிக்கும் மனோநிலையையும், நாம் சார்ந்துள்ளவர்களையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் முற்ப்போக்கு அல்லது பிற்ப்போக்கான வாழ்வினை அளிப்பது கானத்திரிகோணம்.

மோட்சத்திரிகோணம்= இதன் நிலை எல்லாவற்றையும் விட மேலானது. என்று கொள்ளல் வேண்டும். பாக்கியவான்கள் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணங்குவதற்க்கும், உறிய மணிதர்களை அடையாளம் காட்டுவது மோட்சத்திரிகோண்மே. தன்னிடம் உள்ளதை தாரைவார்க்கச் செய்வதும் தனக்கென்றதனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு த்த்து வார்த்தங்களை சிறப்புறச்செய்வது மோட்சத்திரிகோண்மாகும்.

இவற்றில் அர்த்த்த்திரிகோணமும், காமத்திரிகோணமும், சனீஸ்வரனால் ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகின்றது. இல்லறமும், இல்லறத்தினால் ஏற்படும் நல்லறமும்,மனிதனுக்கு வழங்குவதோடு, கர்ம்மேன்மையை கொடுத்து தர்மத்தின் நிலைதனை ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சனீஸ்வரனால் வழங்கப்படுவதும், பின் மோச்சத்தின் கதவுகள் திறக்கப்பட்டு மறுஜென்மத்தை தவிர்க்கும் பெறும் பேரினை சனீஸ்வரன் தந்தருளுகின்றார்.

பகலுக்குச்சூரியன் ராஜா என்றால் இரவுக்கு சனிஸ்வரனே அதிபதியாகிறார். உறவுக்கு சந்திரனும், உரிமைக்கு செவ்வாயும், இயக்கத்திற்கு புதனும், மோகத்திற்க்கு சுக்கிரனும், உலகத்தை நோக்கும் குருவும், அறிவிற்க்கு சூரியனும் புதனும், ஆற்றலுக்கு குருவும், உதவிக்கு சந்திரன், உன்மைக்கு குருவும், பாசத்திற்க்கு சுக்கிரனும், பகட்டுக்கு புதனும், பன்புக்கு சனியும், நேர்மைக்கு குருவும், நியாயத்திற்க்கு சனியும், யோகத்திற்க்கு இராகுவும், ஆன்ம யோகத்திற்க்கு கேதுவும், வாழ்வில் பங்கு கொள்கிறார்கள். இருப்பினும் தந்தைக்கு காரகனான சூரியன் பகலில் பிறந்தவர்களுக்கு மட்டுமே. இரவில் பிறந்தவர்களுக்கு தகப்பன் காரகன் சனீஸ்வரனே. பகலில் பிறந்த குழந்தைகளுக்கு தாயார் காரகன் சுக்கிரன், இரவில் பிறந்தவர்களுக்கு ச்ந்திரன் தாயார்காரகன் ஆவார்கள்.

உலகில் பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்தவர்களும், மகரம் கும்பம் ராசி லக்கனத்தில் பிறந்தவர்களும், சனி லக்கனத்தில் இருக்க பிறந்தவர்களும், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சனி பார்க்க பிறந்தவர்கள், சனிதசையை கடந்தவர்களுக்கு அடுத்த ஜென்மா கிடையாது. இந்த ஜென்மத்தில் எல்லா வினைகளையும் அனுபவித்து இறைவனடி சாரும்.
அதேபோன்று சனிஆதிக்கம் உடையவர்கள் தகப்பன் உடன் பிறந்தோறால் ஆதரிக்கப்படுவதும் வயதான காலங்களில் தன் உடன் பிறந்தவ்வர்களின் குழந்தைகளால் பராமரிக்கப்படுவதும் அனுபவத்தில் கானமுடிகிறது. சுக்கிரனின் ஆதிக்கம் உடையவர்கள் சிற்றன்னையால் ஆதரிக்கபடுவதும் ஆய்வில் அறிகமுடிகிறது.
சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசத்தால் அதிகமாக பாதிக்க்ப்படுவது தெரிகிறது. இவர்கள் உறவைவிட்டு மனதை விலக்கி பழ்கத்தெரிதல் வேண்டும். பாசத்தில் முழ்கி பின்பு வேதனைபடுவதை குறைப்பதற்க்கு பொதுவாழ்வில் நாட்டம் செலுத்துவது நன்மை தரும். சனிபகவான் தன்னலமற்ற தியாக சொரூபம். அவரின் ஆதிக்கம் அர்ப்பனிப்பே என்பதை அற்ந்து எல்ல உயிர்களீட்த்தும் அன்புசெய்தால் சனிபகவானின் அருளை பெறலாம்.

No comments:

Post a Comment